Oppo Reno8 ஸ்மார்ட்போனை வாங்க இந்த 5 காரணங்களுக்கு மேல் வேறு என்ன வேண்டும்?

|

OPPO Reno சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது சிறந்த பயனர் அனுபவங்களை வழங்கும் நிறுவனத்தின் பாரம்பரியத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஒப்போவின் கண்கவர் வடிவமைப்புடன் சேர்த்து லேட்டஸ்ட் ரெனோ ஸ்மார்ட்போன்கள் ஆனது சிறந்த-இன்-கிளாஸ் டிஸ்ப்ளேவையும், கேமரா செட்டப்களையும், அதிநவீன ஹார்ட்வேரையும் உள்ளடக்கி உள்ளன. ​​OPPO அதன் இரண்டு புதிய தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அது - Reno8 மற்றும் Reno8 Pro ஆகும்.

Oppo Reno8 ஸ்மார்ட்போனை வாங்க இந்த 5 காரணங்களுக்கு மேல் வேறு என்ன வேண்

இந்த இரண்டு போன்ளுமே, ஸ்மார்ட்போன் செயல்திறனை புதிய உயரங்களுக்கு தள்ளும் அற்புதமான தொழில்நுட்பங்களுடன் நிரம்பியுள்ளன. குறிப்பாக Reno8 ஸ்மார்ட்போன்! ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கும் இது, ஏன் அதன் விலை வரம்பில் சிறந்த மாடலாக இருப்பதற்கான ஐந்து காரணங்கள் இதோ:

Oppo Reno8 ஸ்மார்ட்போனை வாங்க இந்த 5 காரணங்களுக்கு மேல் வேறு என்ன வேண்

01. மிகவும் மேம்பட்ட கேமரா சிஸ்டம்!

Reno8 ஆனது ஒரு சிறந்த ரியர் கேமராவை இன்னும் மேம்படுத்தி, சிறந்த-இன்-கிளாஸ் புகைப்பட அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்766 ஃபிளாக்ஷிப் சென்சார் அடங்கிய ட்ரிபிள் லென்ஸ் ரியர் கேமரா உள்ளது, இது ஸ்டில் போட்டோகிராஃபி மற்றும் வீடியோக்கள் என இரண்டிலுமே நம்மை பிரமிக்க வைக்கிறது. இதன் 50MP IMX766 சென்சார் ஆனது 1/1.56 என்கிற ஒரு பெரிய சென்சார் அளவைக் கொண்டுள்ளது, இது அழகான போர்ட்ரெய்ட் வீடியோக்களையும் மிருதுவான ஸ்டில் போட்டோக்களையும் உருவாக்க போதுமான அளவு ஒளியை அனுமதிக்கிறது, குறிப்பாக இரவு நேரங்களில்!

Oppo Reno8 ஸ்மார்ட்போனை வாங்க இந்த 5 காரணங்களுக்கு மேல் வேறு என்ன வேண்

மேலும் இதன் 50எம்பி சோனி ஃபிளாக்ஷிப் சென்சார் ஆனது வன்பொருள் அடிப்படையிலான DOL-HDR தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது, இது ப்ரைட்னஸ் மற்றும் ஷேட்ஸ்களின் சரியான சமநிலையுடன் வீடியோவின் டைனமிக் ரேன்ஜ்-ஐ அதிகரிக்கிறது. பெரும்பாலான ஸ்மார்ட்போன் கேமராக்களில் சிக்கலான விவரங்களை, மற்றும் மோசமான ஒளி நிலமைகளில் தெளிவான வண்ணங்களைப் படம்பிடிக்கும் இத்தகைய HDR திறன்கள் இல்லை. அனால் Reno8 மூலம், சூரிய ஒளி அல்லது கடுமையான இயற்கைக்கு மாறான ஒளிநிலைமைகளுக்கு எதிராக போஸ் கொடுக்கும்போதும் கூட பிரகாசமான மற்றும் கூர்மையான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை நீங்கள் பதிவு செய்யலாம்.

