Home
News

22000mah பேட்டரி.. 12GB RAM.. தூக்கி எறிந்தால் கூட உடையவே உடையாத மிகவும் உறுதியான போன் இது தான்.. என்ன மாடல்?

ஓகிடெல் (Oukitel) நிறுவனம் கடந்த ஜூன் மாதம் ஓகிடெல் டபுள்யூபி19 (Oukitel WP19) என்ற மிகவும் உறுதியான மற்றும் கரடுமுரடான ரஃடு ஸ்மார்ட்போனை வெளியிட்டது. மேலும் இந்த பிராண்ட் அடுத்த மாதம் இந்த சீரிஸின் ப்ரோ மாடலை அறிமுகப்படுத்தும் என்று அறிவித்துள்ளது.

இந்த வரவிருக்கும் புதிய ரஃடு ஸ்மார்ட்போன் மாடல் ஓகிடெல் டபுள்யூபி19 ப்ரோ (Oukitel WP19 Pro) சாதனம் வரும் டிசம்பர் 12 அன்று அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு முன்பாக ஓகிடெல் டபுள்யூபி19 ப்ரோ (Oukitel WP19 Pro) பற்றிய சில விவரங்களைப் பெற்றுள்ளோம். இந்த சாதனத்தின் புகைப்படங்கள் உட்பட அது என்ன வழங்குகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.

22000mah பேட்டரி.. 12GB RAM.. உடையவே உடையாத மிகவும் உறுதியான போன்..

ஓகிடெல் டபுள்யூபி19 ப்ரோ (Oukitel WP19 Pro) ஆனது ஹீலியோ ஜி99 (Helio G99 SoC) சிப்செட் மூலம் இயக்கப்படும். இது 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ்ஜை கொண்டுள்ளது. இதில் 2TB வரை விரிவாக்கக்கூடிய எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் அம்சமும் கிடைக்கிறது. இது ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட இயங்குதளத்துடன் வருகிறது.

ஓகிடெல் டபுள்யூபி19 ப்ரோ (Oukitel WP19 Pro):

இது எத்தனை OS பதிப்பு மேம்படுத்தல்களைப் பெறும் என்பது குறித்த விபரங்களை பற்றின தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஓகிடெல் டபுள்யூபி19 ப்ரோ (Oukitel WP19 Pro) ஆனது 6.8' இன்ச் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் கூடிய முழு எச்டி பிளஸ் எல்சிடி (FullHD+ LCD) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ஓகிடெல் டபுள்யூபி19 ப்ரோ 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்தை கொண்டுள்ளது. ஓகிடெல் டபுள்யூபி19 (WP19) மாடல் 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்தை விட ப்ரோ மாடலின் டிஸ்பிளே தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் 1,000mAh அதிகரித்துள்ளது. அதாவது WP19 Pro ஒரு பெரிய 22,000mAh பேட்டரி செல்லை பேக் செய்துள்ளது. இதன் சார்ஜிங் வேகம் 33W இல் அப்படியே உள்ளது.

ஓகிடெல் டபுள்யூபி19 ப்ரோ கேமரா (Oukitel WP19 Pro Camera):

இந்த ரஃடு கரடுமுரடான ஸ்மார்ட்போன் நான்கு கேமராக்களைக் கொண்டிருக்கும். இது 64MP பிரைமரி சாம்சங் சென்சார், 20MP நைட் விஷன் சோனி சென்சார், 2MP மேக்ரோ மற்றும் 16MP செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. ஓகிடெல் டபுள்யூபி19 ப்ரோ (WP19 Pro) மிகவும் பாதுகாப்பான மற்றும் கடினமான 22,000 mAh எக்ஸ்ப்ளோரர்+ என்ற டேக் லைன் உடன் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் IP68, IP69K மற்றும் MIL-STD-810H சான்றிதழ்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 29 மிமீ தடிமன் மற்றும் 592.3 கிராம் எடையுடன் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஓகிடெல் டபுள்யூபி19 ப்ரோ ஸ்மார்ட்போனின் அறிமுகம் அடுத்த மாதம் டிசம்பர் 12 ஆம் தேதியில் நிகழும் என்பதனால், கூடுதல் தகவலை நாம் எதிர்பார்க்கலாம்.

ஓகிடெல் டபுள்யூபி19 ப்ரோ (Oukitel WP19 Pro) ஸ்மார்ட் போனின் விலை மற்றும் கூடுதல் சிறப்பம்ச தகவல்களை நாம் விரைவில் கலெக்ட் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த ஸ்மார்ட் போன் எந்த தளம் வழியாக விற்பனைக்கு கிடைக்கும் என்பதை பற்றி விரைவில் அறிந்துகொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oukitel WP19 Pro will be powered by the Helio G99 SoC and 22000mah battery 12GB RAM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X