Home
News

7 நாள் சார்ஜ்.. 22000mAh பேட்டரி.. 8D சரவுண்ட் 136dB ஸ்பீக்கர்.. இது என்ன போனா? இல்லை பவர் ஹவுஸ்ஸா?

யுக்கிடேல் (Oukitel) நிறுவனம் இப்போது புதிதாக யுக்கிடேல் WP33 ப்ரோ (Oukitel WP33 Pro) என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது ரக்டு ஸ்மார்ட்போன் வரிசையில் மிகவும் பிரத்தியேகமான சாதனமாக வெளிவந்துள்ளது. இதில் 22000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இந்த யுக்கிடேல் WP33 ப்ரோ (Oukitel WP33 Pro) ரக்டு ஸ்மார்ட்போன் சாதனம் 3 முக்கிய சிறப்பம்சங்களுடன் நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முதல் அம்சமாக இதன் ஸ்பீக்கர் இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் நிறுவனம் 136dB மல்டிமீடியா ஸ்பீக்கர் சாதனத்தை வழங்கியுள்ளது. இது 5W அவுட்புட்டை வழங்கும் திறனுடன் வருகிறது.

7 நாள் சார்ஜ்.. 22000mAh பேட்டரி.. 8D சரவுண்ட் 136dB ஸ்பீக்கர்..

இது உங்கள் கேமிங், மூவீஸ் மற்றும் பாடல் கேட்கும் ஆடியோ அனுபவத்தை இண்டோர் மட்டுமின்றி அவுட்டோர்களிலும் திறம்பட செயல்படுகிறது. காரணம் இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள ஸ்பீக்கர் டிவைஸ் 8D சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தபடியாக, இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் மற்றொரு முக்கியமான அம்சம், இதில் வழங்கப்பட்டுள்ள 22000mAh பேட்டரி ஆகும். இது 80 மணி நேர மியூசிக் பிளேநேரத்தை எந்தவித தடையுமின்றி வழங்குகிறது. ப்ளூடூத் ஸ்பீக்கர்களை கூட இந்த மிஞ்சிவிட்டது என்றே கூறலாம். இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 33W பாஸ்ட் சார்ஜிங் (fast charging) ஆதரவை கொண்டுள்ளது மற்றும் 18W பாஸ்ட் ரிவர்ஸ் சார்ஜிங் (fast reverse charging) அம்சத்தையும் கொண்டுள்ளது.

ஒரே சார்ஜில் இது 7 நாள் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது. இது இப்போது சந்தையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஐபோன் 15 (iPhone 15) சாதனத்தை 9 முறை ரிவர்ஸ் சார்ஜிங் மூலம் சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய Oukitel WP33 Pro ஸ்மார்ட்போனின் மற்றொரு சிறப்பம்சமாக இதன் சிப்செட் கூறப்படுகிறது.

7 நாள் சார்ஜ்.. 22000mAh பேட்டரி.. 8D சரவுண்ட் 136dB ஸ்பீக்கர்..

இது மீடியாடெக் டைமென்சிட்டி 6100+ 5ஜி (MediaTek Dimensity 6100+ 5G SoC) சிப்செட் உடன் 8ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 256ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் (Storage) உடன் வருகிறது. இந்த புதிய Oukitel WP33 Pro ஸ்மார்ட்போன் 6.6" இன்ச் FHD+ IPS டிஸ்பிளேவுடன் (Display) வருகிறது. இந்த டிஸ்பிளே 60Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate), 450 நீட்ஸ் பிரைட்னஸ் (450nits brightness) உடன் வருகிறது.

WP33 Pro ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இந்த சாதனம் 64MP சோனி IMX686 (64MP Sony IMX686) பிரைமரி சென்சார் உடன், 20MP IMX350 நைட் விஷன் கேமரா, 32MP IMX616 முன்பக்க செல்பி கேமரா போன்றவற்றை கொண்டுள்ளது. இதன் உறுதி பற்றி கவலைகொள்ள வேண்டிய அவசியமே இல்லை. இது IP68, IP69K, மற்றும் MIL-STD-810H ஸ்டாண்டர்ட் தரத்தை பெற்றுள்ளது.

இது வாட்டர், டஸ்ட் மற்றும் ஷாக் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்புடன் வருகிறது. கூடுதல் பாதுகாப்பாக இது கார்னிங் கொரில்லா கிளாஸ் ஸ்கிரீன் பாதுகாப்புடன் வருகிறது. இது ஜனவரி 13ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இது இப்போது ரூ.24,778 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oukitel WP33 Pro Rugged 5G Smartphone With 22000mAh Battery and 138dB Speaker
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X