இதன் அல்ட்ரா நைட் வீடியோ மற்றும் அல்ட்ரா எச்டிஆர் வீடியோ மோட்-கள் ஆனது AI ஆதரவு கொண்ட கேமரா மோட்கள் ஆகும். இவைகள் ஒளி நிலைமைகளை தானாகவே உணர்ந்து, முக்கியமான வன்பொருள்-மென்பொருள் கேமரா மாற்றங்களைச் செய்து, சிறந்த வீடியோக்களை பதிவு செய்ய உதவும்.

சிறந்த-இன்-கிளாஸ் செல்பீகளுக்கான 32MP Sony IMX709 சென்சார்!

ரியர் கேமராக்களை தொடர்ந்து, Reno8 5G ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32MP செல்பீ ஷூட்டர் உள்ளது. இது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பிக்சல் அரே டிசைன் உடன் செல்பீ கேமை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. இதன் ஃபிளாக்ஷிப் சோனி IMX709 சென்சார் மற்றும் ஒயிட் பிக்சல்ஸ் கொண்ட பிரத்யேக RGBW சென்சார் ஆனது ஒளி உட்கொள்ளலை 60% அதிகரிக்கவும், "தொந்தரவுகளை" 35% குறைக்க பயன்படுகிறது, இதன் விளைவாக இன்னும் பிரகாசமான மற்றும் தெளிவான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் கிடைக்கும்.

மேலும், இதன் செல்பீ கேமரா RAW டொமைனில் பேரலல் R/G/B த்ரீ-சேனல் AI நாய்ஸ் ரிடெக்ஷனையும் பயன்படுத்துகிறது, இது மிகவும் சவாலான ஒளி நிலைகளிலும் மிகத் தெளிவான போர்ட்ரெயிட்களை கைப்பற்ற உதவுகிறது. இதன் மேம்பட்ட கேமரா தொழில்நுட்பம் நைட் டைம் போர்ட்ரெயிட்களை படம்பிடிப்பதை கூட சாத்தியமாக்குகிறது.

இந்த செல்பீ கேமரா OPPO-வின் AI போர்ட்ரெய்ட் ரீடூச்சிங் அம்சத்திலிருந்தும் பயனடைகிறது. இது 193 முக அம்சங்களை அடையாளம் காணும், மேலும் இந்த அல்காரிதம் ஒவ்வொரு வகை முகத்திற்கும் வெவ்வேறு விதமாக படங்களை சரிசெய்கிறது மற்றும் க்ரூப் செல்பீக்களிலும் கூட வேலை செய்கிறது.

பொக்கே லைட் ஸ்பாட்களின் அபெர்ச்சர் வேல்யூ மற்றும் சைஸ்-ஐ மாற்றுவதன் மூலம் புகைப்படத்தின் அவுட்புட்-ஐ தனிப்பயனாக்க, பிரத்யேக போர்ட்ரெய்ட் மோட்-ஐயம் நீங்கள் பயன்படுத்தலாம். Reno8 ஸ்மார்ட்போனின் போர்ட்ரெய்ட் மோட் ஆனது 22 லெவல்களிலான சரிசெய்தல்களை வழங்குகிறது. கடைசியாக, Reno8 ஸ்மார்ட்போனின் கேமரா 960fps ஸ்லோ-மோஷன் வீடியோக்களையும் பதிவு செய்ய உங்களை அனுமதிக்கிறது.

Oppo Reno8 ஸ்மார்ட்போனை வாங்க இந்த 5 காரணங்களுக்கு மேல் வேறு என்ன வேண்

02. தனித்துவமான வடிவமைப்பு & சிறந்த நிலைத்தன்மை!

Reno8 ஒரு தலைசிறந்த வடிவமைப்பை பெற்றுள்ளது. இது OPPO வின் பிளாக்ஷிப் சீரீஸ் ஆக நெறிப்படுத்தப்பட்ட யூனிபாடி வடிவமைப்பை கொண்டுள்ளது மற்றும் இது ஒரு ரெனோ சீரீஸ் ஸ்மார்ட்போனுக்கு கிடைப்பது முதல் முறையாகும். இதன் கேமரா யூனிட் பேக் பேனலுடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, இது ஒரு ஒருங்கிணைந்த மற்றும் மென்மையான தோற்றத்தை அளிக்கிறது. உண்மையில், Reno8-சீரிஸ் ஆனது மிகவும் தனித்துவமான தோற்றமுடைய கேமரா மாட்யூல்-ஐ கொண்டுள்ளது.

