Home
News

அடி தூள்.. Oppo Reno 7 5G விற்பனைக்கு ரெடி.. முன்கூட்டிய ஆர்டர் துவங்கியது.. சலுகையுடன் எப்படி வாங்கலாம்?

ஒப்போ ரெனோ 7 5ஜி (Oppo Reno 7 5G) இந்தியாவில் இன்று (பிப்ரவரி 11) மதியம் 12 மணிக்கு மேல், இந்திய அளவில் Oppo Reno 7 5G ஸ்மார்ட்போனுக்கான முன்கூட்டிய ஆர்டர்களை ