ஆப்பிள் நிறுவனம் போல சொந்தமாக சிப்செட் தயாரிக்கும் சியோமி மற்றும் ஒப்போ.. காரணம் என்ன தெரியுமா?

|

ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கென்று தனித்துவமான சொந்த நிறுவனத்தின் உருவாக்கத்தில் உருவாக்கப்பட்ட சிப்செட்களை மட்டுமே தனது ஐபோன், ஐபாட் மற்றும் ஐபேட் சாதனங்களில் பயன்படுத்தி வருகிறது. ஆப்பிள் நிறுவனம் தற்பொழுது பயோனிக் சிப்செட்களை பயன்படுத்துகிறது. இந்த வரிசையில் ஒப்போ நிறுவனம் மற்றும் சியோமி ஆகிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் சொந்த சிப்செட்களை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதைப் பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே பார்க்கலாம்.

சொந்த தனிப்பயன் சிப்செட்களை உருவாக்க திட்டம்

சொந்த தனிப்பயன் சிப்செட்களை உருவாக்க திட்டம்

முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களான சியாவோமி மற்றும் ஒப்போ ஆகியோர் அமெரிக்காவின் விதிமுறைகளின் காரணமாக ஹூவாய் நிறுவனத்துடன் என்ன நடந்தது என்பதை கண்ட பிறகு, அந்த சிக்கலை தவிர்க்கும் முயற்சியில் இப்படி முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. செமி கண்டக்டர் தொழிலில் சீனா தனது இருப்பை அதிகரிக்க எதிர்பார்க்கும் நேரத்தில் தங்களது சொந்த தனிப்பயன் சிப்செட்களை அறிமுகப்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டு வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிப்மேக்கர் யுனிசோக் நினைவிருக்கிறதா?

சிப்மேக்கர் யுனிசோக் நினைவிருக்கிறதா?

டிஜி டைம்ஸில் இருந்து இந்த அறிக்கை வெளி வந்துள்ளது, 'ஒப்போ மற்றும் சியோமி 2021 இன் பிற்பகுதியிலோ அல்லது 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியிலோ தங்கள் நிறுவனத்தின் இன்-ஹவுஸ்-டெவெலப்-சப்-6GHz 5G சிப்செட்களை உருவாக்க முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட்களை அறிமுகப்படுத்த நிறுவனம் சிப்மேக்கர் யுனிசோக் உடன் இணைகின்றது. இது குவால்காம் மற்றும் மீடியாடெக் போன்ற சிப் விற்பனையாளர்களுக்கு எதிராக போட்டியிடும் என்று கூறப்படுகிறது.

அடுத்த சிக்கல்: எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்?- இனி இந்த பிரச்சனை!அடுத்த சிக்கல்: எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்?- இனி இந்த பிரச்சனை!

ஹூவாய் நிறுவனத்திற்கு என்ன நடந்தது?

ஹூவாய் நிறுவனத்திற்கு என்ன நடந்தது?

சியோமியும், ஒப்போவும் வரும் காலத்தில் கவனமாக இருக்க விரும்புவதாகத் தெரிகிறது, அதனால் ஹூவாய் நிறுவனத்திற்கு என்ன நடந்ததோ அது இவர்களுக்கு நடக்காது என்று இந்த இரண்டு நிறுவனங்களும் நம்புகின்றது. நினைவுகூர, ஹூவாய் நிறுவனத்தின் கிரின் தொடர் சிப்செட்கள் டிஎஸ்எம்சியால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன, இது அமெரிக்கா விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக, அமெரிக்க தொழில்நுட்பத்தை நம்பியுள்ள நிறுவனங்களிலிருந்து கூறுகளை வாங்க ஹூவாய் தவறிவிட்டது.

 சிறந்த எடுத்துக்காட்டு இது தான்

சிறந்த எடுத்துக்காட்டு இது தான்

சியோமி மற்றும் ஒப்போ தனிப்பயனாக்கப்பட்ட சிப்செட்களுடன் செல்ல விரும்புவதற்கான இரண்டாவது காரணம் வன்பொருள் மற்றும் மென்பொருளுக்கு இடையில் சிறந்த பொருந்தக்கூடிய தன்மையை இது அதிகரிக்கிறது. ஐபாட்கள் மற்றும் ஐபோன்கள் போன்ற தயாரிப்புகளுக்கு அதன் சொந்த பயோனிக் சிப்செட்களைப் பயன்படுத்தும் ஆப்பிள் நிறுவனம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Mi 5C போனில் இருக்கும் சர்ஜ் எஸ் 1 சிப்செட்

Mi 5C போனில் இருக்கும் சர்ஜ் எஸ் 1 சிப்செட்

சம்பந்தப்பட்ட இரண்டு நிறுவனங்களில், சியோமி செமி கண்டக்டர் தொழிலுக்கு புதியதல்ல, ஏனெனில் இது 2017 ஆம் ஆண்டில் சர்ஜ் எஸ் 1 என அழைக்கப்படும் தனது சொந்த சிப்பை முதலில் வெளிப்படுத்தியது, இது அதன் Mi 5C ஸ்மார்ட்போனை இயக்குகிறது. அந்த சிப் 28nm ஃபேப்ரிகேஷன் செயல்பாட்டில் செய்யப்பட்டது, அதே நேரத்தில் சமீபத்திய சிப் ஃபவுண்டரிகள் 5nm செயல்முறையைப் பயன்படுத்துகின்றன, அதாவது ஒப்போ மற்றும் சியோமி ஆகியவை குவால்காம் மற்றும் மீடியா டெக் உள்ளிட்ட பெரிய வீரர்களுடன் போட்டியிட அயராது உழைக்க வேண்டும் என்பதே பொருள்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Oppo, Xiaomi working on custom-made own 5G chips like Apple : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X