Oppo, Vivo, OnePlus-லாம் ஓரம்போங்கடா.. Apple போல்டபில் போன்.. Samsung ரோல்லிங் டிஸ்பிளே போன்.. இனி நாங்க தான்!
ஒப்போ (Oppo), விவோ (Vivo), ஒன்பிளஸ் (OnePlus) போன்ற பிராண்டுகள் விரைவில் அதன் போல்டபில் ஸ்மார்ட்போன் சாதன விற்பனையை நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், போல்டபில் ஸ்மார்ட்போன் (Foldable Smartphone) சந்தையில் இருந்து விலக உள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.
Foldable Smartphone: தெரியாதவர்களுக்கு, ஒப்போ (Oppo) நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டில் போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்து போல்டபில் ஸ்மார்ட்போன் சந்தைக்குள் (foldable smartphone market)உள் நுழைந்தது. அதே நேரத்தில் Vivo அதன் முதல் போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனத்தை 2022 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. Vivo-வின் போல்டபில் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் மட்டும் வெளியிடப்பட்டது.

இந்த இரண்டு முக்கியமான முன்ணனி ஸ்மார்ட்போன் பிராண்டுகள் அனைத்தும் தொடர்ந்து புதிய போல்டபில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இருப்பினும், தென் கொரிய வெளியீட்டின் புதிய அறிக்கையானது, இரண்டு பிராண்டுகளும் போல்டபில் ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கிறது.
இந்த செய்தி துல்லியமாக இருந்தால், ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் கூட புதிய போல்டபில் ஸ்மார்ட்போன் இனி அடுத்து வரும் ஆண்டுகளில் வெளியிடாமல் போக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், ஹுவாய் (Huawei) நிறுவனம் அதன் ட்ரை-ஃபோல்டபில் போனில் (tri-foldable phones) வேலை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மறுபுறம், சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் போர்ட்போலியோவில் ரோலபிள் டிஸ்ப்ளே போனை (rollable display phone) உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. போல்டபில் ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியேறும் சாத்தியம் குறித்து Oppo மற்றும் Vivo நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவதும் இன்னும் வெளியாகவில்லை. எனவே, நிலைமை எவ்வாறு மாறப்போகிறது என்பது நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Oppo மற்றும் Vivo போல்டபில் ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியேறும் முடிவு கடந்த ஆண்டு இந்த பிரிவில் அவர்களின் சந்தைப் பங்கில் குறிப்பிடத்தக்க சரிவு காரணமாக இருக்கலாம் என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
போல்டபில் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவரான ஹுவாய், டேப்லெட் பிசி சந்தையை (tablet PC market) இலக்காகக் கொண்டு Z-வடிவ (z-shape) ட்ரை-போல்டபில் ஸ்மார்ட்போன் (tri-foldable smartphone) சாதனத்தை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த சாதனம் திறக்கப்படும் போது 10 இன்ச் வரை பெரிதாக விரியக்கூடிய டிஸ்பிளேவை வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஹுவாய் ஆண்டுதோறும் 130 மில்லியன் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளது. 40 சதவீத சந்தைப் பங்குடன், ஆப்பிள் ஐபேட் தற்போது டேப்லெட் பிசி சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது.
அதே நேரத்தில் சாம்சங்கின் கேலக்ஸி டேப் சாதனம் 19 சதவீத சந்தைப் பங்குடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. Huawei இன் வளர்ச்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆப்பிள் (Apple) மற்றும் சாம்சங் (Samsung) இரண்டும் தங்கள் போல்டபில் ஸ்மார்ட்போன் தயாரிப்புகளை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது.
கடத்த 2023 ஆம் ஆண்டில் 66 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டு போல்டபில் ஸ்மார்ட்போன் பிரிவில் முன்னிலை வகிக்கும் சாம்சங், ரோலபிள் டிஸ்பிளே ஃபோனில் பணிபுரிவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆப்பிள் தனது முதல் ஹாரிசாண்டல் போல்டபில் ஸ்மார்ட்போன் (Apple horizontal foldable smartphone) சாதனத்தை வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது. இது வதந்தியாக வேகமாக பரவி வருகிறது.
இதன் உற்பத்தி 2026 இல் எதிர்பார்க்கப்படுகிறது. போல்டபில் ஸ்மார்ட்போன்கள் பெரியளவில் விற்பனையை பெறாவிட்டாலும், மிகவே விரைவில் அதிக நிலைக்கு சென்றுவிட்டது. இனி மூன்று முறை மடக்க கூடிய போல்டபில் ஸ்மார்ட்போன்களை நாம் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








