Home
News

ஆரம்பமே சலுகை, இலவசம்தான்: பிளிப்கார்ட்டில் ஒப்போ ரெனோ 7 5ஜி விற்பனை- எல்லாமே உயர்ரக, மாஸ் அம்சம்!

ஒப்போ ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. ஒப்போ ரெனோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது இந்தியாவில் முன்னதாகவே விற்பனைக்கு வந்துள்ளது. ஒப்போ ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை பிளிப்கார்ட் மற்றும் ஒப்போ இந்தியா இணையதளத்தில் தொடங்கியுள்ளது. ஒப்போ ரெனோ 7 5ஜி விலை, விற்பனை விவரங்கள் மற்றும் தள்ளுபடிகள் குறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 7 5ஜி விற்பனை மற்றும் தள்ளுபடி விவரங்கள்

ஒப்போ ரெனோ 7 5ஜி விற்பனை மற்றும் தள்ளுபடி விவரங்கள்

ஒப்போ ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. ஒப்போ ரெனோ 7 5ஜி ஆனது ஸ்டார்ரி பிளாக் மற்றும் ஸ்டார் டிரையல் ப்ளூ நிறங்களில் கிடைக்கும். ஒப்போ ரெனோ 7 5ஜி விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இது ரூ.28,999 ஆக இருக்கிறது. ஒப்போ ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட் மற்றும் ஒப்போ இந்தியா இணையதளம் மூலம் வாங்கலாம். இந்த தளத்தில் பயனர்கள் ஏணைய தள்ளுபடிகளை பெறுவார்கள்.

ஒப்போ ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போன்

ஒப்போ ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போன்

ஒப்போ ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போனானது ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஸ்டாண்டர்ட் சார்டர்ட் பேங்க் மற்றும் யெஸ் பேங்க் கார்டுகள் மூலம் வாங்கினால் 10% வரை தள்ளுபடியுடன் வாங்கலாம். ஆறு மாதங்கள் வரையிலான கட்டணமில்லா இஎம்ஐ விருப்பங்களுடன் இது கிடைக்கிறது. அதேபோல் ஒப்போ ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள் ஒப்போவின் 30 வாட்ஸ் பவர்பேங்கை இலவசமாக பெறுவார்கள்.

இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் தள்ளுபடி சலுகை

இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் தள்ளுபடி சலுகை

இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் தள்ளுபடி சலுகைகளும் பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் கட்டணமில்லா இஎம்ஐ-கள் ரூ.4834-ல் தொடங்குகின்றன. ஒப்போ ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போனை ஆக்சிஸ் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட வங்கி கார்ட்கள் மூலம் வாங்கும் போது 10% தள்ளுபடியுடன் வாங்கலாம். ஒப்போ ரசிகர்களுக்கு மற்றொரு கவர்ச்சிகரமான ஒப்பந்தமும் கிடைக்கிறது. ரூ.1799 விலையில் இருந்த ஒப்போ என்கோ எம்32 இயர்போன்கள் வெறும் ரூ.1399 என வாங்கலாம்.

ஒப்போ ரெனோ 7 5ஜி அம்சங்கள்

ஒப்போ ரெனோ 7 5ஜி அம்சங்கள்

ஒப்போ ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போனானது முழு எச்டி ப்ளஸ் தீர்மானம் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கிடைக்கிறது. இந்த சாதனம் 6.4 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே உடன் கூடிய ப்ரீமியம் டச் மாதிரி விகிதம் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனானது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது. ஒப்போ ரெனோ 7 5ஜி ஆனது ப்ரீமியம் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இது ஃபோல்ட் ஆன அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதற்கு ஏற்ப இந்த சாதனமும் அமைந்துள்ளது. டூயல் டோன் ரியர் பேனல், ஃபோல்ட் கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. இது கண்களை எளிதில் கவரும் வகையில் உள்ளது. குறிப்பாக ஒப்போ ரெனோ7 5ஜி ஆனது அதன் டிரிபிள் கேமரா அமைப்புடன் போர்ட்ரெய்ட் கேமரா அனுபவத்தை மேம்படுத்தி வழங்குகிறது என்பது இதன் கூடுதல் அம்சமாகும்.

ஒப்போ ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள்

ஒப்போ ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள்

ஒப்போ ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இதன் குறிப்பிடத்தக்க அம்சம் கேமரா அமைப்பாகும். இந்த ஸ்மார்ட்போனில் 64 எம்பி பிரைமரி ஷூட்டர், 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் என மூன்று பின்புற கேமரா அமைப்போடு வருகிறது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புக்கு என இதன் முன்பக்கத்தில் 32 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. ஒப்போ ரெனோ 7 5ஜி சாதனத்தின் போர்ட்ரெய்ட் கேமரா குறித்து பேசலாம். இந்த ஸ்மார்ட்போனானது பொக்கே ஃப்ளேர் போர்ட்ரெய்ட்டை 25 நிலைகளில் சரிசெய்யக்கூடிய துளையுடன் வருகிறது. இதன் காரணமாக டிஎஸ்எல்ஆர் போன்ற ஃப்ளேர் மற்றும் பொக்கே எஃபெக்ட் இதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பொக்கே ஃப்ளேர் தொழில்நுட்பம் என்பது ஒப்போவின் தனித்துவ அம்சமாகும். காரணம் இந்த அம்சம் அனைத்து ரெனோ தொடர் முழுவதும் இடம்பெற்றிருக்கும். இருப்பினும் ஒப்போ ரெனோ 7 5ஜி சிறந்த முன்னேற்றம் அடந்திருக்கிறது என்றே கூறலாம்.

Best Mobiles in India

English summary
Oppo Reno 7 5G Smartphone Sale Start Via Flipkart and Oppo india Store: Offers Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X