ஆஹா.. ஓஹோனு விற்பனையாகும் புது Oraimo இயர்பட்ஸ் சாதனங்கள்! விலை என்ன தெரியுமா?
பெஸ்டான இன்-இயர் ஹெட்போன்ஸ் அல்லது இயர்பட்ஸ் சாதனம் வேண்டுமா? அப்படியானால், கட்டாயம் நீங்கள் இந்த புதிய ஓரைமோ (Oraimo) ஆடியோ கேட்ஜெட்களை பார்க்க வேண்டும். பிரீமியம் ஆடியோ அனுபவத்தை வழங்க இந்த சாதனங்கள் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆடியோ பாகங்களின் பிராண்ட்டான ஓரைமோ நிறுவனம், இந்தியாவில் ஓபன் ஆடியோ தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓபன்பாட்ஸ் (OpenPods) மற்றும் ஓபன்சர்க்லெட் (OpenCirclet) இயர்பட்ஸ் என்று 2 சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. ஓரைமோவின் ஓபன் ஆடியோ சீரிஸ் தொடர், ஒப்பிடமுடியாத வசதியையும், ஒலி தரத்தையும் வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Oraimo நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஹெட்ஃபோன்கள் தனித்துவமான ஓபன் இயர் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இவை பாரம்பரிய இயர்பட்களிலிருந்து வேறுபடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் காதுகளை அடைக்காமல் சிறந்த ஒலி தரத்தை வழங்க ஏர் ஃபிலொவ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது. OpenPods மற்றும் OpenCirclet இயர்பட்ஸ் அம்சத்தைப் பற்றி பார்க்கலாம் வாங்க.
Oraimo நிறுவனத்தின் புதிய OpenCirclet விலை ரூ.4,799 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், OpenPods சாதனத்தின் விலை ரூ.5,599 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தயாரிப்புகளும் தற்போது இ-காமர்ஸ் தளங்களான பிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon) மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ Oraimo இ-ஸ்டோர் ஆகியவற்றில் இப்போது முதல் வாங்க கிடைக்கின்றன.
OpenCirclet இயர்பட்களின் பேட்டரி ஆயுள் 16 மணிநேரம் வரை நீடிக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சாதனம் நெக்பேண்ட் இயர்போன்ஸ்களை போன்றது என்பது கவனிக்கத்தக்கது., அதே நேரத்தில் OpenPods சாதனம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 மணிநேரம் வரை நீடிக்கும் என்று நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. இந்த சாதனம் இன்-இயர் இயர்பட்ஸ் போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனம் வெறும் 10 நிமிட இடைவெளியில் பாஸ்ட் சார்ஜிங் செய்தால், இயர்பட்ஸை 3.5 மணிநேரம் வரை பிளே செய்ய அனுமதிப்பதாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. OpenPods மற்றும் OpenCirclet இயர்பட்ஸ்கள் மிகவும் துல்லியமான மற்றும் சிறந்த ஒலி தரத்தை வழங்கும் 16mm டைனமிக் ஆடியோ டிரைவர்களுடன் வருகிறது.
இந்த சாதனம் நாய்ஸ் கேன்சலேஷன், அழைப்புகளுக்குப் பதிலளிப்பது அல்லது முடிப்பது மற்றும் வாய்ஸ் கால் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சங்களை செயல்படுத்துவது போன்ற பல்வேறு செயல்பாடுகளைச் செய்கிறது. OpenPods மற்றும் OpenCirclet இயர்பட்கள் ஒரு புதுமையான ஓபன் இயர் வடிவமைப்பைக் கொண்டுள்ளன. இது காற்றோட்டத்தை எளிதாக்குகிறது. இதனால் பாக்டீரியா மற்றும் கிருமிகளின் உருவாவதை நம்மால் குறைக்க முடிகிறது.
ஓபன் ஆடியோ சீரிஸ் தொடர் பயனர்கள் தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கையில் இசையைக் கேட்க அனுமதிக்கிறது. இந்த தனித்துவமான அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது இசையைக் கேட்டு மகிழலாம். இது மேட் ஃபினிஷ் மூலம், இந்த இயர்பட்கள் கடுமையான ஒர்க்அவுட் அமர்வுகளின் போதும், அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் கூடுதல் பிடிப்பை பயனர்களுக்கு வழங்குகின்றன.
இந்த இயர்பட்கள் Crossfit ஆல் அங்கீகரிக்கப்பட்டு, தீவிர உடற்பயிற்சிகளின் போது பாதுகாப்பு உணர்வை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. OpenPods மற்றும் OpenCirclet இயர்பட்கள் அவற்றின் தொழில்துறை தர தெர்மோபிளாஸ்டிக் வெளிப்புறம் மற்றும் IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மதிப்பீட்டின் காரணமாக மிகவும் நீடித்தவையாக இருக்கின்றன. பெஸ்ட் ஆடியோ கேட்ஜெட்டை வாங்க விரும்புவோர் இந்த 2 சாதனங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








