ஒப்போ ரெனோ 7 சீரிஸ் இந்தியாவில் எப்போது அறிமுகம்? இன்னும் விஷயம் இருக்கு மக்களே..

|

ஒப்போ நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் பட்டியலில் புதிதாக Oppo Reno 7 தொடரின் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது என்று அறிவித்துள்ளது. இந்த வரவிருக்கும் முதன்மையான ஸ்மார்ட்போன் நீண்ட காலமாகப் பல வதந்திகள் மற்றும் ஊகங்களில் சிக்கிய பிறகு, சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Oppo Reno 7 தொடரில் மூன்று சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Reno 7, Reno 7 Pro மற்றும் முதல் முறையாக Reno 7 Pro+ ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்கிறதா?

இந்த புதிய மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்கிறதா?

இத்துடன், Oppo Reno 7 SE ஆகிய புதிய மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் சாதனங்களின் அறிமுகமானது, இந்தியாவில் தொடரை அறிமுகப்படுத்தும் போது விலை வரம்பிற்கு ஒரு யோசனையை வழங்கியுள்ளது. Oppo Reno 7 மற்றும் Reno 7 Pro ஆகியவை ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இன்னும் சில அறியப்படாத காரணங்களுக்காக Oppo Reno 7 SE இந்தியாவில் வெளியிடப்படாமல் போகலாம் என்றும் சமீபத்தில் ஒரு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

Oppo Reno 7 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பிற சாதனங்களின் தகவல்கள்

Oppo Reno 7 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பிற சாதனங்களின் தகவல்கள்

சமீபத்திய வதந்திகள் சாதனங்களின் அறிமுகம் பற்றிய யோசனையை மட்டுமல்ல, அதன் விலை வரம்பையும் வழங்குகின்றன. Oppo Reno 7 ஸ்மார்ட்போன் சாதனங்களின் பல்வேறு மாறுபாடுகளைப் பொறுத்து ரூ.28,000 முதல் ரூ.31,000 வரை விலைபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், Oppo Reno 7 Pro ஸ்மார்ட்போனின் விலை ரூ.41,000 முதல் ரூ.43,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரெனோ 7 சீரிஸுடன், நிறுவனம் புதிய ஜோடி உண்மையான வயர்லெஸ் இயர்பட்களை நாட்டில் அறிமுகப்படுத்தப் போகிறது என்றும் வதந்திகள் தெரிவிக்கின்றன.

கயிறுடன் கட்டி போடப்பட்ட 1000 ஆண்டு பழமையான மம்மி.. என்ன காரணம்? இந்த மம்மி யாராக இருக்கும்?கயிறுடன் கட்டி போடப்பட்ட 1000 ஆண்டு பழமையான மம்மி.. என்ன காரணம்? இந்த மம்மி யாராக இருக்கும்?

ஒப்போ வாட்ச் மற்றும் பிற கேட்ஜெட்ஸ் சாதனங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா?

ஒப்போ வாட்ச் மற்றும் பிற கேட்ஜெட்ஸ் சாதனங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா?

இது ஒப்போ என்கோ எக்ஸ் தற்போது ரூ.9,999 விலையில் இருக்கும் அதே வரம்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ரெனோ 7 தொடரின் இயர்பட்ஸ் மற்றும் இரண்டு மாடல்களுடன், தயாரிப்பாளர்கள் வாட்ச் ஃப்ரீயையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இது எவ்வளவு நம்பகமான லீக் தகவல் என்பது தெரியவில்லை. இருப்பினும், டிஸ்ப்ஸ்டர்களின் பெரும்பாலான தகவல்கள் எப்போது மாறிப்போனது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Oppo Reno 7 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்பை நினைவுபடுத்துதல்

Oppo Reno 7 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்பை நினைவுபடுத்துதல்