இதன் 'பைனாகுலர் கேமரா' யூனிட் ஆனது விண்டேஜ் சினிமா கேமராக்களின் ஞாபகங்களை தூண்டுகிறது. இது பார்ப்பதற்கு மட்டும் அழகானதாக இருக்காது; கவனமாக வைக்கப்பட்டுள்ள இந்த லென்ஸ்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் போது பயனுள்ளதாகவும் இருக்கும். மேலும் இந்த வடிவமைப்பில் ஒரு புதுமையான ரிங் ஃபிளாஷ் சேர்க்கப்பட்டுள்ளது. இது நைட் டைம் போட்டோக்களை மேம்படுத்துகிறது.

இது தவிர்த்து Reno8 ஆனது பணிச்சூழலியல் துறையிலும் சிறந்து விளங்குகிறது, அதாவது ஒரு கையால் பயன்படுத்தும்படி, மிகவும் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 7.6 மிமீ மெல்லியதாகவும், 179 மிமீ எடையுடனும் உள்ளது, அதாவது இதுவரை இல்லாத அளவிலான மிகவும் மெலிதான ரெனோ ஸ்மார்ட்போன் இதுவாகும். மேலும் இந்த விலை பிரிவின் கீழ் வாங்க கிடைக்கும் இலகுவான மற்றும் மிகவும் ஸ்டைலான போன்களிலும் ஒன்றாகும்.

Reno8 இரண்டு அதிநவீன வண்ணங்களில் கிடைக்கிறது - ஷிம்மர் கோல்ட் மற்றும் ஷிம்மர் பிளாக். இந்த இரண்டு வண்ண வகைகளும் ஒரு குறிப்பிடத்தக்க க்ரேடியன்ட் விஷூவல் எஃபெக்ட்-ஐ வெளிப்படுத்துகின்றன மற்றும் ஸ்மட்ஜ்-ப்ரீயாக இருக்கும்.

Reno8 மிகவும் கடுமையான "நிலைத்தன்மை" தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 390 ஆய்வக சோதனைகளில் (உப்பு தெளிப்பு சோதனை, சுற்றுச்சூழல் வயோதிக சோதனை, மழை நீர் சோதனை மற்றும் பல) தேர்ச்சி பெற்றுள்ளது, சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இது அனைத்து வகையான நிஜ-உலக துஷ்பிரயோகங்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Oppo Reno8 ஸ்மார்ட்போனை வாங்க இந்த 5 காரணங்களுக்கு மேல் வேறு என்ன வேண்

03. நிகரற்ற செயல்திறன்

Reno8 ஸ்மார்ட்போன் ஆனது சக்திவாய்ந்த 5G இணைப்பை வழங்கும் சூப்பர்-திறனுள்ள Mediatek Dimensity 1300 SoC ஐ பேக் செய்கிறது. இந்த ஆக்டா-கோர் CPU ஆனது மேம்பட்ட 6nm செயல்பாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது, இது CPU செயல்திறனை 40% அதிகரிக்கிறது, GPU இன் வெளியீட்டை 106% அதிகரிக்கிறது மற்றும் ஒட்டுமொத்த ஆற்றல் செயல்திறனை 20% அதிகரிக்கிறது. இந்த எண்கள் ஸ்மூத் கம்ப்யூட்டிங், லேக்-ஃப்ரீ கேமிங் மற்றும் ஒப்பிடமுடியாத செயல்திறன் ஆகியவற்றிற்கு வழிவகுகின்றன. மல்டி-டாஸ்கிங்கிற்கு போதுமான ரேம் மற்றும் ROM கலவையும் இதில் உள்ளது (8GB LPDDR4X + 128GB UFS3.1).

மேலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட சூப்பர்-கண்டக்டிவ் விசி லிக்விட் கூலிங் சிஸ்டத்திற்கு நன்றி. இது மிகவும் திறமையாக வெப்ப விளைவுகளை கையாளுகிறது. இதன் மேம்படுத்தப்பட்ட குளிரூட்டும் பொறிமுறையானது 16.8 சதவிகிதம் லார்ஜர் கூலிங் ஏரியா, 13.5 சதவிகிதம் அதிக வெப்ப கடத்துத்திறன் மற்றும் 1.5x ஒட்டுமொத்த குளிரூட்டும் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது கிராஃபிக் அடிப்படையில் மிகவும் தீவிரமான கேம்களை விளையாடும் போது அல்லது லூப்பில் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்யும் போது கூட ஸ்மார்ட்போன் குளிர்ச்சியாக இருக்கவும் சீராக இயங்கவும் அனுமதிக்கிறது.

04. முன்னோடிகளே இல்லாத சார்ஜிங் ஸ்பீட் & நீண்ட பேட்டரி ஆயுள்!

OPPO நிறுவனம் ஃபாஸ்ட் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருப்பதால், போனின் வாழ்நாள் முழுவதும் பயனர்கள் சிறந்த-இன்-கிளாஸ் சார்ஜிங் ஸ்பீடை பெறுவதை எப்போதும் உறுதி செய்கிறது. அப்படியாக இந்த ஸ்மார்ட்போனில் 80W SUPERVOOOCTM ஃபிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பம் உள்ளது, இது ஸ்மார்ட்போனின் 4,500mAh பேட்டரி செல்களை "சட்டென்று" நிரப்புகிறது. போனுடன் தொகுக்கப்படும் சார்ஜர் ஆனது பேட்டரியை 0% இருந்து 100% வரை ரீசார்ஜ் செய்ய வெறும் 28-நிமிடங்களையே எடுத்துக்கொள்கிறது. TÜV Rheinland ஆல் சோதனை செய்யப்பட்ட ஐந்து நிமிட சார்ஜ் உடன் நீங்கள் இரண்டு மணிநேரம் வரை கேமிங் செய்யலாம்.

Oppo Reno8 ஸ்மார்ட்போனை வாங்க இந்த 5 காரணங்களுக்கு மேல் வேறு என்ன வேண்

Reno8 5G ஸ்மார்ட்போனின் பேட்டரி வெறுமனே உயர் செயல்திறன் கொண்ட செல் மட்டும் அல்ல, அதுக்கும் மேல! அதற்கு OPPO வின் பேட்டரி ஹெல்த் எஞ்சினுக்கு (BHE) நன்றி. இந்த புதுமையான பேட்டரி தொழில்நுட்பமானது, பேட்டரி சீரழிவு சிக்கலைத் தீர்ப்பதன் மூலம் பேட்டரியின் ஒட்டுமொத்த ஆயுட்காலத்தை நீட்டிக்கிறது (பேட்டரி சீரழிவு என்றால், ஸ்மார்ட்போன்களில் பேட்டரி ஆயுள் சுழற்சியை பாதிக்கும் பொதுவான நிகழ்வு ஆகும்) இந்த தொழில்நுட்பம், பேட்டரி ஆயுட்காலத்தை 1600 சார்ஜ்/டிஸ்சார்ஜ் சுழற்சிகள் வரை நீட்டிக்க ரியல்-லைஃப் மானிட்டரிங் மூலம் சார்ஜிங் கரண்ட் மற்றும் வோல்டேஜ் மின்னோட்டத்தை புத்திசாலித்தனமாக கட்டுப்படுத்துகிறது. Reno8 5G ஸ்மார்ட்போனை இயக்கும் பேட்டரி செல் ஆனது நான்கு வருட தினசரி போன் பயன்பாட்டிற்குப் பிறகும் உச்சக்கட்ட செயல்திறனைத் தக்க வைத்துக் கொள்கிறது, இதனால் ஸ்மார்ட்போனின் ஆயுட்காலமும் நீட்டிக்கப்படுகிறது.

05. வரம்புகள் இல்லாத மிகவும் ஸ்மார்ட் ஆன ஆண்ட்ராய்டு ஸ்கின்!

Reno8 ஸ்மார்ட்போன் "உள்ளுணர்வுடன்" கூடிய ஆண்ட்ராய்டு ஸ்கின் மூலம் இயங்குகிறது. ஆண்ட்ராய்டின் சமீபத்திய வெர்ஷனின் அடிப்படையிலான, OPPO-வின் இன்-ஹவுஸ் ColorOS 12.1 ஆனது Reno8 ஸ்மார்ட்போனின் பின்னடைவு இல்லாத செயல்திறனுக்கு முக்கிய காரணமாகும். சிறந்த, தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான பயனர் அனுபவத்தை வழங்கும் அதே சமயம் இதன் UI, நன்கு அறியப்பட்ட ஆண்ட்ராய்டு உணர்வைத் தக்க வைத்தும் கொள்கிறது.

Reno8 சீரீஸ் உடன் OPPO, வசதி மற்றும் செயல்திறனை மேலும் அதிகரிக்க சில அம்சங்களை மேம்படுத்தியுள்ளது. ஏர் கெஸ்சர்ஸ், மல்டி-ஸ்கிரீன் கனெக்ட், நோட்டிஃபிகேஷன்களுக்கான ஆன்டி-பீப்பிங், போட்டோஸ் கார்டு மற்றும் ஓமோஜிகள் ஆகியவைகள் இதில் அடங்கும்.

• ஏர் கெஸ்சர்ஸ் மூலம், YouTube ஆப்பில் உள்ள வீடியோக்களை பிளே / பாஸ் போன்ற பயன்பாட்டை மையப்படுத்திய அம்சங்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம், உங்கள் சமூக ஊடக ஆப்களில் டைம்லைனையும் ஸ்க்ரோல் செய்யலாம் மற்றும் வேவ் கெஸ்சர்ஸ் மூலம் கால்களுக்கு பதிலளிக்கலாம் / கட் செய்யலாம்.

Oppo Reno8 ஸ்மார்ட்போனை வாங்க இந்த 5 காரணங்களுக்கு மேல் வேறு என்ன வேண்

• மல்டி-ஸ்கிரீன் கனெக்ட் அம்சம், டெஸ்க்டாப் பிசி அல்லது லேப்டாப் போன்ற பல்வேறு சாதனங்களுடன் உங்கள் போனை இணைக்க அனுமதிப்பதன் மூலம் உற்பத்தித்திறன் மற்றும் பல்பணியை மேம்படுத்துகிறது. இதன் கீழ் பெரிய ஸ்க்ரீனில் ஒரே நேரத்தில் பல ஆப்களை பயன்படுத்தலாம், கம்ப்யூட்டரில் மூன்று 'செல்போன் குளோன்களை' உருவாக்கலாம்.

• ColorOS 12.1 ஆனது 'ஆன்டி-பீப்பிங் நோட்டிஃபிகேஷன்ஸ்' போன்ற புதிய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுவருகிறது. உங்கள் போனின் டிஸ்பிளேவை வேறொருவர் பார்க்க முயற்சிப்பதை இந்த போன் கண்டறிந்தால், உங்கள் நோட்டிஃபிகேஷன்களை பாதுகாக்க இந்த அம்சம் மெஷின் லேர்னிங்-ஐ பயன்படுத்துகிறது. மேலும், புதிய Reno8 ஆனது ISO, மற்றும் TrustArc உள்ளிட்ட மூன்றாம் தரப்பினரால் மிக உயர்ந்த ப்ரைவஸி தரத்தை பராமரிப்பதாக சான்றளிக்கப்பட்டுள்ளது.

• கடைசியாக, ColorOS 12.1 இல் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 'Omoji' அம்சத்தின் மூலம் நீங்கள் மிகவும் வெளிப்படையாக இருக்க முடியும். Reno8 ஆனது 200 நவநாகரீக டெக்கரேடிவ் எலிமெண்ட்களை கொண்டுள்ளது. இது அனைத்துமே இன்-பில்ட் ஆட்டோமேட்டிக் பேஷியல் ரிகக்னைசேஷன் தொழில்நுட்பத்துடன் மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட அவதாரங்களுடன் உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது.

