மூன்று கேமராக்கள் இருக்கலாம்: ஒப்போ ரெனோ 7 ப்ரோ குறித்து லீக்கான அம்சங்கள்!

|

ஒப்போ ரெனோ 7 ப்ரோ வடிவமைப்பு விவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. செல்பி கேமரா ஆனது மேல் இடது மூலையில் பஞ்ச் ஹோல் வடிவமைப்பில் பொருத்தப்பட்டுள்ளது. ஒப்போ இந்த ஆண்டு இந்தியாவில் ரெனோ 6 தொடரை அறிமுகம் செய்தது. தற்போது நிறுவனம் அதன் வாரிசு தொடருக்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. ரெனோ 7 சீரிஸ் என குறிப்பிடப்படுகிறது. இந்த தொடரில் ரெனோ 7, ரெனோ 7 ப்ரோ மற்றும் ரெனோ 7 ப்ரோ ப்ளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அடங்கும். ஒப்போ ரெனோ 7 ப்ரோ வடிவமைப்பு ஆன்லைனில் கசிந்துள்ளது.

ஒப்போ ரெனோ 7 ப்ரோ

ஒப்போ ரெனோ 7 ப்ரோ

ஒப்போ ரெனோ 7 ப்ரோ ரெண்டர்களின் லெட்ஸ்கோடிஜிட்டல்-ன் சமீபத்திய கசிவுப்படி, ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனை சுற்றி மெல்லிய உளிச்சாயுமோரம் கொண்ட பிளாட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். செல்பி கேமராவிற்கு என முன்புறத்தின் மேல் இடது மூலையில் உள்ள கட்அவுட் உடன் பஞ்ச் ஹோல் வசதியோடு செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

செவ்வக வடிவத்தில் மூன்று கேமரா

செவ்வக வடிவத்தில் மூன்று கேமரா

அதேபோல் ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் செவ்வக வடிவத்தில் மூன்று கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. கேமரா சென்சார்களுக்கு என கீழே குவாட் எல்இடி ஃபிளாஷ் வசதி இருக்கும். ஸ்மார்ட்போனின் இடது பக்கத்தில் வால்யூம் ராக்கர் பட்டன்களும் இருக்கின்றன. ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன் வசதி இருக்கிறது. கீழே யூஎஸ்பி டைப்சி போர்ட் மற்றும் ஸ்பீக்கர் கிரில் வசதியும் உள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படும்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படும்

சமீபத்திய அறிக்கையை பொறுத்தவரையில், ரெனோ 7 தொடர் ஸ்மார்ட்போனின் சிப்செட் விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொடரில் உள்ள ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் டைமன்சிட்டி 920, டைமன்சிட்டி 1200 மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த ரெனோ 7 மாடல் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 920 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் ப்ரோ மாடல் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி உடனும், ரெனோ 7 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

பெரிய அளவிலான கேமரா சென்சார்கள்

பெரிய அளவிலான கேமரா சென்சார்கள்

அதேபோல் முந்தைய கசிவுகளின்படி ரெனோ 7 சீரிஸ் பெரிய அளவிலான கேமரா சென்சார்களை பயன்படுத்தும் என தெரிவித்துள்ளது. ஒப்போ ரெனோ 7 ஸ்மார்ட்போனானது 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் முதன்மை சென்சாரை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரெனோ 7 சீரிஸ் உடன் ஒப்போ பேட் டெப்லெட்டும் அறிவிக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது. வரவிருக்கும் ஒப்போ டேப்லெட் ஆனது அதன் டிஸ்ப்ளேவை சுற்றி குறுகிய பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பஞ்ச் ஹோல் கட்அவுட் உடன் முன்புற கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. இது கலர் ஓஎஸ் மூலம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன்

புதிய ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனம் சமீபத்தில் புதிய ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன். இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 2.4ஜிகாஹெர்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி ஆக்டோ-கோர் சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த சிப்செட் வசதியைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் உட்பட பல்வேறு அமசங்களுக்கு தகுந்தபடி மிக வேகமாக செயல்படும் ஒப்போ கே9எஸ். அதேபோல் மீடியாடெக் சிப்செட் விட இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மிக அருமையாக செயல்படும்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்
கொடுக்கப்பட்டுள்ளது.

ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo Reno 7 Pro Smartphone Might Launched with these Specification: Online Leaks

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X