Home
News

விவோ, ஐக்யூ ஸ்மார்ட்போன் இருக்கா? அடுத்த மாதத்தில் இருந்து OriginOS 6-க்கு ரெடி ஆகுங்க.. எந்தெந்த மாடல்கள்?

இந்தியாவில் விவோ மற்றும் ஐக்யூ ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் யூசர்களுக்கு அடுத்த மாதத்தில் இருந்து ஆண்ட்ராய்டு 16 (Android 16 OS) ஓஎஸ் பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்க இருக்கிறது. பன்டச் ஓஎஸ் மாற இருக்கிறது. இதில் எந்தெந்த மாடல்களுக்கு எப்போது அப்டேட் கிடைக்கும் என்பதை, ஓர்ஜின்ஓஎஸ் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தி இருக்கிறது.

ஓர்ஜின்ஓஎஸ் 6
இந்த ஓஎஸ் மூலம் புதிய ஓர்ஜின் டிசைன், பன்சனல் இன்டலிஜன்ஸ் மற்றும் செக்யூரிட்டி சிஸ்டம் ஆகியவை அப்கிரேட் செய்யப்பட்டு கிடைக்க இருக்கிறது. புதிய டைனாமிக் குளோவ் (Dynamic Glow), ட்ரான்ஸ்லுசென்ட் கலர்கள் (Translucent Colour) மற்றும் பிளிப் கார்டுகள் (Flip Cards) சேர்க்கப்பட இருக்கின்றன. அதேபோல ஆம்பியன் லைட் இடம்பெற இருக்கிறது.

விவோ, ஐக்யூ ஸ்மார்ட்போன் இருக்கா? அடுத்த மாதத்தில் இருந்து OriginOS 6-

விவோ சேன்ஸ் டெக்ஸ்ட் சேர்க்கப்பட இருக்கிறது. அதேபோல லாக் ஸ்கிரீன் கிரிட் ஆனது புது டிசைனில் கிடைக்க இருக்கிறது. விவோ மாடல்களுக்கு விவோ ஏஐ (Vivo AI) பீச்சர்களில் ஓர்ஜின் ஐலேண்ட் (Origin Island), ஏஐ ரீடச் (AI Retouch), ஏஐ இமேஜ் லேப் (AI Image Lap), ஏஐ மேஜிக் மூவ் (AI Magic Move) போன்ற பீச்சர்கள் சேர்க்கப்பட இருக்கின்றன. விவோ செக்யூரிட்டி என்ஹான்ஸ் செய்யப்படுகிறது.

நவம்பர் மாத தொடக்கம் (விவோ எக்ஸ் சீரிஸ் & விவோ வி சீரிஸ்):
விவோ எக்ஸ் ஃபோல்டு5 (Vivo X Fold5), விவோ எக்ஸ்200 (Vivo X200), விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro) மற்றும் விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE) மற்றும் விவோ வி60 (Vivo V60) ஆகிய மாடல்களுக்கு ஓர்ஜின்ஓஎஸ் 6 கிடைக்க இருக்கிறது. இதே நேரத்தில் ஐக்யூ 13 (iQOO 13) ஸ்மார்ட்போனுக்கும் அப்டேட் கிடைக்கும்.

நவம்பர் மாத பாதியில் (விவோ எக்ஸ் சீரிஸ்): விவோ எக்ஸ்போல்டு3 ப்ரோ (Vivo X Fold3 Pro), விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro), விவோ எக்ஸ்100 (Vivo X100) ஆகியோ விவோ மாடல்களுக்கு ஓர்ஜின்ஓஎஸ் 6 கிடைக்க இருக்கிறது. ஐக்யூ மாடல்களை பார்க்கையில், ஐக்யூ 12 (iQOO 12) ஸ்மார்ட்போனுக்கு மட்டும் கிடைக்கிறது.

டிசம்பர் மாத பாதியில் (விவோ வி சீரிஸ் & டி சிரீஸ்): விவோ வி60இ (Vivo V60e), விவோ வி50 (Vivo V50), விவோ வி50இ (Vivo V50e), விவோ டி4 அல்ட்ரா (Vivo T4 Ultra) மற்றும் விவோ டி4 ப்ரோ (Vivo T4 Pro) ஆகிய மாடல்களுக்கு கிடைக்க இருக்கிறது. அதேபோல ஐக்யூ நியோ 10, ஐக்யூ நியோ 10ஆர் மற்றும் ஐக்யூ நியோ9 ப்ரோ மாடல்களுக்கு கிடைக்க இருக்கிறது.

2026ஆம் ஆண்டில் தொடக்கத்தில் (விவோ எக்ஸ் சீரிஸ், வி சீரிஸ், டி சீரிஸ் & ஒய் சீரிஸ்): விவோ எக்ஸ்90 ப்ரோ, விவோ எக்ஸ்90, விவோ வி60 லைட் 5ஜி, விவோ வி60 லைட் 5ஜி, விவோ வி50 லைட், விவோ வி50 லைட் 5ஜி, விவோ வி50 லைட், விவோ வி40 ப்ரோ, விவோ வி40, விவோ வி40இ, விவோ வி40 லைட், விவோ வி40 லைட் 5ஜி மாடல்களுக்கு கிடைக்கிறது.

விவோ வி40 லைட் எஸ்இ, விவோ வி40 எஸ்இ 80W, விவோ வி40 எஸ்இ ஆகிய மாடல்களுக்கும் ஓர்ஜின்ஓஎஸ் 6 கிடைக்க இருக்கிறது. மேலும், விவோ வி30 ப்ரோ,விவோ வி30, விவோ வி30இ, விவோ வி30 லைட் 5ஜி, விவோ வி30 லைட், விவோ வி30 எஸ்இ, விவோ டி4 5ஜி, விவோ டி4ஆர் 5ஜி, விவோ டி3 அல்ட்ரா, விவோ டி3 ப்ரோ 5ஜி மாடல்களுக்கு கிடைக்கிறது.

விவோ டி3 5ஜி, விவோ டி4எக்ஸ் 5ஜி, விவோ ஒய்400 ப்ரோ 5ஜி, விவோ ஒய்400 5ஜி, விவோ ஒய்400, விவோ ஒய்300 பிளஸ் 5ஜி, விவோ ஒய்300 5ஜி, விவோ ஒய்200 ப்ரோ 5ஜி, விவோ ஒய்200, விவோ ஒய்200இ 5ஜி, விவோ ஒய்100 5ஜி, விவோ ஒய்58 5ஜி, விவோ ஒய்39 5ஜி, விவோ ஒய்38 5ஜி, விவோ ஒய்31 ப்ரோ 5ஜி மாடல்களுக்கு கிடைக்கிறது.

இதே 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஐக்யூ நிறுவனத்தின் ஐக்யூ 11, ஐக்யூ இசட்10 5ஜி, ஐக்யூ இசட்10ஆர் 5ஜி, ஐக்யூ இசட்10எக்ஸ் 5ஜி, ஐக்யூ இசட்9 5ஜி, ஐக்யூ இசட்9எஸ் 5ஜி மற்றும் ஐக்யூ இசட்9 ப்ரோ 5ஜி ஆகிய மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 6 அப்டேட் கிடைக்க இருக்கிறது. இதில் உங்களது மாடல் இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OriginOS 6 Rollout Schedule Announced List of Eligible Mobiles Rollout Timeline in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X