Oppo போட்ட வித்தியசமான காதல் பூட்டு.. யாரும் பார்த்திடாத புது ஆக்சஸரீ.. இது போனா? இல்லை லாக் பேக்-ஆ.!
புதுமைகளை அறிமுகம் செய்வதில் ஒப்போ (Oppo) நிறுவத்திற்கு நிகர் யாருமே இல்லை என்று கூறலாம். தொடர்ந்து அதன் சாதனங்களில் விதியசங்களை களமிறக்கி வந்த ஒப்போ, இப்போது புதிய ஆக்சஸரீஸ் (accessories) சாதனத்தை ஹார்ட் வடிவத்தில் ஒரு பூட்டு போல அறிமுகம் செய்துள்ளது.
ஒப்போ நிறுவனம் இப்போது ஆம்புஷ் (AMBUSH) என்ற உலக பிரசித்திபெற்ற ஃபேஷன் பிராண்ட் (fashion brand) உடன் கூட்டு சேர்ந்து, புதிய ஒப்போ ஃபைண்ட் N3 ஃபிலிப் போன் (OPPO Find N3 Flip phone) சாதனத்திற்கான ஸ்பெஷல் மொபைல் ஆக்சஸரீ சாதனத்தை வித்தியாசமான ஹார்ட் தோற்றத்தில் ஒரு பேக் (bag) போல வெளியிட்டுள்ளது. இதுவொரு வித்தியாசமான ஹார்ட் அண்ட் லாக் வடிவத்தில் வந்துள்ளது.

ஒப்போ எக்ஸ் ஆம்புஷ் ஃபிலிப்டு பேட்லாக் கேஸ் (OPPO X AMBUSH Flipped Padlock Case):
இது ஒப்போ ஃபைண்ட் N3 ஃபிலிப் போன் (OPPO Find N3 Flip phone) சாதனத்திற்கான மொபைல் கேஸ் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இது ஒரு ஃபிலிப் பேட்லாக் (Flipped Padlock) வடிவத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் கேஸை ஆம்புஷ் நிறுவனத்தின் கிரேட்டிவ் டைரக்டர் யூன் ஆஹ்ன் (Yoon Ahn) அவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹார்ட் பேட்லாக் பேக் மொபைல் கேஸை (Heart Padlock Bag Case) எப்படி வாங்குவது?
இதில் இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்பது போன்ற தகவலை இப்போது பார்க்கலாம். இந்த வித்தியாசமான போன் கேஸ் பிங்க் நிறத்தில் பூட்டில் இருக்கும் லாக் போல இரும்பால் செய்யப்பட்ட கைப்பிடியுடன் வருகிறது. இது சுவாரசியமாக இரண்டு பாதியாக திறக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒப்போ ஃபைண்ட் N3 ஃபிலிப் போனுக்கு கட்சிதமாக பொருந்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
ஒப்போ ஃபைண்ட் N3 ஃபிலிப் போன்னின் உள்பக்க டிஸ்பிளேவை அணுக அனுமதிக்கும் படி, இந்த ஸ்பெஷல் கேஸ் இரண்டாக ஓபன் செய்யப்படுகிறது. அதேபோல், இதன் மறுபக்கம் போனின் இரண்டாம் டிஸ்பிளேவை அணுக அனுமதிக்கும் இடத்துடன் கேமராவுக்கான அணுகளையும் இடத்தையும் வழங்குகிறது. தெரியாதவர்களுக்கு இந்த கேஸ் ஆம்புஷ் நிறுவனத்திடம் இருந்து வெளிவந்துள்ளது.

இதுவொரு கொரியன் அமெரிக்க பேஷன் டிசைனர் ஆன யூன் ஆஹ்ன் (Yoon Ahn) இடமிருந்து வெளிவந்துள்ளது. இவருடைய நிறுவனம் 80-களின் ஸ்டைலை உலகம் முழுக்க பிரதிபலிக்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இது மிகவும் பிரபலமான நிறுவனமாகும். இந்த ஆம்புஷ் நிறுவனம் இப்போது வரை உலகின் மிகவும் தலைசிறந்த பிராண்ட் ஆன நைக் (Nike), காணவேர்ஸ் (Converse), மோட் & சண்டான் (Moët & Chandon) நிறுவனங்களுக்கு ஸ்பெஷல் டிசைன் செய்துள்ளது.
ஒப்போ (OPPO) நிறுவனம் ஒப்போ எக்ஸ் ஆம்புஷ் பிளிப்ட் பேட்லாக் (OPPO X AMBUSH Flipped Padlock) கேஸ் சீனா (China), இந்தியா (India), இந்தோனேஷியா (Indonesia), மலேஷியா (Malaysia), சிங்கப்பூர் (Singapore), தாய்லாந்து (Thailand) மற்றும் பிலிப்பைன்ஸ் (Philippines) போன்ற நாடுகளில் இந்த ஸ்பெஷல் மொபைல் கேஸ் விற்பனைக்கு கிடைக்குமென்று அறிமுகம் செய்துள்ளது.
ஒப்போ ஃபைண்ட் N3 ஃபிலிப் சிறப்பம்சம் (Oppo Finc N3 Flip):
இந்த ஒப்போ ஃபைண்ட் N3 ஃபிலிப் சாதனம் 6.8" இன்ச் LTPO ஸ்க்ரீன் உடன் 120Hz ரெஃப்ரஷ்க் ரேட் கொண்ட மெயின் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் இரண்டாம் டிஸ்பிளே 3.2" இன்ச் அளவு கொண்ட அமோல்ட் (AMOLED) டிஸ்பிளே உடன் வருகிறது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்புடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 50Mp + 32MP + 48MP கேமராவுடன் வருகிறது. இது 32MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது டிமென்சிட்டி 9200 பிராசஸர் (Dimensity 9200 processor) உடன் வருகிறது. இது 4300mah பேட்டரி உடன் 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிரியாது. இது ஆண்ட்ராய்டு 13 உடன் இயங்குகிறது.


Click it and Unblock the Notifications








