இந்த வருட பண்டிகை OPPO F21s Pro போனால மாஸ் ஆக போகுது.! இது சாதாரண போன் அல்ல.!

|

பண்டிகை காலம் நெருங்கிவிட்டது. பண்டிகை காலம் என்றாலே மக்கள் நிச்சயமாக புதிய துணிகளை வாங்குவது, பட்டாசு வாங்குவது என்று தான் முன்பெல்லாம் திட்டமிடுவார்கள். ஆனால், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் பண்டிகை கால சிறப்புத் தள்ளுபடிகள் அதிகரித்த பின்னர், மக்கள் துணிகளுடன் புது ஸ்மார்ட்போன் வாங்குவது, ஸ்மார்ட் டிவி வாங்குவது என்று அவர்களுடைய பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டனர்.

இந்த வருட பண்டிகையை சிறப்பாக மாற்ற வருகிறது OPPO F21s Pro

இந்த வருட பண்டிகையை சிறப்பாக மாற்ற வருகிறது OPPO F21s Pro

இந்த வருடத்திற்கான பண்டிகை காலம் நெருங்கிவிட்டதைத் தொடர்ந்து, இப்போதே பல சலுகைகள் பற்றிய விபரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. குறிப்பாக, பண்டிகை காலத்தை முன்னிட்டு சில நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவும் திட்டம் தீட்டிவருகின்றன. அந்த வரிசையில், இப்போது OPPO நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வரும் பண்டிகை காலத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

OPPO F21s Pro ஸ்மார்ட்போனின் டீஸர்

OPPO F21s Pro ஸ்மார்ட்போனின் டீஸர்

OPPO F21s Pro என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை தான் நிறுவனம் அறிமுகப்படுத்தத் தயாராகியுள்ளது. சீன பிராண்ட்டான ஒப்போ, வரவிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் டீஸர்களை சில அற்புதமான சிறப்பம்ச தகவல்களுடன் வெளியிட்டுள்ளது. Oppo F21s Pro இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்ட Oppo F21 மற்றும் F21 Pro உடன் இணையும் புதிய மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு Oppo F19s அறிமுகப்படுத்தப்பட்டதையும் நாம் மறக்க முடியாது.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

OPPO F21s Pro ஜொலிக்கும் கோல்டு போனாக வருகிறதா?

OPPO F21s Pro ஜொலிக்கும் கோல்டு போனாக வருகிறதா?

புதிய OPPO F21s Pro ஆனது Oppo F21 Pro போலவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஸ்டார்லைட் பிளாக் நிறத்துடன், கிலோவிங் டான்லைட் கோல்டு நிறத்தில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டான்லைட் கோல்ட் வண்ண வேரியண்ட் வெளிச்சத்தில் காண்பிக்கும் போது ஜொலிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒப்போ F21s ப்ரோ டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் திறன் உடன் வருகிறது. மேலும் இது பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

தரமான கேமரா உடன் சூப்பர் அம்சங்கள்

தரமான கேமரா உடன் சூப்பர் அம்சங்கள்

இந்த புதிய ஒப்போ F21s ப்ரோ ஸ்மார்ட்போனில் 2MP மைக்ரோஸ்கோபிக் லென்ஸ் மற்றும் 64MP பின்புற கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான Oppo F21 Pro ஆனது, 90Hz உடன் 6.43' இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் வருகிறது. இந்த சாதனம் 8ஜிபி ரேம் உடன் கூடுதலாக 5ஜிபி வரை விரிவாக்கக்கூடியது விர்ச்சுவல் ரேம் உடன் வருகிறது.

உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!

எப்போது? எங்கிருந்து வாங்க கிடைக்கும்?

எப்போது? எங்கிருந்து வாங்க கிடைக்கும்?

இந்த ஸ்மார்ட்போனில் 33W (SUPERVOOC) சார்ஜ்ஜிங்கை ஆதரிக்கும் 4,500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. Oppo F21s Pro ஆனது Amazon India மற்றும் நிறுவனத்தின் ஆன்லைன் பார்ட்னர்கள் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனை நிலையங்களில் மூலம் பண்டிகைக்கு முன்பாக வாங்கக் கிடைக்கும். ஒப்போவிடமிருந்து மிக விரைவில் இந்த சாதனம் குறித்த முழு விவரங்களுடன் அறிமுக தேதி வெளியிடப்படும். இதன் விற்பனை தேதியும் இத்துடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருட பண்டிகை கால சிறப்பு சலுகைகளை மிஸ் பண்ணிடாதீங்க

இந்த வருட பண்டிகை கால சிறப்பு சலுகைகளை மிஸ் பண்ணிடாதீங்க

ஒப்போ இந்த ஆண்டு மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் பண்டிகையை முன்னிட்டு பல சிறந்த சலுகையும் மாபெரும் தள்ளுபடியை வழங்கும் என்பதனால் புது சாதனங்கள் வாங்க இது தான் சரியான நேரம். உங்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் அல்லது புதிய எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்க ஐடியா இருந்தால், இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையைத் தவறவிடாதீர்கள்.

Best Mobiles in India

English summary
OPPO will introduce New OPPO F21s Pro BUdget Phone in India during the coming festive season

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X