இனி நெருங்க முடியாது: 9 நிமிடம் போதும்., இது சூப்பர்வூக் ப்ளாஷ் சார்ஜிங் பாஸ்- 240 வாட்ஸ் உடன் ஒப்போ!
9 நிமிடங்களில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் வகையிலான ஒப்போவின் 240 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் குறித்து முழு விவரங்களை பார்க்கலாம்.

சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்
பார்சிலோனாவில் நடந்த வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்-ல் ஒப்போ அதன் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தின் சமீபத்திய பதிப்பை வெளியிட்டது. ஒப்போவின் இந்த புதிய தொழில்நுட்பம் உலகிலேயே அதிவேக சார்ஜ் செய்யும் ஸ்மார்ட்போன் என்ற சாதனையை முறியடித்து உள்ளது. இந்த புதிய சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமானது 240 வாட்ஸ் வேகமான சார்ஜிங் வீதத்தை கொண்டிருக்கும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒப்போவின் 240 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்
9 நிமிடங்களில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் வகையிலான ஒப்போவின் 240 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் குறித்து பார்க்கலாம். அதேபோல் ஒப்போ பேட்டரி ஹெல்த் இன்ஜினுக்கான 150 வாட்ஸ் சூப்பர் வூக் ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பமும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் வெளியிடப்பட்டது. இந்த தொழில்நுட்பம் ஒப்போ கடந்த வாரம் அறிமுகப்படுத்திய ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்5 தொடரில் சேர்க்கப்பட்டுள்ளது. சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றமாக ஒப்போ 240 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த 240 வாட்ஸ் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மூலமாக ஸ்மார்ட்போன்களை அதிவேகமாக சார்ஜ் செய்ய முடியும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வெறும் 9 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும்
240 வாட்ஸ் சூப்பர் வூக் ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் குறித்து பார்க்கையில், இந்த தொழில்நுட்பம் மூலமாக 4500 எம்ஏஎச் பேட்டரியை 1 முதல 100 சதவீதம் வரை வெறும் 9 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும். அதே பேட்டரியை 150 வாட்ஸ் சூப்பர் வூக் ஃப்ளாஷ் சார்ஜ் வசதி மூலம் 50 சதவீதத்தை 5 நிமிடங்களிலும், 100 சதவீத சார்ஜிங்கை 15 நிமிடங்களிலும் சார்ஜ் செய்யலாம் என ஒப்போ குறிப்பிட்டது. புதிய 240 வாட்ஸ் சூப்பர் வூக் ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தின் மூலம் ஒப்போ டைப் சி பயன்படுத்தி 24 வோல்ட் மற்றும் 10 ஆம்பியர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறந்த சார்ஜிங் தொழில்நுட்பத்தை வெளியிடுவதில் இது கவனம் செலுத்துகிறது.

பேட்டரி பாதுகாப்பு கண்காணிப்பு சிப்
மூன்று சார்ஜ் பம்புகளுடன் இது வேலை செய்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் ஆற்றலை 10 வோல்ட்டை 24 ஆம்பியர் ஆக மாற்ற முடியும். அதேபோல் இந்த தொழில்நுட்பம் வெப்பச் சிதறலுக்கான பாதுகாப்பை சோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் இது பேட்டரி பாதுகாப்பு கண்காணிப்பு சிப் உடன் வருகிறது. ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் போது ஏற்படும் பிற குறிக்கீட்டை சரி செய்ய இந்த சிப் பயன்படுகிறது. சார்ஜ் செய்யும் போது ஏற்படும் இதுபோன்ற குறுக்கீடே ஸ்மார்ட்போன்களை தீப்பிடிக்கவும் வெடிக்கவும் வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெப்பமடையும் அபாயத்தை குறைப்பதற்கு என இந்த சாதனத்தில் 13 வெப்பநிலை சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும் என ஒப்போ கூறுகிறது.

பேட்டரி ஹெல்த் இன்ஜின் தொழில்நுட்பம்
தற்போதைய ஒப்போவின் 150 வாட்ஸ் சூப்பர் வூக் பேட்டரி ஹெல்த் இன்ஜின் ஆனது ஒப்போவின் முந்தைய 125 வாட்ஸ் சூப்பர் வூக் ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த சார்ஜிங் தொழில்நுட்பம் பேட்டரி ஹெல்த் தொழில்நுட்பத்துடன் ஆதரிக்கப்படுகிறது. 1600 சார்ஜ் சுழற்சிகளுக்கு பிறகும் இந்த சாதனத்தின் பேட்டரி திறன் 80 சதவீதம் இருக்கும் வகைியல் பேட்டரி ஹெல்த் இன்ஜின் செயல்படுகிறது. தற்போது பயன்படுத்தப்படும் தரத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இனி எதிர்காலத்தில் வரும் பெரும்பாலான உயர்நிலை ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் பேட்டரி ஹெல்த் இன்ஜின் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








