Home
News

ஆர்டர் பிச்சிக்குது.. ரூ.799க்கு டிரான்ஸ்பரன்ட் டிசைன்.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. டச் கன்ட்ரோல்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த மார்கெட்டும் திரும்பி பார்க்கும் விலையில், டிரான்ஸ்பரன்ட் டிசைன், கேமிங் மோட், ஃபாஸ்ட் சார்ஜிங், இஎன்சி டெக்னாலஜி மற்றும் IPX4 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் ஒரைமோ ப்ரீபாட்ஸ் லைட் (Oraimo FreePods Lite) இயர்படஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒரைமோ ப்ரீபாட்ஸ் லைட் அம்சங்கள் (Oraimo FreePods Lite Specifications): இந்த ஒரைமோ இயர்பட்ஸ் டிரான்ஸ்பரன்ட் (Transparent) டிசைனில் டூவ் - டோன் கலர் (Two-Tone Color) கொண்டிருக்கிறது. இதில் 10 மிமீ டிரைவர்கள் (10mm drivers) பயன்படுத்தப்பட்டுள்ளன. ப்ளூடூத் வி5.2 (Bluetooth v5.2) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.

ரூ.799க்கு டிரான்ஸ்பரன்ட் டிசைன்.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. டச் கன்ட்ரோல்!

பேஸ் (Bass) பிரியர்களை கவரும் வகையில், ஒரைமோ சிக்னேச்சர் சவுண்ட் (Oraimo Signature Sound) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டெக்னாலஜி ஹெவிபேஸ் (HavyBass) அனுபவத்தில் கிரிஸ்டல் கிளியர் அவுட்புட்டை கொடுக்கும். இந்த பட்ஜெட்டில் வியக்கும் விதமாக, இதில் டச் கன்ட்ரோல் (Touch Controls) சப்போர்ட் வருகிறது. இதில் பிளே, பாஸ் மற்றும் கால்களை செய்து கொள்ளலாம்.

இந்த ஒரைமோ ப்ரீபாட்ஸ் லைட் இயர்பட்ஸில் அனிஃபாஸ்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் (AniFast Fast charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே சார்ஜ் செய்தால், 120 நிமிடங்கள் பிளேபேக் டைம் (Playback Time) கொடுக்கும். அதே போல ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 40 மணி நேரத்துக்கு பிளேபேக் டைம் கொடுக்கக்கூடியது.

மேலும், கிரிஸ்டர் கிளியர் வாய்ஸ் கால் (Crystal Clear Voice Call) அனுபவத்துக்காக இஎன்சி டெக்னாலஜி (ENC Technology) கொண்ட 2 மைக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ஏஐ டீப் அல்கோரிதம் (AI Deep Algorithm)பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஆட்டோ நாய்ஸ் ரெடக்சன் (Auto Noise Reduction) செய்து, வாய்ஸ் கால்களை கிளியராக மாற்றக் கூடியது.

அதேபோல கேமிங் பிரியர்களை கவரும் விதமாக நொடியில் ஆடியோ மற்றும் வீடியோ சின்க் (Audio And Video Sync) செய்வதற்காக லோவ் - லேட்டன்சி கேமிங் மோட் (Low - Lattency Game Mode) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸை ஒரைமோ சவுண்ட் ஆப் (Oraimo Sound App) மூலம் கன்ட்ரோல் செய்ய முடியும். அதில் ஸ்டாண்டர்ட் (Standard), ஹெவிபேஸ் (HeavyBass), ராக் (Rock), ஜாஸ் (Jazz) மற்றும் வோகல் (Vocal) போன்ற மியூசிக் மோட்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ்க்கு IPX4 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் (Water And Sweat Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒரைமோ ப்ரீபாட்ஸ் லைட் இயர்பட்ஸ் ஐஸ்லேக் ப்ளூ (Icelake Blue), நெபுலா ப்ளூ (Nebula Blue) மற்றும் பாண்டம் பிளாக் (Phantom Black) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த இயர்பட்ஸின் விலையை கேட்டால், நீங்களே வியந்து போய் விடுவீர்கள். அவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெறும் ரூ.799 க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலை அறிமுக சலுகை மட்டுமே விரையில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த இயர்பட்ஸை இன்று (செப்டம்பர் 19) முதல் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் கம்பெனி வெப்சைட்டில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். மிகவும் கம்மியான விலையில் டிரான்ஸ்பரன்ட் டிசைன், ஃபாஸ்ட் சார்ஜிங், கேமிங் மோட், இஎன்சி டெக்னாலஜி போன்ற பிரீமியம் அம்சங்கள் வேண்டுமானால், இந்த இயர்பட்ஸ் மிகச் சரியான தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oraimo FreePods Lite Earbuds Under Rs 1000 With Fast Charge Touch Control Check Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X