ஒப்போ ஸ்மார்ட் டிவி, இயர்பட்ஸ் அறிவிப்பு: சுவர் முழுவதும் டிவி., காது முழுவதும் அதிரும் சத்தம்- விலை இதோ!

|

டிவிகள் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அடுப்பு இல்லாத வீடுகள் கூட கண்டறியலாம் ஆனால் டிவிகள் இல்லாத வீடு என்பது அபூர்வமாகி வருகிறது. அதற்கேற்ப இந்திய சந்தையில் ஸ்மார்ட்டிவிகள் விலை நாளுக்கு நாள் மலிவாகி வருகின்றன. அதேபோல் தரம் மற்றும் அம்சங்களும் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கிறது.

தியேட்டர் மூடிய நிலையில் புதுத் திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளயாகத் தொடங்கின. தற்போது திரையரங்கும் திறந்திருந்தாலும் குறிப்பிட்ட திரைப்படங்கள் ஓடிடி தளத்திலேயே வெளியாகி வருகின்றன. மேலும் புதிதாக ஓடிடி மூலம் வெளியாகும் திரைப்படங்களை தியேட்டரில் பார்க்க வாய்ப்பில்லை எனவே அந்த படங்களை வீட்டிலேயே தியேட்டர் தர அனுபவத்துடன் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். இதை பார்ப்பதற்கு சிறந்த திரை அனுபவம் மிக்க ஸ்மார்ட்டிவிகளை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர். அதற்கு ஏற்ப ஒப்போ ஸ்மார்ட்டிவி வெளியாகிறது.

ரெனோ 7 தொடரின் கீழ் ஒப்போ புதிய இயர்பட்ஸ், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட மேலும் சில புதிய தயாரிப்புகளை அறிவித்துள்ளது. அதேபோல் புதிய இயர்பட்ஸ் வரிசையில் ஒப்போ என்கோ ஃப்ரீ 2 மற்றும் என்கோ எம்32 உள்ளிட்டவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிராண்ட் அசல் வாட்ச்-ன் என்எஃப்சி மாறுபாட்டையும் கொண்டு வருகிறது. இது ரெனோ 7 தொடருடன் விரைவில் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. அதேபோல் ஸ்மார்ட் டிவி ஆர்1 என்ஜாய் பதிப்பு ஒப்போவின் சமீபத்திய டிவி ஆகும். மேலும் இந்த ஒப்போ ஸ்மார்ட் டிவி ஆர்1-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ஸ்மார்ட்டிவி ஆர் 1 என்ஜாய் எடிஷன் அம்சங்கள்

ஒப்போ ஸ்மார்ட்டிவி ஆர் 1 என்ஜாய் எடிஷன் அம்சங்கள்

டிவிகள் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒப்போ ஸ்மார்ட் டிவி ஆர்1 என்ஜாய் பதிப்பு ஆனது 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இரண்டு திரை அளவுகளில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மாடல்களும் 4கே தர ஆதரவோடு (3840 x 2160 பிக்சல்கள்) திரை தெளிவுத்திறனை கொண்டுள்ளது. இது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1.07 பில்லியன் வண்ணங்கள், குறைந்த ப்ளூ ஒளி பயன்முறை உள்ளிட்ட பலவற்றை ஆதரிக்கின்றன. இது எச்டிஆர் 10, எச்டிஆர் 10+ மற்றும் எச்எல்ஜி ஆதரவோடு வருகிறது. ஹூட்டின் கீழ் 55 இன்ச் குவாட் கோர் ஏஆர்எம் கோர்டெக்ஸ் ஏ53 சிபியு உடன் வருகிறது. அதேபோல் 65 இன்ச் குவாட் கோர் ஏஆர்எம் கோர்டெக்ஸ் ஏ73 சிபியு உடன் வருகிறது.

இரண்டு அளவுகளில் அறிமுகம்

இரண்டு அளவுகளில் அறிமுகம்

இரண்டு மாடல்களும் 2 ஜிபி ரேம் வசதியோடு வரும். இது 55 இன்ச் மாறுபாடானது 16 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. அதேபோல் உயர்நிலை மாறாபாடான 65 இன்ச் வேரியண்ட் 32 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. ஒப்போ ஸ்மார்ட்டிவி ஆர்1 என்ஜாய் பதிப்பு கலர் ஓஎஸ் டிவி இயங்குதளத்தில் இயங்குகிறது.

