Home
News

Oukitel WP200 Pro இது போனா இல்லை வேற எதுவுமா? 72GB ரேம்.. காதுல வச்சா Earbuds .. கையில வச்சா Smartwatch-ஆ?

யுக்கிடேல் (Oukitel) நிறுவனம் பல ஆண்டுகளாக ரக்டு ஸ்மார்ட்போன் (rugged smartphone) சாதனங்களை உருவாக்கி வருகிறது. இதுவரை பல விதவிதமான போன்களை அறிமுகம் செய்த நிறுவனம் இப்போது, இது போனா இல்லை வேற எதுவுமா? என்று நாமே ஆச்சரியப்படும் வகையில் அதன் புதிய படைப்பான யுக்கிடேல் WP200 ப்ரோ (Oukitel WP200 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. உலகத்தின் முதல் 72GB ரேம் (RAM) கொண்ட ரஃடு போன் (rugged phone) இதான். இந்த போனுடன் இயர்பட்ஸ் (earbuds) மற்றும் ஸ்மார்ட்வாட்ச் (smartwatch) ஆகியவற்றை Oukitel இன்பில்ட்டாக வழங்கியுள்ளது.

யுக்கிடேல் WP200 ப்ரோ ரக்டு ஸ்மார்ட்போன் (Oukitel WP200 Pro Rugged Smartphone) சாதனத்தை நீங்கள் மொத்தமாக பார்த்தால், இதுவொரு மிரட்டலான, முரட்டு தனமான ரக்டு ஸ்மார்ட்போன் (stunning rugged smartphone) ஆகும். அதுவே, இதில் உள்ள ஒரு பகுதியை மட்டும் நீங்கள் பிரித்தெடுத்தால், இது உங்கள் காதுகளுக்கும் கட்சிதமாக பொருந்தும் குட்டி சைஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் (wireless earbuds) ஆகும்.

Oukitel WP200 Pro இது போனா இல்லை வேற எதுவுமா? 72GB ரேம்..

Oukitel WP200 Pro இது போனா இல்லை வேற எதுவுமா? உலகின் முதல் 72GB ரேம் ரக்டு போன்:

அதே பகுதியை, உங்கள் காதில் மாட்டாமல், அதை உங்கள் கையில் மாட்டினால், அட அதான் சார் உங்களுடைய ஸ்மார்ட்வாட்ச் (smartwatch). இப்படி ஒரு சாதனம் பல சாதனமாக உருமாறி, வெவ்வேரு விதமான பயன்பாட்டை வழங்குவதை இதற்கு முன்பு நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உலகத்தில் யாருமே இப்படி ஒரு ரக்டு ஸ்மார்ட்போன் சாதனத்தை பார்த்திருக்கவே வாய்ப்பில்லை. இந்த Oukitel WP200 Pro ஸ்மார்ட்போன் சாதனம் ஒரே டிவைஸிலிருந்து, பல அவதாரங்களை எடுத்து நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

இந்த புதிய யுக்கிடேல் WP200 ப்ரோ (Oukitel WP200 Pro) ஸ்மார்ட்போனில் இன்னும் என்னென்ன அம்சங்கள் நிறைந்துள்ளது என்பதை பார்க்கலாம். இந்த சாதனத்தை நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற CES 2025 நிகழ்வில் அறிமுகம் செய்தது. இந்த சாதனம் தான் உலகின் முதல் 24GB ரேம் (RAM) + 1TB ஸ்டோரேஜ் (storage) அம்சம் கொண்ட, முதல் ரக்டு ஸ்மார்ட்போன் (World's first 24GB RAM rugged smartphone) சாதனமாகும்.

யுக்கிடேல் WP200 ப்ரோ (Oukitel WP200 Pro):

இந்த Oukitel WP200 Pro ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 8200 சிப்செட் (MediaTek Dimensity 8200 SoC) உடன் வருகிறது. இந்த போனில் வழங்கப்பட்டுள்ள 24GB ரேம் அம்சத்தை நீங்கள் விரும்பினால் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த போனை யுக்கிடேல் நிறுவனம் 72GB ரேம் (72GB RAM) வரையிலான ஆதரவை ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆம், உங்கள் விருப்பத்திற்கேற்ப ரேம் அளவை 72GB வரை உங்களால் அதிகரித்துக்கொள்ள (up to 72GB RAM expandable) முடியும்.

இந்த போனில் இருக்கும் 72GB ரேம் அம்சங்களை தாண்டி, மிகவும் தனித்துவமாக பார்க்கப்படுவது, இந்த போனில் இருக்கும் ரியர் கேமராவிற்கு (rear camera) இடையில் உள்ள இரண்டாம் டிஸ்பிளே போல் காட்சியளிக்கும் சிறிய கருவி தான். இது தான் இந்த போனின் ஹைலைட் ஸ்பெஷலிட்டியாக அமைந்துள்ளது. இந்த சிறிய டிஸ்பிளே போன்ற கருவியை (small display like device) நீங்கள் போனில் இருந்து பிரித்தெடுக்கலாம்.

காதுல வச்சா Earbuds .. கையில வச்சா Smartwatch-ஆ? பல அவதாரம் எடுக்கும் ஒரே சூப்பர் போன்:

பிரித்தெடுத்த பாகத்தை உங்கள் காதில் வைத்தால், அதை நீங்கள் ஒரு இயர்பட்ஸ் (Mono earbuds) கருவியாக பயன்படுத்தலாம். ஒருவேளை இயர்பட்ஸ் ஆக பயன்படுத்த உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், இந்த போனுடன் வரும் வாட்ச் ஸ்ட்ராப்பில் (watch strap) இந்த கருவியை ஃபிக்ஸ் (fix) செய்து, அதை ஒரு ஸ்மார்ட்வாட்ச் (smartwatch) போல நீங்கள் பயன்படுத்தலாம். இப்படி இந்த போனில் உள்ள ஒரு சிறிய பாகத்தை நிறுவனம் பன்முக சாதனமாக மாற்றியுள்ளது.

இந்த Oukitel WP200 Pro ஸ்மார்ட்போன் சாதனம் 6.7" இன்ச் அளவு கொண்ட AMOLED டிஸ்பிளேவுடன் (display) வருகிறது. இது 108MP ரியர் கேமராவுடன் (108MP rear camera) வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது 22000mAh திறன் கொண்ட மெகா சைஸ் பேட்டரி (Mega size battery) உடன் வருகிறது. இதன் விற்பனை இந்தியாவில் பிப்ரவரி மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Oukitel WP200 Pro விலை ரூ. 20,000 முதல் ரூ. 29,000 விலைக்குள் இருக்குமென்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oukitel WP200 Pro Rugged Smartphone With 24GB to 72GB RAM 1TB Storage Converts Into Earbuds Smartwatch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X