Home
News

மிரளுது ஆர்டர்.. பட்ஜெட்ல மிலிட்டரி தரம்.. AMOLED டிஸ்பிளே.. 15 நாள் பேட்டரி.. உடையவே உடையாத ரக்டு Smartwatch.

Oukitel நிறுவனம் அதன் ரக்டு ஸ்மார்ட்போன் (rugged smartphone) சாதனங்களுக்கு மிகவும் பிரபலமானது. இப்போது நிறுவனம் மிலிட்டரி கிரேட் (military-grade) தரத்தில், ரக்டு ஸ்மார்ட்வாட்ச் (smartwatch) சாதனத்தை 15 நாள் பேட்டரி ஆயுளுடன் பட்ஜெட் (budget) விலையில் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.

Oukitel நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் தான் இந்த Oukitel BT50 என்ற ரக்டு ஸ்மார்ட்வாட்ச் (Oukitel BT50 rugged smartwatch) டிவைஸ் ஆகும். இதன் பெயர் குறிப்பிடுவது போல, இதுவொரு மிலிட்டரி தரத்தில் உருவாக்கப்பட்ட ரக்டு ஸ்மார்ட்வாட்ச் சாதனமாகும். இது பட்ஜெட் விலையில் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மிரளுது ஆர்டர்.. பட்ஜெட்ல மிலிட்டரி தரம்.. AMOLED டிஸ்பிளே..

இந்த மிலிட்டரி க்ரேட் தர ரக்டு ஸ்மார்ட்வாட்ச் சாதனம் வட்ட டயல் உடன் மிகவும் உறுதியான வாட்ச் ஸ்ட்ராப் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் டிஸ்பிளே 1.43" இன்ச் உடன் 466 x 466 பிக்சல் ரெசொலூஷன் கொண்ட AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது. இது அவுட்டோர் பயனர்களுக்காகவும், முரட்டுத்தனமான வீரர்களுக்காகவும் அதிக உறுதியுடன் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

Oukitel BT50 rugged smartwatch:

இது பட்ஜெட் விலையில் AMOLED டிஸ்பிளே, மிலிட்டரி கிரேட் தரம், போன்று உறுதியான அம்சங்களை வழங்குவதோடு, பயனர்களுக்கு தேவையான ஒட்டுமொத்த ஹெல்த் டிராக்கிங் (health tracking) அம்சங்களையும் வழங்குகிறது. இதில் ஹார்ட் ரெட் மானிட்டர் (heart rate), பிளட் ஆக்சிஜன் சேச்சுரேஷன் (blood oxygen saturation), ஸ்லீப் மானிட்டர் (sleep health) போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

இதில் உள்ள சென்சார்கள் உங்கள் தினசரி நடவடிக்கையை கண்காணித்து, உங்களை பற்றிய தகவலை உடனுக்குடன் நொடிப்பை (Notify) செய்கிறது. இது 100 ஸ்போர்ட்ஸ் மோட் உடன் வருகிறது. இந்த Oukitel BT50 rugged smartwatch சாதனம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS போன் இரண்டிலும் வேலை செய்கிறது. இது ஜிபிஎஸ் ஆதரவுடன் வருகிறது.

மிரளுது ஆர்டர்.. பட்ஜெட்ல மிலிட்டரி தரம்.. AMOLED டிஸ்பிளே..

இது ப்ளூடூத் 5.2 அம்சத்துடன் வருகிறது. இது வாய்ஸ் கால் அழைப்புகளை ஏற்கிறது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற ஆப்ஸ்களின் நோட்டிபிகேஷனை நேரடியாக உங்கள் வாட்ச்சிற்கே வழங்குகிறது. இது AI வாய்ஸ் அசிஸ்டன்ட் உடன் டச் கண்ட்ரோல் அம்சத்துடன் வருகிறது. இது 400mAh பேட்டரி உடன் 15 நாள் பேட்டரி ஆயுளை வழங்குகிறது.

15 நாள் பேட்டரி ஆயுள் ஸ்மார்ட்வாட்ச் (15 days battery life smartwatch):

இது ஸ்டான்பை மோடில் 45 நாள் பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இது குயிக் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. 2 மணி நேரத்தில் முழுமையாக சாதனத்தை சார்ஜ் செய்கிறது. இது IP68 வாட்டர்ப்ரூப் அம்சத்துடன் வருகிறது. இந்த புதிய BT50 ஸ்மார்ட்வாட்ச் பிளாக்/கிரீன் நிறத்திலும் சில்வர்/ஆரஞ்சு நிறத்தில் வருகிறது.

இந்த Oukitel BT50 ரக்டு ஸ்மார்ட்வாட்ச் சாதனம் இந்திய மதிப்பில் ரூ.4,500 விலை முதல் துவங்குகிறது. இதன் ஹை-வேரியண்ட் சாதனத்தின் விலை ரூ.5,800 என்ற விலையில் வருகிறது. இது தற்போது அமேசான் US வழியாக வாங்க கிடைக்கிறது. இந்தியாவில் இந்த சாதனம் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. ஆனால், ஆன்லைன் விருப்பம் மூலமாக நீங்கள் ஆர்டர் செய்து வாங்கக்கூடிய வசதிகள் இருப்பதனால், உங்கள் தேர்வை நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oukitel BT50 Rugged Smartwatch Military Grade AMOLED Display 15 Days Battery Life Android and iOS Connectivity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X