Oppo Reno 7 சாதனத்தின் விவரக்குறிப்பு விவரங்கள் முன்பே தெரிவிக்கப்பட்டன, மேலும் சாதனங்கள் அனைத்தும் மிகவும் சக்திவாய்ந்த MediaTek மற்றும் Qualcomm செயலிகளுடன் வர உள்ளன. இந்த புதிய Oppo Reno 7 ஸ்மார்ட்போன் ஆனது 6.43 இன்ச் முழு எச்டி பிளஸ் கொண்ட AMOLED டிஸ்ப்ளேவை 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 180Hz இன் அதிகபட்ச தொடு மாதிரி வீதம் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், Oppo Reno 7 Pro ஆனது 6.55' இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 90Hz வரை புதுப்பிப்பு வீதம் மற்றும் 180Hz தொடு மாதிரி வீதம் கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

இலவசமாக 4 ஜிபி டேட்டா கூப்பன் பெறுவது எப்படி? ஏர்டெல் பயனர்கள் நல்ல கவனிச்சுக்கோங்க..இலவசமாக 4 ஜிபி டேட்டா கூப்பன் பெறுவது எப்படி? ஏர்டெல் பயனர்கள் நல்ல கவனிச்சுக்கோங்க..

இந்த சக்தி வாய்ந்த சிப்செட்களை நீங்கள் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்

இந்த சக்தி வாய்ந்த சிப்செட்களை நீங்கள் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்

இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பும் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Reno 7 Pro ஸ்மார்ட்போன் ஆனது MediaTek நிறுவனத்தின் சக்தி வாய்ந்த MediaTek Dimensity 1200 MAX இன் சமீபத்திய சிப்செட்டைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் Oppo Reno 7 மாடலுடன், தயாரிப்பாளர்கள் Qualcomm நிறுவனத்தின் சக்தி வாய்ந்த Snapdragon 778G சிப்செட்டைப் பயன்படுத்தியுள்ளது. இரண்டு சாதனங்களும் Android 11 ColorOS 12 இல் இயங்கும் மற்றும் 4500mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன்களின் கேமரா அம்சம் மற்றும் பேட்டரி தகவல்

புதிய ஸ்மார்ட்போன்களின் கேமரா அம்சம் மற்றும் பேட்டரி தகவல்

இருப்பினும், ரெனோ 7 ஸ்மார்ட்போன் 60W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. அதே சமயம் ரெனோ 7 ப்ரோ 65W ஃபாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் வருகிறது. ரெனோ 7 ஸ்மார்ட்போனுக்கான கேமரா தொகுதி மூன்று பின்புற கேமரா அமைப்பை உள்ளடக்கியது. இதில் 64 MP பிரதான கேமரா, 8 MP வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா மற்றும் செல்ஃபி ஸ்னாப்பர் 32 MP கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சிறந்த மாடலான ரெனோ 7 ப்ரோ, 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 766 சென்சார் கொண்டது. ஃபைண்ட் எக்ஸ்3 ப்ரோ, வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமராவிலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் 32 எம்பி செல்பீ கேமராவும் உள்ளது.

நான்கு காலுடன் கிடைத்த 'பாம்பு' படிமம்.. இது டிராகனா இல்லை பல்லியா? 5 ஆண்டாக நீடிக்கும் குழப்பம்..நான்கு காலுடன் கிடைத்த 'பாம்பு' படிமம்.. இது டிராகனா இல்லை பல்லியா? 5 ஆண்டாக நீடிக்கும் குழப்பம்..

அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்

அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன் பற்றி அறிய மற்றும் உடனுக்குடன் இந்த ஸ்மார்ட்போன்களின் தகவல்கள் பற்றி அறிந்துகொள்ள எங்களின் கிஸ்பாட் பக்கத்தைப் பார்வையிடுங்கள். உங்களுக்கு பிடித்தமான மற்ற ஸ்மார்ட்போன்கள் பற்றிய முழு விபரம், ஸ்மார்ட்போன்களின் விமர்சனம் போன்ற சுவாரசியமான சரியான தகவலை படிக்க எங்களுடன் இணைந்திருங்கள். தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் விண்வெளி தொடர்பான செய்திகளின் தொகுப்பைப் பார்வையிட மறக்காதீர்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo Reno 7 Series Leaked Prices Details for Indian Smartphone Market : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X