தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒப்போ வழங்கும் ஸ்பெஷல் எடிஷன் லிஸ்ட்.. 'இது' உங்களுக்கு கண்டிப்பா புடிக்கும்..

|

இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் மற்றும் பாகங்கள் பிராண்டுகளில் ஒன்றான ஒப்போ, இந்த பண்டிகை காலத்தைக் கொண்டாடத் தயாராக உள்ளது. பண்டிகை காலத்தைத் தனது ரசிகர்களுடன் கொண்டாடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களின் மீது புதிய சிறப்பு பதிப்பு மாடல்களை அறிமுகப்படுத்துவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் 'புதிய தொடக்கங்களை' வெளிச்சமாக்க, ஒப்போ நிறுவன இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

ரெனோ 6 ப்ரோ 5 ஜி தீபாவளி எடிஷன்

ரெனோ 6 ப்ரோ 5 ஜி தீபாவளி எடிஷன்

இந்த பண்டிகை கால சிறப்புக் கொண்டாட்டமாக தற்போது நிறுவனம் ரெனோ 6 ப்ரோ 5 ஜி தீபாவளி எடிஷன், ஒப்போ எஃப் 19 எஸ் ஸ்பெஷல் எடிஷன் மற்றும் ஒப்போ என்கோ பட்ஸ் ப்ளூ ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் படி, வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று #ASKOPPO பண்டிகை வெளியீட்டு நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சாதனங்கள் எல்லாம் வெளியிடப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5 ஜி தீபாவளி பதிப்பில் என்னவெல்லாம் இருக்கும்?

ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5 ஜி தீபாவளி பதிப்பில் என்னவெல்லாம் இருக்கும்?

ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5 ஜி தீபாவளி பதிப்பைப் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் பண்டிகை காலத்தை கொண்டாடும் வகையில் மெஜஸ்டிக் கோல்ட் நிறத்தில் வரும். இது பொக்கே ஃப்ளேர் போர்ட்ரேட் வீடியோ, ரெனோ க்ளோ, ஏஐ ஹைலைட் வீடியோ போன்ற பல தொழில் முன்னணி தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டின் மேல் ColorOS 11.3 இயங்குதளத்தில் இது இயங்கும். இந்த வரவிருக்கும் ஸ்மார்ட்போன் டிமென்சிட்டி 1200 சிப்செட் மூலம் செயல்படும். இது 65W SuperVOOC ஃப்ளாஷ் சார்ஜிங்கை ஆதரிக்கும்.

இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 'உயிர்' பெற்ற அதிசய பெண்.. உலக மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட நிகழ்வு..இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 'உயிர்' பெற்ற அதிசய பெண்.. உலக மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட நிகழ்வு..

Oppo F19s ஸ்பெஷல் எடிஷன் மாடல் எப்படியானது?

Oppo F19s ஸ்பெஷல் எடிஷன் மாடல் எப்படியானது?

Oppo F19s ஸ்பெஷல் எடிஷன் மாடல் பற்றி பார்க்கையில், இது புதிய AG டிசைனுடன் வரும், குறிப்பிடத்தக்க வகையில், ஒப்போ F19s இன் நிலையான பதிப்பானது 5000mAh பேட்டரி மற்றும் நிறுவனத்தின் 33W ஃப்ளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் கொண்ட மிக நேர்த்தியான ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் சிறந்த தரமான தோற்றத்தையும் உணர்ச்சிகளையும் வழங்குகிறது. இது ஸ்லீக் வடிவமைப்பால் நிரப்பப்படுகிறது. இது இலகுரக மற்றும் நேர்த்தியானதாகத் தோற்றத்தில் அமைந்துள்ளது.

ஒப்போ என்கோ பட்ஸ் ப்ளூ பதிப்பு

ஒப்போ என்கோ பட்ஸ் ப்ளூ பதிப்பு

கடைசியாக, ஒப்போ என்கோ பட்ஸ் ப்ளூ பதிப்பு உள்ளது. இந்த மாத தொடக்கத்தில், நிறுவனம் அதன் சமீபத்திய ஜோடி TWS இயர்பட்களை ஒப்போ என்கோ பட்ஸ் பெயரில் அறிமுகப்படுத்தியது. இது பண்டிகை காலத்தின் காரணமாக நீல வண்ண விருப்பத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இன்கோ பட்ஸ் சத்தத்தை ரத்து செய்வதற்கான AI, ANC அம்சத்துடன் 24 மணிநேர பேட்டரி ஆயுள் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. இது உயர்தர ஆடியோ வெளியீட்டை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

செவ்வாயில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நிலநடுக்கமா? இன்சைட் லேண்டரை அதிரவிட்ட 'மார்ஸ்குவேக்'..செவ்வாயில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நிலநடுக்கமா? இன்சைட் லேண்டரை அதிரவிட்ட 'மார்ஸ்குவேக்'..

#AskOPPO சிறப்பு பதிப்பு மாடல்கள்

#AskOPPO சிறப்பு பதிப்பு மாடல்கள்

இந்த சிறப்பு பதிப்பு மாடல்களை அறிமுகப்படுத்துவதைத் தவிர, இந்த நிகழ்ச்சி பயனர்களையும் ரசிகர்களையும் நேரடியாக பிராண்டுடன் இணைக்க அனுமதிக்கும். #AskOPPO என்ற ஹேஷ்டேக் மூலம் அதன் சமூக ஊடகக் கையாளுதலில் கேள்விகளைக் கேட்கும். இந்நிகழ்வானது வேடிக்கையாகவும், ஈர்க்கக்கூடியதாகவும், உற்சாகமானதாகவும், நாட்டில் பண்டிகை உணர்வை மேம்படுத்துவதற்கான ஒரு தளமாகச் செயல்படுகிறது.

சுவாரசியமான கூடுதல் செய்திகளுக்கு

சுவாரசியமான கூடுதல் செய்திகளுக்கு

ஒப்போ தொடர்பான கூடுதல் செய்திகளுக்கு அல்லது ஒப்போ ரெனோ 6 ப்ரோ தொடர்பான செய்திகள் மற்றும் முழு விபரங்கள் பற்றி தெரிந்துகொள்ள எங்கள் பட்டியலில் உள்ள செய்தியை பார்வையிடுங்கள். ஸ்மார்ட்போன், கேட்ஜெட்ஸ், தொழில்நுட்பம், அறிவியல், பூமி, விண்வெளி, செவ்வாய் கிரகம் போன்ற பிரிவின் கீழ் உள்ள சுவாரசியமான செய்திகளை படிக்கவும் மறக்காதீரகள். எங்களின் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo to Launch Special Edition Products to Celebrate Diwali Festive Season In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X