Home
News

இரவோடு இரவாக பணிநீக்கம்.. நாளையில இருந்து வராதீங்க.. முடிவுக்கு வந்த OPPO-வின் சைடு பிஸ்னஸ்.. ஊழியர்கள் ஷாக்!

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஒப்போவின் (Oppo) துணை நிறுவனம் ஒன்று திடீரென இழுத்து மூடப்பட்டுள்ளது. அதைவிட கொடுமையான விஷயம் என்னவென்றால், அந்நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு தாங்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறோம் என்பது குறித்த தகவல் ஒரு தினத்திற்கு முன்பாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸெகு (Zeku) என்கிற துணை நிறுவனத்தை ஒப்போ நிறுவனம் ஷட் டவுன் (Shut Down) செய்வதாக அறிவித்துள்ளது. இது ஒப்போவிற்கு சொந்தமான சிப் டிசைன் (Chip design) நிறுவனமாகும். உள்நாட்டிலேயே சிப்களை (In-house Chips) தயாரிக்கும் நோக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இரவோடு இரவாக முடிவுக்கு வந்த OPPO-வின் சைடு பிஸ்னஸ்!

ஸ்மார்ட்போன் சந்தையில் உள்ள சவால்கள் (Challenging Smartphone Market) மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை (Global Economic Uncertainties) ஆகிய இரண்டு காரணங்களை முன்வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது. "நீண்ட கால வளர்ச்சிக்காக கடினமான மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. ஸெகுவின் செயல்பாட்டை நிறுத்த முடிவு செய்துள்ளோம்" என்று ஒப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒப்போவின் இந்த திடீர் நடவடிக்கை குறித்த தகவல், ஒரு நாளுக்கும் குறைவான இடைவெளியில் தான் தங்களை வந்து சேர்ந்ததாக ஸெகு ஊழியர்கள் (Zeku Employees) கூறுகின்றனர். பெயர் கூற விரும்பாத ஒரு ஊழியர், நாளை முதல் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்று தன்னிடம் கூறப்பட்டதாக சீன செய்தித்தாள் ஒன்றிடம் கூறியுள்ளார்.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், இரண்டு வாரங்களுக்கு முன்பு, சிப் ஆர்கிடெக்சர் இன்ஜினியர் (Chip Architecture Engineer), சிப் வெரிஃபிகேஷன் மற்றும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் (Chip Verification Software engineer) போன்ற பல்வேறு பதவிகளுக்கு புதிய தொழிலாளர்களை தேடும் ஜாப் போஸ்டர்களை (Job Posters) ஸெகு நிறுவனம் வெளியிட்டு இருந்ததாம்.

அறியாதோர்களுக்கு, ஒப்போ நிறுவனம் அதன் சொந்த டிவைஸ்களுக்கான சிப்களை உருவாக்க ஸெகு நிறுவனத்தை கடந்த 2019 ஆம் ஆண்டில் தொடங்கியது. இந்நிறுவனத்தில் சுமார் 3,000 தொழிலாளர்கள் உள்ளனர். ஸெகுவின் அலுவலகங்கள் ஜப்பானின் யோகோஹாமா நகரத்திலும், சான் டியாகோ மற்றும் கலிபோர்னியாவிலும் உள்ளன.

ஒப்போ நிறுவனத்தின் உயர்நிலை ஸ்மார்ட்போன்களில் காணப்படும் ஏஐ-பவர்டு இஇஜி சிக்னல் ப்ராசஸர் (AI-powered Image Signal Processor) ஆன மாரிசிலிகான் எக்ஸ் (MariSilicon X) மற்றும் ப்ளூடூத் சிப் (Bluetooth Chip) ஆன மாரிசிலிகான் ஒய் (MariSilicon Y) உள்ளிட்ட மாரிசிலிகான் சிப்களில் ஸெகு பணிபுரிந்துள்ளது.

மூன்றாம் தரப்பு சிப்மேக்கர்கள் (Third-party chipmakers) மீதான சார்புநிலையை (Dependency) குறைக்க வேண்டும் என்கிற முக்கிய நோக்கத்தின் கீழ் உருவான இந்த இன்-ஹவுஸ் சிப்செட் நிறுவனமானது தற்போது சத்தமின்றி இழுத்து மூடப்பட்டுள்ளது; ஆகையால் இனிமேல் புதிய மாரிசிலிகான் சிப்களும் (New MariSilicon chips) தயாரிக்கப்படாது.

நல்ல விஷயம் என்னவென்றால், மாரிசிலிகான் எக்ஸ் சிப்களை பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஒப்போ நிறுவனத்தின் இந்த ஷட் டவுன் நடவடிக்கையால் பாதிக்கப்படாது. சீனாவில் முக்கியமான ஸ்மார்ட்போன் பிராண்ட் (Chinese smartphone manufacturer) ஆன ஒப்போ, முதல் காலாண்டில் உலகளாவிய ஏற்றுமதியில் (Global shipments) நான்காவது இடத்தை பிடித்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Shut Down Its In House Chip Development Division Zeku Due to Global Economic Uncertainties
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X