வெர்சுவல் உலகில் 7வயது ரோப்லாக்ஸ் அவதாரை மானபங்கம் செய்த சக ப்ளேயர்கள்!
மேலும் அந்த அனிமேசனில் தெளிவாக ஆண் பிறப்புறுப்பு காட்டப்படுவது புகைப்படங்கள் மூலம் தெரிகிறது.
நார்த் கரோலினாவை சேர்ந்த 7வயது குழந்தைக்கு தாயான ஏம்பர் பீட்டர்சன், கேமில் தனது குழந்தையின் அவதாரை, மூன்று சக ப்ளேயர்கள் சேர்ந்து ' கட்டயமாக கூட்டு பலாத்காரம்' செய்ய கொடுரமான சம்பவத்தை பதிவிட்டுள்ளார்.

அவர் பகிரந்துள்ள, மனதை உலுக்கக்கூடிய ஸ்கிரீன்சாட்டுகளில், அக்குழந்தையின் அவதாரை இரு ஆண் கதாபாத்திரங்கள் தாக்குவது போலவும், அதற்கு முன்பாக மூன்றாவது பெண் கதாபாத்திரம் அவள் மீது குதிப்பது போலவும் காட்டப்படுகிறது.

பீட்டர்சன்
மேலும் அந்த அனிமேசனில் தெளிவாக ஆண் பிறப்புறுப்பு காட்டப்படுவது புகைப்படங்கள் மூலம் தெரிகிறது.பீட்டர்சன் தற்போது அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழ்நதைகளின் கருவியில் இருந்து அந்த செயலியை நீக்க வேண்டும் எனவும், மற்றவற்றை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

64 மில்லியன்
மாதம் 64 மில்லியன் ப்ளேயர்களால் விளையாடப்படும் இந்த மைன்கிராப்ட் ஸ்டைல் கேம் குழந்தைகளை கவர்ந்திழுக்கிறது. அதுவும் 13 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு சில தடைகளும் உள்ளன. ஆனால் அதிகரித்து வரும் சமீபத்திய சம்பவங்கள் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை மணியாக உள்ளது.
தற்போது பீட்டர்சன் கூறுகையில், பல்வேறு நிலைகளில் வரம்புமீறி அதிர்ச்சியடையச்செய்தது என்ற எண்ணத்தில் அவள் இருக்கும் நிலையில், அது எப்படி தனது மகளின் மனநிலையை பாதித்திருக்கும் என்ற கவலையில் உள்ளார்.
'முதலில் நான் என்ன பார்க்கிறேன் என்பதை நம்பவே முடியவில்லை' என தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார் பீட்டர்சன்.

24 மணிநேரமும்
' எனது செல்ல மற்றும் அப்பாவி மகளின் அவதார் கொடூரமாக விளையாட்டு மைதானத்தில் இரு ஆண் கதாபாத்திரங்களால் மானபங்கம் செய்யப்பட்டது. அப்போது ஒரு பெண் பார்வையாளர் அங்கு சென்று, கடைசியாக அவளின் உடல் மீது குதித்தார். பின்னர் 3 கதாபாத்திரங்களும், எனது மகளின் அவதாரை விளையாட்டு மைதானத்தில் தலைகுப்புற அப்படியே விட்டுவிட்டு ஓடி விட்டன' என்கிறார் பீட்டர்சன்.
24 மணிநேரமும் இது போன்ற தவறானவற்றை நீக்குவதற்காக இருக்கும் கேம் மதிப்பீட்டாளர்களுக்கு மத்தியில், இது போன்ற அதிர்ச்சியளிக்கும் சம்பவம் எப்படி தப்பியது என தெரியவில்லை. தற்போது பீட்டர்சன் மற்றும் அவரின் கணவர் ' அதிகபட்ச தனியுரிமை' செட்டிங்கஸ்-ஐ மாற்றியுள்ளனர்.

ரோப்லாக்ஸ்
இது குறிந்து கருத்து தெரிவித்துள்ள ரோப்லாக்ஸ், 'தவறான கதாபாத்திரங்களை' முழு முயற்சியெடுத்து நீக்கி வருவதாக கூறியுள்ளது. அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'ரோப்லாக்ஸ் சமூக கொள்கைகள் மற்றும் நடத்தை விதிகள் திசைதிருப்பப்பட்டுவிட்டதை நாங்கள் வெறுப்புடன் தெரிந்துகொண்டோம்' என கூறியுள்ளார்.
' இந்த தவறான கதாபாத்திரம் எப்படி குற்றச்செயல்களை உருவாக்கியது என்பதை நாங்கள் கண்டறிந்து விட்டோம். எதிர்காலத்தில் இனி அதுபோல நடக்காமல் இருக்கு கூடுதல் பாதுகாவலர்களை சேர்த்துள்ளோம். மேலும் குற்றமிழைப்பவர்கள் கண்டறியப்பட்டு, இந்த தளத்திலிருந்து நிரந்திரமாக தடைசெய்யப்படுவர் மற்றும் அந்த கேமையும் தற்காலிகமாக முடக்கி விடுவோம்' என அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.

பொம்மைகள்
ஆனால் இந்த கேம் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பானவற்றை காண்பிப்பது இது முதல் முறை அல்ல. ஜூன் மாத துவக்கத்தில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த தாய் ஒருவர் ,தனது 6 வயது குழந்தையை ஆன்லைன் கேமில் 'செக்ஸ் ரூம்' அழைப்புவிடுத்ததாக கூறியுள்ளார். இதை பார்த்தவுடன் குழந்தையிடம் இருந்து அதை பறித்து, அந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகளை பதிவு செய்துள்ளார். அதில் பல்வேறு முப்பரிமாண அவதார்கள் பாலியல் செய்கைகளில் ஈடுபடுவது தெரிகிறது.
இந்த ஸ்கீரின்சாட்களை பேஸ்புக்கில் பதிவிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் பீட்டர்சன்.
தினமும் புதிதுபுதிதாக வரும் பொம்மைகள் மற்றும் இது போன்ற ஆன்லைன் கேம்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது பெற்றோர்களுக்கு மிக கடினமான விசயமாக இருக்கப்போகிறது.


Click it and Unblock the Notifications