உங்களுக்கு கேலக்ஸினா எங்களுக்கு ரெனோ! மொத்த போனையும் தூக்கி சாப்பிடும் Oppo போன்!

|

Oppo Reno 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான பணியில் ஒப்போ தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவலை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் இந்த சீரிஸ் இல் Oppo Reno 9, Oppo Reno 9 Pro மற்றும் Oppo Reno 9 Pro+ ஆகியவை அடங்கும் என கூறப்படுகிறது. பொதுவாகவே ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் என்பது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் புகழ்பெற்ற ஒரு பிராண்ட் ஆகும்.

உங்களுக்கு கேலக்ஸினா எங்களுக்கு ரெனோ..

உங்களுக்கு கேலக்ஸினா எங்களுக்கு ரெனோ..

ஒவ்வொரு நிறுவனமும் ஒரு மாடல் தொடரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதில் வருடந்தோறும் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வது வழக்கம். சாம்சங் நிறுவனத்துக்கு எப்படி கேலக்ஸி தொடரோ அதேபோல் ஒப்போவிற்கு ரெனோ தொடர். ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ தொடரில் கவனம் செலுத்தி தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். அதன்படி நிறுவனம் விரைவில் ஒப்போ ரெனோ 9 சீரிஸை அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஒப்போ ரெனோ 9 சீரிஸ்

ஒப்போ ரெனோ 9 சீரிஸ்

ஒப்போ ரெனோ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள் சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. இதனுடன் ஒப்போ ஏ1 ப்ரோ குறித்த தகவலும் வெளியாகின. இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ ஏ98 இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என தகவல்கள் கூறுகிறது.

Oppo Reno 9 சிறப்பம்சங்கள்

Oppo Reno 9 சிறப்பம்சங்கள்

Oppo Reno 9 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 10-பிட் கலர் ஆழத்துடன் கூடிய வளைந்த டிஸ்ப்ளே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஹூட்டின் கீழ், ஒப்போ ரெனோ 9 ஆனது ஸ்னாப்டிராகன் 778G+ SoC மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (EIS) உடனான 64 எம்பி சென்சார் இதில் இடம்பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் முன்புறத்தில் 32 எம்பி IMX709 கேமரா இடம்பெற வாய்ப்பிருப்பவதாகவும் கூறப்படுகிறது.

67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

Oppo Reno 9 ஆனது 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் மற்றும் ஒற்றை ஸ்பீக்கர் க்ரில் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

Oppo Reno 9 Pro சிறப்பம்சங்கள்

Oppo Reno 9 Pro சிறப்பம்சங்கள்

Oppo Reno 9 Pro சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது அடிப்படை மாடலுக்கு ஒத்ததாக இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 8100 Max SoC மூலம் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

50 எம்பி சோனி கேமரா

50 எம்பி சோனி கேமரா

இந்த ஸ்மார்ட்போனில் EIS உடனான 50 எம்பி சோனி IMX890 பிரதான கேமரா மற்றும் 32-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இடம்பெறும் என தகவல்கள் தெரிக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன், 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் பாதுகாப்பு அம்சத்துக்கு என அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு இடம்பெறலாம்.

Oppo Reno 9 Pro+ சிறப்பம்சங்கள்

Oppo Reno 9 Pro+ சிறப்பம்சங்கள்

Oppo Reno 9 Pro+ சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படலாம். ரூ.1 லட்சம் வரையில் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் கூட இதே சிப்செட் தான் இடம்பெற்றிருந்தது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு இதில் இடம்பெறலாம். ஒப்போ ரெனோ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இருப்பது போன்ற வளைந்த டிஸ்ப்ளே இதிலும் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

OIS கேமரா ஆதரவு

OIS கேமரா ஆதரவு

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50-மெகாபிக்சல் IMX890 முதன்மை சென்சார் மற்றும் 32 எம்பி செல்பி ஸ்னாப்பர் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4700 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. Oppo Reno 9 Pro+ ஸ்மார்ட்போனானது அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் எக்ஸ் ஆக்சிஸ் லீனியர் மோட்டார் உள்ளிட்டவைகள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Oppo Reno 9 series Key Specs Leak: Expected to Launching With Curved Display, 67W Fast Charging Support!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X