Home
News

விரைவில் இந்தியாவில் அறிமுகம் உறுதி., வருகிறது ஒப்போ ரெனோ 7 சீரிஸ்- 12 ஜிபி ரேம், 50எம்பி சோனி கேமரா: விலை இதோ

ஒப்போ கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவில் ரெனோ 7 சீரிஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இந்த நிலையில் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒப்போ ரெனோ 7 தொடரில் சீனாவில் வெண்ணிலா ஒப்போ ரெனோ 7, ரெனோ 7 ப்ரோ மற்றும் ரெனோ 7 எஸ்இ உட்பட மூன்று மாடல்கள் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ஒப்போ இந்தியா சமீபத்தில் ரெனோ 7 தொடர் குறித்து டுவிட் செய்திருக்கிறது. இந்த சாதனத்தின் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 7 தொடர்

ஒப்போ ரெனோ 7 தொடர்

ஒப்போ ரெனோ 7 தொடர் இ-காமர்ஸ் தளத்தில் பிரத்யேகமா கிடைக்கும் என்பதை பிளிப்கார்ட் தளம் உறுதிப்படுத்திருக்கிறது. ஒப்போவின் இந்தியா இணையதளம் டீஸ் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பிளாக்ஷிப் சோனி ஐஎம்எக்ஸ்766 சென்சார் உடனான 50 மெகாபிக்சல் கேமரா, 32 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா உடன் வரும் என்பதை பிளிப்கார்ட் மைக்ரோசைட் தளம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒப்போ ரெனோ 7 5ஜி இந்திய விலை

ஒப்போ ரெனோ 7 5ஜி இந்திய விலை

சீனாவில் வெளியான இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் குறித்து பார்க்கையில், ஒப்போ ரெனோ 7 5ஜி இந்திய விலைப்படி ரூ.28,000 முதல் ரூ.31000 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், Oppo Reno 7 Pro 5G விலை ரூ.41,000 முதல் ரூ.43,000 வரை இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. ஒப்போ ரெனோ 7 ப்ரோ விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி உடன் வரும் எனவும் இது 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் ரேம் வசதியோடு வரும் எனவும் இது 256 ஜிபி வரை உள்சேமிப்பு வசதியை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனானது 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 45000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கிறது. பின்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன் 50 எம்பி சோனி முதன்மை கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

60 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு

60 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு

ரெனோ 7 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 778 ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ரெனோ 7 எஸ்இ ஸ்மார்ட்போனானது டைமன்சிட்டி 900 எஸ்ஓசி உடன் வரும் எனவும் இது இரண்டும் 4500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. ரெனோ 7 60 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் எனவும் ரெனோ 7 எஸ்இ சாதனம் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் மாடல்

ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் மாடல்

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான சிப்செட் மற்றும் அசத்தலான கேமரா அம்சங்களுடன் வெளிவந்தது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலை விரிவாகப் பார்ப்போம். 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் மாடலின் விலை 1,599 Yuan (இந்திய மதிப்பில் ரூ.23,500) ஆக உள்ளது. அதேபோல் Cloudy Black மற்றும் Qingchuan Blue நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

6.56-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

6.56-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் மாடல் 6.56-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1612 x 720பிக்சல் தீர்மானம்,180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனம் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680சிப்செட் வசதி உள்ளது. மேலும் அட்ரினோ610ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Reno 7 Series Might Launching soon in india- Expected Specs, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X