1 லட்சத்துக்கும் அதிகமானோர் யூஸ் பண்றாங்க- இந்த செயலியை உடனே டெலிட் பண்ணுங்க: அனைத்தையும் திருடுறாங்க!

|

1 லட்சத்துக்கும் அதிகமான நிறுவல்களை கொண்ட ஆண்ட்ராய்டு செயலி தங்கள் பேஸ்புக் தகவலை திருடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை உடனடியாக நீக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயலி குறித்த முழு தகவலை பார்க்கலாம்.

கார்ட்டூனிஃபையர் செயலி

கார்ட்டூனிஃபையர் செயலி

ஒரு லட்சம் பயனர்களால் நிறுவப்பட்டிருக்கும் கார்ட்டூனிஃபையர் செயலி பேஸ்புக் நற்சான்றிதழ்கலை திருடுவதாக ப்ராடியோவின் புதிய அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. 'Craftsart Cartoon Photo Tools' என்ற செயலி மூலம் அனைத்து தகவல்களும் திருடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் எந்த ஒரு பயன்பாட்டையும் நிறுவும் முன்பு பயனர்கள் ஆப் டெவலப்பர்களை சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையை விட வலிமையானது

கூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையை விட வலிமையானது

டெலப்பர்களுக்கான ஆப்பிளின் ஆப் ஸ்டோர் கொள்கையானது கூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையை விட வலிமையானவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிரக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களால் நிறுவப்பட்டிருக்கும் பாதுகாப்பானது போல் தோற்றமளிக்கும் செயலிகள் தீங்கிளைக்கும் பயன்பாடுகளை கொண்டிருப்பதாக தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 1,00,000 பயனர்களால் நிறுவப்பட்டிருக்கும் கார்ட்டூனிஃபையர் செயலி, பேஸ்புக் நற்சான்றிதழ்களை திருடுவதாக பிராடியோவின் புதிய அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இனி பதிவிறக்கம் செய்ய முடியாது

இனி பதிவிறக்கம் செய்ய முடியாது

'Craftsart Cartoon Photo Tools' என்ற பெயரில் இயங்கும் ஆப்ஸ் இனி பதிவிறக்கம் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் செய்தித் தொடர்பாளர், தீங்கிழைக்கும் பயன்பாடு என்று அழைக்கப்படும் செயலி, ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், தங்கள் ஸ்மார்ட்போன்களில் பயன்பாட்டை நிறுவிய பயனர்கள் உடனடியாக அதை நீக்க வேண்டும் என எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

ட்ரோஜனைக் கண்டுபிடித்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள்

ட்ரோஜனைக் கண்டுபிடித்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள்

இந்த பயன்பாடானது ஒரு புகைப்படத்தை பதிவேற்ற அதை கார்ட்டூன் ரெண்டரிங்காக மாற்ற அனுமதிக்கிறது. கார்டூனிஃபையர் செயலியில் கார்ட்டூனிஃபையர் செயலியில் FaceStealer என்ற ட்ரோஜனைக் கண்டுபிடித்தது பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொபைல் பாதுகாப்பு நிறுவனமான ப்ராடியோ ஆகும். பயன்பாட்டை லாக்இன் செய்வதற்கு முன் பேஸ்புக் உள்நுழைய வேண்டிய ட்ரோஜன் திரையை காட்டும். பேஸ்புக் மூலம் உள்நுழைக என்ற விருப்பத்தை தேர்வு செய்தே உள் நுழைய வேண்டும்.

பேஸ்புக் மூலம் லாக் இன் செய்யாலம்

பேஸ்புக் மூலம் லாக் இன் செய்யாலம்

இந்த செயலி நம் கணக்கை தொடர பேஸ்புக் மூலம் லாக் இன் செய்யாலம் அந்த தகவல்களை மற்றொரு சர்வருக்கு மாற்றி விடுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி நாம் கார்ட்டூனாக மாற்றுவதற்கு அப்லோட் செய்யப்படும் புகைப்படங்களும் திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பயனர்கள் தங்கள் நற்சான்றிதழ்கள் உள்ளிட்ட உடன் பயன்பாடு இதை மற்ற சர்வருக்கு அனுப்பி விடுகிறது. அதன்பின் மோசடி செய்பவர்கள் இதை சேகரித்து விடுகின்றனர்.

சாதனத்தை பாதுகாப்பாக கையாள வேண்டும்

சாதனத்தை பாதுகாப்பாக கையாள வேண்டும்

பயன்பாட்டை திறந்து பயன்படுத்தும் போது பயனர்கள் முதற்கட்டமாக தங்கள் பேஸ்புக் மூலம் உள்நுழையலாம். பின் தங்கள் புகைப்படத்தை கிராஃபிக்காக மாற்றுவதற்கு புகைப்படங்களை பதிவேற்றுவது போன்ற வரையறுக்கப்பட்ட அம்சங்களுக்கான அணுகல் காட்டப்படும். பின் கிராஃபிக் செய்யப்பட்ட படத்தை பதிவிறக்கம் செய்ய அல்லது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. ஸ்மார்ட்போன் பயனர்கள் குறிப்பாக ஆண்ட்ராய்டு சாதனத்தை பயன்படுத்துபவர்கள் தங்கள் சாதனங்களில் இதுபோன்ற பயன்பாடுகளை நிறுவும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதேபோல் குறிப்பாக பயோமெட்ரிக் தரவு போன்ற முக்கிய தகவல்களை கேட்கும் பயன்பாடுகளை நிறுவி பயன்படுத்துவதில் கூடுதல் கவனம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு பாதுகாப்பற்ற செயலி

மற்றொரு பாதுகாப்பற்ற செயலி

அதேபோல் சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, சமூக வலைத்தளங்களில் பயனர்களின் தகவல்களை திருடும் புதிய மால்வேர் ஒன்று மைக்ரோசாப்ட் ஸ்டோர் தளத்தில் இருந்து பரவி வருவதாக தகவல் வெளிவந்தது. அதாவது இந்த புதிய மால்வேர் பெயர் எலக்ட்ரான் பாட் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த மால்வேர் கூகுள், சவுண்ட்கிளவுட், பேஸ்புக், யூடியூப் கணக்குகளில் இருந்து அவர்களுடைய தரவுகளை திருடுவதோடு மட்டும் இல்லாமல், அந்த கணக்குகளின் கட்டுப்பாடுகளையும் எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

ஏணைய கணினிகளை தாக்கியுள்ளதாக தகவல்

ஏணைய கணினிகளை தாக்கியுள்ளதாக தகவல்

மேலும் இதுதொடர்பாக செக்பாயிண்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வ ஸ்டோர் தளத்தில் இருந்து பரவி வரும் இந்த மால்வேர் 5000-க்கும் மேற்பட்ட கணினிகளை தாக்கியுள்ளதாகவும், பின்பு பயனர்களின் சமூக வலைதள கணக்குகளை கட்டுப்பாட்டில் எடுத்து, அந்த கணக்குகள் மூலம் அடுத்தவர்களின் பக்கங்களை லைக் செய்தல், கமெண்ட் செய்தல் உள்ளிட்ட செய்பாடுகளை செய்தவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: indiatoday.in

Best Mobiles in India

English summary
Over 1 Lakh Installs: Pradeo Suggests to delete this Cartoonfire App- Stealing Facebook Credentials

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X