Oppo Reno8 ஸ்மார்ட்போனை வாங்க இந்த 5 காரணங்களுக்கு மேல் வேறு என்ன வேண்

இதன் விலை ரூ. 29,999 ஆகும் மற்றும் இது Flipkart, OPPO Store மற்றும் மெயின்லைன் சில்லறை விற்பனை நிலையங்களின் வழியாக வாங்க கிடைக்கிறது. சலுகைகளை பொறுத்தவரை, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ கார்டுகள், கோடக் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் போன்றவற்றில் 10% கேஷ்பேக் (ரூ.3000 வரை) கிடைக்கும். மேலும் ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ கார்டுகள், கோடக் வங்கி வழியிலான நான்-இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.1200 என்கிற கேஷ்பேக்கும் கிடைக்கும். இஎம்ஐ விருப்பங்கள் ரூ.2500 முதல் தொடங்குகிறது மற்றும் டவுன் பேமண்ட் ரூ.4285 முதல் தொடங்குகிறது.

25 ஜூலை 2022 முதல் ஜூலை 31, 2022 வரை Reno8 மீதான ரூ.2000 OPPO அப்கிரேட் சலுகையும் அணுக கிடைக்கும். OPPO பிரீமியம் சேவை - Oppo Reno பயனர்களுக்கு பிரத்தியேகமானது, போன்களை பழுதுபார்க்கும் போது எளிதான EMI விருப்பத்தை வழங்குகிறது. இதனுடன் ரெனோ பயனர்கள் இலவச பிக் அப் & டிராப் சேவை, 24/7 ஹாட்லைன் ஆதரவு மற்றும் இலவச ஸ்கிரீன் கார்டு & பேக் கவர் ஆகியவற்றையும் பெறலாம். வாடிக்கையாளர்கள் OPPO Reno8 Series மற்றும் IoT சாதனங்களை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு முன் வாங்கினால், My OPPO App-இல் பதிவுசெய்து, பிரத்தியேகமான OPPOverse ஆஃபரையும், ரூ.5,999 மதிப்பிலான OPPO Watch-ஐ வெறும் 1 ரூபாய்க்கு பெறலாம்.

Reno8 சீரிஸ் உடன் OPPO நிறுவனம் Dynaudio உடன் இணைந்து உருவாக்கப்பட்ட OPPO Enco X2 True Wireless Earbuds ஐயும் அறிமுகப்படுத்தியுள்ளது, இது தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் ஒரு Active Noise Cancellation இயர்பட்ஸ் ஆகும். மற்றும் இந்நிறுவனம் OPPO Pad Air என்கிற டேப்லெட்டையும் TÜV Rheinland லோ ப்ளூ லைட் ஐ கம்போர்ட் சான்றிதழுடன் அறிமுகம் செய்துள்ளது.

Reno8 இல் உள்ளதை போன்று புதுமையான மற்றும் எக்கசக்கமான அம்சங்களை வழங்கும் போன்கள், சில எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன. முதன்மை தர கேமரா சிஸ்டம், மிகவும் கூல் ஆன மற்றும் கவர்ச்சிகரமான யூனிபாடி வடிவமைப்பு, ஆற்றல் நிரம்பிய ப்ராசஸர் மற்றும் மேம்படுத்தப்பட்ட ColorOS 12.1 உடன் Reno8 ஸ்மார்ட்போன் ஆனது உங்களை எதிலும் சமரசம் செய்ய விடாது. இந்த ஸ்மார்ட்போன் அனைத்து அம்சங்களிலும் குறைபாடற்ற முறையில் செயல்படுகிறது. Reno8 சந்தேகத்திற்கு இடமின்றி அதன் விலை பிரிவில் மிகவும் சக்திவாய்ந்த, க்ளீன் ஆன மற்றும் ஸ்பெக்ஸ்-பேக்டு ஸ்மார்ட்போன் ஆகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo reno8 5 reasons that make this phone an ideal buy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X