பாப் அப் ரியர் கேமரா அம்சத்துடன் வெளிவரும் Oppo ஸ்மார்ட்போன்.. இப்படி ஒரு கேமராவை பார்த்திருக்கமாட்டீங்க..

|

Oppo நிறுவனம் அதன் டிவிட்டர் பக்கம் வழியாக மிகவும் தனித்துவமான உள்ளிழுக்கும் ஸ்மார்ட்போன் கேமரா தொழில்நுட்பத்தை டீஸ் செய்துள்ளது. இந்த பதிவு அனைவரையும் கவர்ந்துள்ளது. சீன தொழில்நுட்ப நிறுவனமான ஒப்போ நிறுவனம் இன்று, உள்ளிழுக்கும் அல்லது பாப் அப் அம்சத்துடன் இயங்கும் பின்புற கேமராவைக் கொண்ட ஸ்மார்ட்போனைக் காட்டும் கிளிப்பை அதன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புதிய பாப் அப் ரியர் கேமரா தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது, இதில் என்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்று பார்க்கலாம்.

ஒப்போவின் புதிய கேமரா தொழில்நுட்பம் பாப் அப் ரியர் கேமரா

ஒப்போவின் புதிய கேமரா தொழில்நுட்பம் பாப் அப் ரியர் கேமரா

மேலும் ஒப்போவின் இந்த ஸ்மார்ட்போன் எவ்வாறு செயல்படும் என்பதை நிறுவனத்தின் டீசர் தெளிவாக குறிக்கிறது. கேமரா மாட்யூல் நீடித்ததாகவும், நீர் எதிர்ப்புத் தன்மையுடனும் இருக்கும் என்றும் டீஸ் தகவல் வெளிப்படுத்தியுள்ளது. ஒப்போ நிறுவனத்தின் வருடாந்திர தொழில்நுட்ப நிகழ்வான Oppo Inno Day 2021க்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்தச் செய்தி வெளி வந்துள்ளது. இது இரண்டு நாள் நிகழ்வாக நிகழும். மேலும் Oppo பல்வேறு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் தயாரிப்புகளைக் காண்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாப் அப் ரியர் கேமரா எப்படி செயல்படும்?

பாப் அப் ரியர் கேமரா எப்படி செயல்படும்?

டிவிட்டரில் வெளியிடப்பட்ட ஒரு சிறிய வீடியோவுடன், Oppo அதன் சுய மேம்படுத்தப்பட்ட உள்ளிழுக்கும் கேமரா மற்ற ஸ்மார்ட்போன்களில் பாப் அப் கேமராக்களைப் போல என்று கூறுகிறது. கேமராவின் செயல்பாடு மற்றும் அம்சங்களையும் வீடியோ சுட்டிக்காட்டுகிறது. 50 மிமீ குவிய நீளம் மற்றும் எஃப்/2.4 துளை கொண்ட லென்ஸுடன் 1/1.56 இன்ச் சென்சார் பொருத்தப்பட்டிருக்கும் என்று கேமரா தொகுதி சுட்டிக்காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PF விதி மாற்றம்: உங்கள் EPF கணக்கில் கிடைக்கும் ரூ. 7 லட்சம் இலவச பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?PF விதி மாற்றம்: உங்கள் EPF கணக்கில் கிடைக்கும் ரூ. 7 லட்சம் இலவச பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

வாட்டர் ப்ரூப் அம்சத்துடன் ரியர் கேமராவில் அதிநவீன தொழில்நுட்பம்

வாட்டர் ப்ரூப் அம்சத்துடன் ரியர் கேமராவில் அதிநவீன தொழில்நுட்பம்

பாயிண்ட் அண்ட் ஷூட் கேமராக்களில் நாம் பார்ப்பது போல , இந்த கேமராதொகுதியிலிருந்து வெளியே வரும் கேமராவை வீடியோ காட்டுகிறது. பின்னர் அதன் அசல் நிலையில் மீண்டும் கேமரா இறங்கி அசல் நிலைக்குச் செல்கிறது. முன்பே தெரிவித்தது போல இந்த கேமரா வாட்டர் ப்ரூப் அம்சத்துடன் வருகிறது. இதை நிரூபிக்கும் விதமாக கேமராவில் தண்ணீர் தெளிக்கப்படுவதை டீசர் காட்டுகிறது. கேமரா தொகுதி அல்லது சின்ஹட்ட தொலைபேசி நீர் எதிர்ப்புத் திறன் கொண்டது என்பதை இதுக் குறிக்கிறது.

ஒப்போவின் டீசர்என்ன தகவலை வழங்குகிறது?

ஒப்போவின் டீசர்என்ன தகவலை வழங்குகிறது?

இது நீரில் நீடித்து உழைக்கவும் மற்றும் துளிகளால் கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்று டீசர் பரிந்துரைக்கப்படுகிறது. கேமராவின் செயல்பாடு பற்றி எந்த தகவலும் இல்லை என்றாலும், ஆப்டிகல் ஜூம் திறன்களை வழங்க இது பயன்படுத்தப்படலாம் என்று ஊகிக்கப்படுகிறது. டிசம்பர் 14 ஆம் தேதி, சீனாவில் நடைபெறும் Inno World மெய்நிகர் நிகழ்வில் Oppo தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்துகிறது. டிசம்பர் 14 ஆம் தேதி அதிகாலை 2.30 IST மணிக்கு இந்த நிகழ்வு தொடங்கும்.

உங்கள் போனில் டிஜிட்டல் ஆதாரை பதிவிறக்கம் செய்து சேமிப்பது எப்படி? இது கட்டாயம் தேவைப்படும்..உங்கள் போனில் டிஜிட்டல் ஆதாரை பதிவிறக்கம் செய்து சேமிப்பது எப்படி? இது கட்டாயம் தேவைப்படும்..

Oppo மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்

Oppo மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்

ஒப்போ நிறுவனம் இரண்டு நாள் நிகழ்வின் போது புதிய தயாரிப்புகள் மற்றும் புதுமைகளைக் காண்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Oppo என்ன வெளியிடுகிறது என்பது பற்றிய சரியான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறியப்படவில்லை. ஆனால், நிறுவனம் Oppo மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீன டிப்ஸ்டர் WHYLAB சமீபத்தில் ஒப்போ மடிக்கக்கூடிய தொலைப்பேசியின் ஸ்கிரீன் ஷாட்களை வெய்போவில் சீன தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (எம்ஐஐடி) சான்றிதழ்களை வெளியிட்டது.

விரிவாக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டிஸ்பிளே

விரிவாக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டிஸ்பிளே

சமீபத்தில் விவோ நிறுவனம் அதன் விரிவாக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டிஸ்பிளே கொண்ட மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஆனால், இதற்கு முன்னரே ஒப்போ நிறுவனம் அதன் ரோலபில் டிஸ்பிளே கொண்ட விரிவாக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை உலகிற்கு காண்பித்தது. இந்த அதிநவீனமான டிஸ்பிளே பன்பை கொண்ட ஸ்மார்ட்போன்கள் பற்றி பார்க்கையில். சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ எதிர்காலத்தில் விரிவாக்கக்கூடிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் தயாராகி வருவது போல் தெரிகிறது.

வாட்ஸ்அப் நம்பர் சேவ் செய்யாமல் எப்படி மெசேஜ் செய்வது? WhatsAppன் அடுத்த மிரட்டல் அம்சங்கள் என்ன தெரியுமா?வாட்ஸ்அப் நம்பர் சேவ் செய்யாமல் எப்படி மெசேஜ் செய்வது? WhatsAppன் அடுத்த மிரட்டல் அம்சங்கள் என்ன தெரியுமா?

விரிவாக்கக்கூடிய டிஸ்பிளே உடைய புது ஸ்மார்ட்போனின் டிசைன்

விரிவாக்கக்கூடிய டிஸ்பிளே உடைய புது ஸ்மார்ட்போனின் டிசைன்

இந்த விரிவாக்கக்கூடிய டிஸ்பிளே உடைய புது ஸ்மார்ட்போனின் டிசைன் இப்போது உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பில் நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. இந்த காப்புரிமை விண்ணப்பத்தின் வரைபடங்கள் எதிர்காலத்தில் இந்த விரிவாக்கக்கூடிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும் என்பதைக் காட்டியுள்ளது. இது பற்றிய கூடுதல் சுவாரசியமான தகவலை இப்போது பார்க்கலாம்.

'இருக்கு ஆனா இல்லை' டிஸ்பிளே அம்சம்

'இருக்கு ஆனா இல்லை' டிஸ்பிளே அம்சம்

எஸ்ஜே சூர்யா சொல்வது போல், "ஒன்னு இருக்கு, ஆனா அதுவே அப்புறமா வேற மாதிரி இருக்கு", "இருக்கு ஆனா இல்லை" என்பது போன்ற பாணியில் விவோவின் அடுத்த எதிர்கால ஸ்மார்ட்போனின் மாடல் அமைந்துள்ளது என்பது வேடிக்கை. இருப்பினும், இந்த அட்டகாசமான டிசைனை நிறுவனம் உருவாக்குவதற்கு ஏகப்பட்ட சவாலைச் சந்திக்க வேண்டியது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படி பியூச்சர்ஸ்டிக் டிசைன்களை மக்களும் அதிகம் விரும்புவதால், இது ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள டிசைன்

நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள டிசைன்

விவோ நிறுவனம் முயற்சி செய்துள்ள இந்த புதிய விரிவாக்கக் கூடிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்களை நிறுவனம் உருவாக்க முயல்கிறது என்பது சமீபத்திய அறிவிப்பின் மூலம் உறுதியாகியுள்ளது. இது எந்த அளவிற்குச் சாத்தியமாகும் என்பது நமக்கு இப்போதே தெரியவில்லை, ஆனால், இந்த டிசைன் இப்போதே ஸ்மார்ட்போன் பயனர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த டிஸ்பிளே பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனில் டேப்லெட் போன்ற அனுபவம்

ஸ்மார்ட்போனில் டேப்லெட் போன்ற அனுபவம்

குறிப்பாகப் பயனர்கள் தங்களின் ஆவணங்களைப் படிப்பது, வீடியோக்களைப் பார்ப்பது, வீடியோ எடிட்டிங்கிற்கான கிளிப்களைப் பதிவு செய்வது மற்றும் பலவற்றை உள்ளடக்கிய விரிவான செயல்பாடுகளையும், கிட்டத்தட்ட அனைத்தையும் தங்கள் ஸ்மார்ட்போன்களில் செய்ய விரும்புகிறார்கள். இப்படியான செயல்பாட்டிற்கு டிஸ்பிளே பறந்து விரிந்திருந்தால் பயனர்களின் அனுபவம் மேலோங்கும் தானே. இதனால் இந்த எதிர்பார்க்கப்படும் Vivo-வின் அடுத்த சாதனத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முதலில் இதை டெமோ செய்தது ஒப்போ நிறுவனம் தான்

முதலில் இதை டெமோ செய்தது ஒப்போ நிறுவனம் தான்

இருப்பினும் இது சுவாரஸ்யமானது, ஏனெனில் விரிவாக்கக்கூடிய டிஸ்பிளேக்கள் இன்னும் பொதுவான விஷயமாகவில்லை என்பதே உண்மை. ஏனெனில், இதற்கு முன்னாள் இந்த ஐடியாவை சமர்ப்பித்த Oppo கூட இன்னும் அதன் விரிவாக்கக்கூடிய டிஸ்பிளேயுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை சந்தையில் வணிக சாதனமாக அறிமுகப்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனம். ஆனால், நிறுவனம் இந்த விரிவாக்கக்கூடிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்கள் மூலம் என்ன செய்ய முடியும் என்பதை நிறுவனம் டெமோ செய்து காட்டியது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo Teases Retractable Smartphone Camera Technology With New Smartphone Model: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X