Home
News

வெறும் 50 ரூபாய் போதும்.. பிளாஸ்டிக் Aadhaar கார்டு வீட்டுக்கு வரும்.. ஆர்டர் செய்ய இதோ வழிமுறைகள்!

ஆதார் (Aadhaar) அட்டை தான் தற்போது இந்தியாவில் அனைத்து சேவைகளையும் பெறுவதற்குப் பயன்படுகிறது. அதேபோல் இந்த ஆதார் கார்டை முகவரி சான்றாகவும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுதவிர நம்முடைய வங்கிக் கணக்கு, ரேஷன் அட்டை, இபிஎப் கணக்கு, எல்பிஜி சிலிண்டருக்கான மானியம், ஸ்காலர்ஷிப் என பல்வேறு நலத்திட்டங்களிலும் ஆதார் எண்ணானது இணைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் இந்த ஆதார் கார்டை மிகவும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இது மட்டும் தொலைந்துவிட்டால் பல்வேறு சலுகைகளை இழக்க நேரிடும். ஒருவேளை ஆதார் கார்டு தொலைந்துவிட்டால், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) பிவிசி ஆதார் அட்டையை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதியை வழங்கியுள்ளது.

வெறும் 50 ரூபாய் போதும்.. பிளாஸ்டிக் ஆதார் கார்டு வீட்டுக்கு வரும்..

குறிப்பாக இந்த விஷயத்தை அனைவரும் கவனமான தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது ஆதார் லெட்டர் என்பது UIDAI அஞ்சல் மூலம் அனுப்பிய அசல் ஆதார் ஆகும். அதேபோல் இ-அதார் என்பது டிஜிட்டல் வடிவத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் ஆவணம் ஆகும். மேலும் பிவிசி கார்டு என்பது நீடித்த பிளாஸ்டிக்கில் அச்சிடப்பட்ட ஆதார் அட்டை ஆகும். தற்போது இந்த பிவிசி கார்டை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யலாம்.

அதுவும் இந்த பிவிசி ஆதார் கார்டு ஆனது ஒரு ஏடிஎம் போலவே தோற்றமளிக்கும். குறிப்பாக இதை நீங்கள் ஃபர்ஷ் அல்லது பாக்கெட்டில் வைத்து அனைத்து இடங்களுக்கு எளிமையாகக் கொண்டு செல்ல முடியும். அதேபோல் இது நீடித்து உழைக்கக்கூடியது மற்றும் விரைவில் இது சேதமடையாதது இதன் சிறப்பு. இந்த பிவிசி ஆதார் அட்டையை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 50 ரூபாய் செலுத்தி ஆர்டர் செய்யலாம். இப்போது இந்த பிவிசி ஆதார் கார்டை ஆர்டர் செய்யும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.

வழிமுறை-1: ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதளமான UIDAI-க்கு செல்ல வேண்டும்.

வழிமுறை-2: அடுத்து மை ஆதார் (My Aadhaar) என்ற டேப் ஐ கிளிக் செய்யவும். அதன்பின்பு ஆர்டர் ஆதார் பிவிசி கார்டு(Order Aadhaar PVC Card)என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்

வழிமுறை-3: அதன்பின்னர் உங்கள் ஆதார் எண் (Aadhaar number) மற்றும் கேப்ட்சாவை (Captcha code) உள்ளிடவும். அடுத்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP நம்பரை உள்ளிட்டு அதைச் சமர்ப்பிக்கவும்.

வழிமுறை-4: இப்போது உங்கள் ஆதார் தொடர்பான தகவல்கள் தெரியும். இதைச் சரிபார்த்த பிறகு, next என்பதைக் கிளிக் செய்து, ரூ. 50 செலுத்தி செயல்முறையை முடிக்கவும். குறிப்பாக பணம் செலுத்திய பிறகு, உங்கள் ஆர்டர் உறுதிப்படுத்தப்படும்.

குறிப்பாக உங்கள் PVC ஆதார் அட்டை உங்கள் முகவரிக்கு 15 வேலை நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும். அதுவும் உங்கள் கார்டு ஸ்பீட் போஸ்ட் மூலம் உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும்.

வெறும் 50 ரூபாய் போதும்.. பிளாஸ்டிக் ஆதார் கார்டு வீட்டுக்கு வரும்..

அதேபோல் சிலர் பலர் 10 வருட முந்தைய பழைய ஆதார் அட்டையை வைத்திருப்பார்கள். இந்த பழைய ஆதார் கார்டினை அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக 10 வருடங்கள் பழமையான ஆதார் கார்டைப் புதுப்பிக்க வேண்டும் என்றால், எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்க. அதாவது தற்போது இதற்கான காலக்கெடு டிசம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே உங்கள் ஆதார் அட்டையில் வரும் டிசம்பர் 14ஆம் தேதிக்குள் பெயர், முகவரி மற்றும் பிற தகவல்களை அப்டேட் செய்ய விரும்பினால் செலவின்றி செய்யலாம். ஆனால் டிசம்பர் 14 தேதிக்குப் பிறகு ஆதார் விவரங்களை அப்டேட் செய்வதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும்.

Best Mobiles in India

English summary
Order PVC Aadhaar Card at Home: spend only 50 rupees, Easy Steps Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X