மிகவும் எதிர்பார்த்த Oppo Reno 8, Reno 8 Pro அறிமுகம்: தரமான செய்கை, தம்பி நத்திங் கொஞ்சம் ஓரம் போங்க!

|

புது போன் வாங்குவதற்கு ஏணையோர் காத்திருந்த தினம் வந்துவிட்டது. காரணம் இன்றுதான் (ஜூலை 18) ஒப்போ ரெனோ 8 தொடர் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் Oppo Reno 8 அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கிறதா என்பதை விரிவாக பார்க்கலாம்.

எதிர்பார்த்த Oppo Reno 8, Reno 8 Pro அறிமுகம்

எதிர்பார்த்த Oppo Reno 8, Reno 8 Pro அறிமுகம்

Oppo Reno 8, Reno 8 Pro ஸ்மார்ட்போனானது 50 எம்பி கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒப்போ ரெனோ 8 தொடரின் ஆரம்ப விலை ரூ.29,999 ஆகும். ஒப்போ ரெனோ 8 மற்றும் ரெனோ 8 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் மட்டுமில்ல கூடுதல் போனஸ் சாதனங்களும் இருக்கு

ஸ்மார்ட்போன் மட்டுமில்ல கூடுதல் போனஸ் சாதனங்களும் இருக்கு

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் அதன் சமீபத்திய ரெனோ தொடர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது ஒப்போ ரெனோ 8 தொடர் ஆகும். எதிர்பார்த்தப்படி இந்த தொடரில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது. அது ஒப்போ ரெனோ 8 மற்றும் ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஆகும். ஒப்போ ரெனோ 8 உடன் Oppo Pad Air மற்றும் Oppo Enco X2 ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்திருக்கிறது.

மேம்பட்ட அம்சங்களுடன் களமிறங்கிய புது ஸ்மார்ட்போன்

மேம்பட்ட அம்சங்களுடன் களமிறங்கிய புது ஸ்மார்ட்போன்

Oppo Reno 8 மற்றும் Oppo Reno 8 Pro ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் முழு HD+ டிஸ்ப்ளேக்கள், 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி SoC உடன் வெளியாகி இருக்கிறது. Oppo Reno 8 Pro ஆனது இந்தாண்டு தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo Reno Pro+ ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். அம்சங்களை விரிவாக பார்ப்பதற்கு முன்னதாக இதன் விலை விவரங்களை பார்க்கலாம்.

Oppo Reno 8, Oppo Reno 8 Pro விலை

Oppo Reno 8, Oppo Reno 8 Pro விலை

Oppo Reno 8 மற்றும் Oppo Reno 8 Pro ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை குறித்து பார்க்கையில், ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.45,999 ஆக இருக்கிறது. அதேபோல் ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.29,999 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளாக் மற்றும் கோல்ட் வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது.

புது ஸ்மார்ட்போனை எங்கு வாங்கலாம்?

புது ஸ்மார்ட்போனை எங்கு வாங்கலாம்?

ஒப்போ ரெனோ 8 ஜூலை 25 முதலும், ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஜூலை 19 முதலும் பிளிப்கார்ட், ஒப்போ ஸ்டோர் மற்றும் மெயின்லைன் சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்குவதற்கு கிடைக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒப்போ ரெனோ 8 ப்ரோ சிறப்பம்சங்கள்

ஒப்போ ரெனோ 8 ப்ரோ சிறப்பம்சங்கள்

ஒப்போ ரெனோ 8 ப்ரோ சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் (நானோ), ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ColorOS 12.1 மூலம் இயங்குகிறது.

 • 6.7 இன்ச் முழு-HD+ AMOLED டிஸ்ப்ளே
 • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷிங் ரேட், HDR10+ ஆதரவு
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
 • SGS லோ மோஷன் ப்ளர், SGS லோ ப்ளூ லைட், அமேசான் HDR சான்றிதழ், Netflix HD சான்றிதழ்
 • ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி சிப்செட்
 • ஒப்போ ரெனோ 8 ப்ரோ கேமரா அம்சங்கள்

  ஒப்போ ரெனோ 8 ப்ரோ கேமரா அம்சங்கள்

  ஒப்போ ரெனோ 8 ப்ரோ கேமரா ஆனது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.

  • சோனி IMX766 50-மெகாபிக்சல் பிரதான கேமரா
  • 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ்
  • 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
  • செல்பி மற்றும் வீடியோ அழைப்புக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது
  • ஒப்போ ரெனோ 8 ப்ரோ இணைப்பு ஆதரவுகள்

   ஒப்போ ரெனோ 8 ப்ரோ இணைப்பு ஆதரவுகள்

   • 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, யூஎஸ்பி டைப்-சி போர்ட்
   • பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் கூடிய அண்டர் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
   • 4500 எம்ஏஎச் பேட்டரி
   • 80 வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ்
   • எடை: 183 கிராம்
   • Oppo Reno 8 சிறப்பம்சங்கள்

    Oppo Reno 8 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் (நானோ) உடன் ColorOS 12.1 உடன் Android 12 மூலம் இயங்குகிறது.

    • 6.43 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே
    • 90Hz புதுப்பிப்பு வீதம்
    • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
    • 800 நிட்ஸ் உச்ச பிரகாசம்
    • ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1300 SoC சிப்செட்
    • Oppo Reno 8 கேமரா அம்சங்கள்

     Oppo Reno 8 கேமரா அம்சங்கள்

     • டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு
     • 50 எம்பி முதன்மை கேமரா
     • ஃபீல்ட்-ஆஃப்-வியூ 2 எம்பி மேக்ரோ கேமரா
     • 8 எம்பி மேக்ரோ லென்ஸ் கேமரா
     • முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமரா
     • ஒப்போ ரெனோ 8 இணைப்பு ஆதரவுகள்

      ஒப்போ ரெனோ 8 இணைப்பு ஆதரவுகள்

      • 5ஜி, 4ஜிஎல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.3, யூஎஸ்பி டைப் சி போர்ட்
      • பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்
      • 4500 எம்ஏஎச் பேட்டரி
      • 80 வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
      • எடை: 179 கிராம்
      • அதே விலைப்பிரிவில் புது ஸ்மார்ட்போன்

       அதே விலைப்பிரிவில் புது ஸ்மார்ட்போன்

       மறுபுறம் வாடிக்கையாளர்களை மிகவும் எதிர்பார்த்த நத்திங் போன் (1) கடந்த வாரம் அறிமுகமாகி இந்த வாரம் விற்பனைக்கு வருகிறது. இந்த நிலையில் இதே விலைப் பிரிவில் ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Oppo Reno 8, Reno 8 Pro Launched in india With 50MP Primary Camera, 12GB RAM.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X