ஆத்தாடி என்னாது இது.. 11 இன்ச் 2K டிஸ்பிளே.. 30GB ரேம்.. 1TB ஸ்டோரேஜ் உடன் டேப்லெட்-ஆ! என்ன மாடல்? என்ன விலை?
ஓயூகிடெல் (OUKITEL), இப்போது 11" இன்ச் டிஸ்பிளேவுடன், 30GB ரேம், 1TB ஸ்டோரேஜ், 8800mAh பேட்டரி, சோனி கேமராவுடன் புதிய ஓயூகிடெல் OT8 ஸ்மார்ட் டேப்லெட் (OUKITEL OT8 Smart Tablet) என்ற டேப்லெட்டை (Tablet) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஓயூகிடெல் (OUKITEL) மிகவும் சக்தி வாய்ந்த தயாரிப்பு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், இப்போது நிறுவனம் மிகவும் உறுதியான மற்றும் அதீத தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஒரு சூப்பர் டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதை நிறுவனம் ஓயூகிடெல் OT8 ஸ்மார்ட் டேப்லெட் (OUKITEL OT8 Smart Tablet) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய ஓயூகிடெல் OT8 ஸ்மார்ட் டேப்லெட் (OUKITEL OT8 Smart Tablet) சாதனம் 11" இன்ச் அளவு கொண்ட 2K TÜV SÜD ஸ்க்ரீன் டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே 1200 × 1920 பிக்சல் ரெசொலூஷன் உடன் தரமான கிளாரிட்டியை வழங்குகிறது. இது Widevine L1 சப்போர்ட் உடன் பிரமாதமான HD சப்போர்ட் ஆதரவை வழங்குகிறது.
ஓயூகிடெல் OT8 ஸ்மார்ட் டேப்லெட் (OUKITEL OT8 Smart Tablet):
இந்த டேப்லெட் சாதனம் ஆக்டா கோர் யுனிஸாக் T606 சிப்செட் உடன் இயங்குகிறது. இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இது 6GB இன்பில்ட் ரேம் அம்சத்துடன் வருகிறது. ஆனால், நிறுவனத்தின் தகவல் படி, இதன் ரேம் அம்சத்தை பயனர்கள் 30GB வரை விர்ச்சுவல் அலோகேஷன் மூலம் அதிகரிக்க முடியும் என்று ஓயூகிடெல் கூறியுள்ளது.
இந்த ஓயூகிடெல் OT8 ஸ்மார்ட் டேப்லெட் (OUKITEL OT8 Smart Tablet) டிவைஸ் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கூடுதல் ஸ்டோரேஜ் வழங்குவதற்காக இந்த டேப்லெட்டில் TF கார்டு மூலம் 1TB ஸ்டோரேஜ் விரிவாக்கும் அம்சத்தை ஆதரிக்கிறது. இந்த டேப்லெட் சாதனம் 8 மெகாபிக்ஸல் சோனி செல்பி கேமரா மற்றும் 13 மெகாபிக்ஸல் சாம்சங் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது.

இந்த புதிய ஓயூகிடெல் OT8 ஸ்மார்ட் டேப்லெட் (OUKITEL OT8 Smart Tablet) சாதனம் 8800mAh பேட்டரி உடன் வருகிறது. இந்த பேட்டரி சார்ஜ் 2 நாட்கள் வரை சாதாரண பயன்பாட்டுடன் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது 1130 மணிநேர ஸ்டாண்பை நேரத்தை வழங்குகிறது. இந்த டேப்லெட் சாதனம் இப்போது அறிமுக சலுகையுடன் ஓயூகிடெல் (OUKITEL) இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஓயூகிடெல் OT8 ஸ்மார்ட் டேப்லெட் விலை (OUKITEL OT8 Smart Tablet Price):
இந்த அறிமுக சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஓயூகிடெல் OT8 ஸ்மார்ட் டேப்லெட் (OUKITEL OT8 Smart Tablet) சாதனம் $299 டாலர் என்ற அசல் விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக $179 டாலர் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய மதிப்பின் படி, இது வெறும் ரூ.14,599 என்ற விலையில் வருகிறது.
முதல் 200 ஆர்டர்களுக்கு ஓயூகிடெல் OT8 ஸ்மார்ட் டேப்லெட் (OUKITEL OT8 Smart Tablet) உடன் ஓயூகிடெல் BT20 ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை கூடுதல் சேர்ப்பாக வெறும் 60 டாலர் விலையுடன் வாங்க முடியும். இந்த ஓயூகிடெல் OT8 ஸ்மார்ட் டேப்லெட் (OUKITEL OT8 Smart Tablet) சாதனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. ஆனால், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








