மிட்ரேஞ்ச் விலை- வந்தது ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி: 64 எம்பி கேமரா, ஃபுல் எச்டி வீடியோ பதிவு, சூப்பர்வூக் சார்ஜ்!
ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி, 64 எம்பி பின்புற கேமராக்கள் உடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது பிளாக் மற்றும் ரெயின்போ வண்ண விருப்பத்தில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒப்ரோ ரெனோ 8 லைட் 5ஜி
ஒப்ரோ ரெனோ 8 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது இந்த வாரம் ஸ்பெயினில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி சாதனத்தின் மேம்பட்ட பதிப்பான இந்த புதிய ஓப்போ சாதனமானது 60 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 64 எம்பி பிரதான கேமரா உட்பட மூன்று பின்புற கேமராக்களுடன் வருகிறது.

ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி விலை, கிடைக்கும் தன்மை
ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி ஸ்பெயினில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை EUR 429 (தோராயமாக ரூ.35700) ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது பிளாக் மற்றும் ரெயின்போ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. அந்நாட்டில் உள்ள இ-ஸ்டோர் இணையதளம் மூலமாக இந்த சாதனம் வாங்குவதற்கு கிடைக்கும். இந்தியாவில் ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி அறிமுகம் குறித்த எந்த தகவலும் இதுவரை இல்லை.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்
ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி சாதனத்தின் மறுபெயரிடப்பட்ட பதிப்பு என கூறப்படுகிறது. இந்த ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் வெளியிடப்பட்டது. ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.26,999 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி சிறப்பம்சங்கள்
ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 12.1 மூலம் இயக்கப்படுகிறது. ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடனான 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 1,080x2,400 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி ஆதரவு உட்பட 8 ஜிபி ரேம் வசதியைக் கொண்டிருக்கிறது.

டிரிபிள் ரியர் கேமரா வடிவமைப்பு
புதிய ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 64 எம்பி பிரதான கேமரா உட்பட இரட்டை 2 எம்பி ஷூட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ சேட்டிங்கிற்கு என இதன் முன்பக்கத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பின்புற மற்றும் முன்புற கேமராக்கள் நைட்மோட் மற்றும் போர்ட்ரெய்ட் பயன்முறை அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த சாதனத்தின் பின்புற கேமராக்கள் எல்இடி ஃப்ளாஷ் வசதியைக் கொண்டுள்ளது. முழு எச்டி வீடியோ பதிவு ஆதரவும் இதில் இருக்கிறது.

1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்
ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இந்த சாதனத்தில் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு இருக்கிறது. ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், 5ஜி, என்எஃப்சி, ப்ளூடூத் வி5.1, யூஎஸ்பி டைப்-சி ஆதரவு உள்ளிட்டவைகளைக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இந்த சாதனத்தின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது. ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது 33 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இதில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் எதிர்ப்புக்கு என ஐபி எக்ஸ்4 சான்றிதழ் ஆதரவைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications