Oppo Reno 8 Pro ஸ்மார்ட்போன் புது ஒன்பிளஸ் போனாக அறிமுகமா? என்னப்பா சொல்றீங்க? குழப்பம் வேண்டாம் விஷயம் இதான்

|

சமீபத்தில் ஒப்போவின் சில ஸ்மார்ட் போன் சாதனங்கள் மறுபெயரிடப்பட்டு ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் சாதனங்களாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த செய்தி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறிது காலத்திற்கு முன் ஒப்போ நிறுவனம் அதன் போர்ட்போலியோவில் உள்ள Oppo A57 சாதனத்தை, ஒன்பிளஸ் இன் புதிய சாதனமாக OnePlus Nord N20 SE என்ற மாடலாக அறிமுகம் செய்யவுள்ளது. இது ஒன்பிளஸ் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

Oppo ஸ்மார்ட் போன் OnePlus போனாக அறிமுகமா?

Oppo ஸ்மார்ட் போன் OnePlus போனாக அறிமுகமா?

இப்போது, ஒப்போ நிறுவனம் மீண்டும் இதே பாணியில், அதன் போர்ட்போலியோவில் உள்ள Oppo Reno 8 Pro ஸ்மார்ட் போன் சாதனத்தை புதிய OnePlus போனாக ரீபிராண்ட் செய்து அறிமுகம் செய்யப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. Oppo நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட் போன் மாடலான Oppo Reno 8 Pro
சாதனத்தின் மறுபெயரிடப்பட்ட பதிப்பு IMEI தரவுத்தளத்தில் மாதிரி எண் PGAM10 உடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Oppo A57 ஸ்மார்ட் போன் OnePlus Nord N20 SE ஆக அறிமுகமா?

Oppo A57 ஸ்மார்ட் போன் OnePlus Nord N20 SE ஆக அறிமுகமா?

சமீபத்திய வெளியான வதந்திகள் படி, ஒப்போ நிறுவனத்திற்குச் சொந்தமான Oppo A57 ஸ்மார்ட் போன் சாதனம், OnePlus Nord N20 SE ஆக ரீபிராண்ட் செய்யப்பட்டுக் குறிப்பிட்ட சில ஸ்மார்ட் போன் சந்தைகளில் மட்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனம், CPH2455 and CPH2413 ஆகிய மாடல் எண்கள் கொண்ட இரண்டு ரீபேட்ஜ் செய்யப்பட்ட புதிய ஸ்மார்ட் போன் சாதனங்களை Oppo நிறுவனத்திடம் இருந்து வாங்கி வெளியிடும் என்று இப்போது எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..

டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவின் கூற்று என்ன சொல்கிறது?

டெக் துரையின் நம்பகமான டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவின் கூற்றுப்படி, ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மறுபெயரிடுவதற்கு OnePlus நோக்கி செல்கிறது. Oppo Reno 8 Pro இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பு IMEI இணையதளத்தில் PGAM10 என்ற மாடல் எண்ணுடன் காணப்பட்டதாக டிப்ஸ்டர் தகவல் குறிப்பிடுகிறது. Oppo வழங்கும் Reno 8 Pro கடந்த மாதம் மீடியா டெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் சிப்செட்டுடன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Oppo Reno 8 Pro சிறப்பம்சங்கள்

Oppo Reno 8 Pro சிறப்பம்சங்கள்

ஒப்போவின் இந்த புதிய சாதகமானது ஆண்ட்ராய்டு 12 ஐ அடிப்படையாகக் கொண்ட ColorOS 12.1 இல் இயங்குகிறது. இந்த ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட் போன் சாதனம் 6.62' இன்ச் கொண்ட முழு எச்டி+ திறன் கொண்ட 1,080 x 2,400 பிக்சல்களை உடைய AMOLED E4 டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் போனானது 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மூலம் மூன்று பின்புற கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. முன்பே சொன்னது போல், இந்த சாதனம் சீன ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

27 ஆண்டுகளுக்கு பிறகு மூடப்பட்ட Internet Explorer.. 90s கிட்ஸ் குமுறல்..2K கிட்ஸ் கேலி.. என்னாச்சு தெரியுமா?27 ஆண்டுகளுக்கு பிறகு மூடப்பட்ட Internet Explorer.. 90s கிட்ஸ் குமுறல்..2K கிட்ஸ் கேலி.. என்னாச்சு தெரியுமா?

என்ன விலையில் Oppo Reno 8 Pro இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது?

என்ன விலையில் Oppo Reno 8 Pro இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது?

Oppo Reno 8 Pro இன் விலையானது அதன் அடிப்படை வேரியண்ட் மாடலான 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு CNY 2,999 என்ற விலையை நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்திய மதிப்பின் படி, இதன் விலை தோராயமாக ரூ. 34,900 என்ற விலைப் புள்ளியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலே குறிப்பிட்டபடி, Oppo A57 ஆனது OnePlus Nord N20 SE ஆக மீண்டும் வெளியிடப்படும் என வதந்தி பரவியுள்ளது. Oppo A57 4G சமீபத்தில் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் விரைவில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் கீழ் ரெடியாகும் CPH2455 and CPH2413 மாடல் எண் சாதனம்

ஒன்பிளஸ் கீழ் ரெடியாகும் CPH2455 and CPH2413 மாடல் எண் சாதனம்

அப்படியானால், ஒப்போவிலிருந்து CPH2455 and CPH2413 ஆகிய மாடல் எண்கள் கொண்ட இரண்டு ரீபேட்ஜ் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களை ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யும் என்ற தகவலை டிப்ஸ்டர் சர்மாவின் ட்வீட் சொல்லாமல் சொல்லி மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு சாதனங்களும் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒன்று, 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலாகவும், மற்றொன்று 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மடலாகவும் வரும்.

CPH2455 and CPH2413 மாடல் பற்றி நமக்கு என்ன தெரியும்?

CPH2455 and CPH2413 மாடல் பற்றி நமக்கு என்ன தெரியும்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்டியலில் காணப்படும் CPH2455 என்ற மாடல் எண் கொண்ட சாதனம் பிளாக், வார்ம் கோல்டு மற்றும் வெவைட் ஆகிய நிறங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், CPH2413 என்ற மாடல் எண்ணுடன் காணப்படும் புதிய ஸ்மார்ட் போன் சாதனம் க்ரீன் நிறத்தில் வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டு புதிய ஸ்மார்ட் போன் சாதனங்கள் பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதால் நாம் சிறிது காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Oppo Reno 8 Pro Smartphone launched in China last month Tipped to Be Rebranded as OnePlus Handsets : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X