30 வாட்ஸ் ஸ்பீக்கருடன் ஒப்போ ஸ்மார்ட் டிவி

30 வாட்ஸ் ஸ்பீக்கருடன் ஒப்போ ஸ்மார்ட் டிவி

ஒப்போ ஸ்மார்ட் டிவியின் இரண்டு வகைகளும் 2 x USB 2.0, 1 x DTMB மற்றும் 1 x LAN ஆகிய அணுகலோடு வருகிறது. இருப்பினும் 55 இன்ச் மாடல் ஆனது 3 x HDMI 2.0 உடன் வருகிறது. 65 இன்ச் வேரியண்ட் ஆனது 3 x HDMI 2.1 உடன் வருகிறது. ஒப்போ ஸ்மார்ட் டிவி ஆர்1 என்ஜாய் பதிப்பானது டைன்ஆடியோவில் ட்யூன் செய்யப்பட்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கருடன் வருகிறது.

ஒப்போ ஸ்மார்ட் டிவி ஆர்1 பதிப்பு

ஒப்போ ஸ்மார்ட் டிவி ஆர்1 பதிப்பு

ஒப்போ ஸ்மார்ட் டிவி ஆர்1 பதிப்பின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். ஒப்போ ஸ்மார்ட் டிவி ஆர்1 என்ஜாய் பதிப்பானது 55 இன்ச் வேரியண்ட் இந்திய மதிப்புப்படி ரூ.46,900 என்ற விலையில் வருகிறது. அதேபோல் 65 இன்ச் வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.58600 என இருக்கும் என கூறப்படுகிறது. இந்த இரண்டு வகைகளும் நவம்பர் 30 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ என்கோ ஃப்ரீ 2ஐ அம்சங்கள் மற்றும் விலை

ஒப்போ என்கோ ஃப்ரீ 2ஐ அம்சங்கள் மற்றும் விலை

ஒப்போ என்கோ ஃப்ரீ 2ஐ இயர்பட்ஸ் ஸ்டெம் போன்ற வடிவமைப்பு மற்றும் 10மிமீ ஆடியோ டிரைவர்களுடன் வருகிறது. இயர்பட்ஸ் 42 டெசிபல் வரை சத்தத்தை தடுக்கக்கூடிய அம்சத்தை கொண்டிருக்கிறது. பேட்டரியை பொறுத்தவரை இயர்பட்ஸ்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் ஆறரை மணிநேரம் வரை ஆயுளையும், சார்ஜிங் கேஸ் உடன் 30 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளையும் நீட்டிப்பு செய்யலாம். இது ப்ளூடூத் 5.2, டைப் சி சார்ஜிங் முறை, அதிகாரப்பூர்வ ஐபி54 மதிப்பீடு உள்ளிட்ட அணுகலோடு இந்திய விலைப்படி ரூ.5800 என இந்த சாதனம் வருகிறது.

ஒப்போ ஸ்மார்ட் டிவி ஆர்1 என்ஜாய் பதிப்பு ஆனது 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இரண்டு திரை அளவுகளில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மாடல்களும் 2 ஜிபி ரேம் வசதியோடு வரும். இது 55 இன்ச் மாறுபாடானது 16 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் 65 இன்ச் வேரியண்ட் 32 ஜிபி உள்சேமிப்புடனும் வருகிறது. ஒப்போ ஸ்மார்ட்டிவி என்ஜாய் பதிப்பு ஆனது கலர் ஓஎஸ் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 3 x HDMI 2.1 உடன் வருகிறது. மேலும் இந்த டிவியில் டைன் ஆடியோ ஆதரவு இருக்கிறது. இதன்மூலம் ட்யூன் செய்யப்பட்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இயக்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo Smart TV R1 Enjoy Edition SmartTV and Enco Free 2i Announced With 60HZ Refresh Rate, 1.07 Billion Colours

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X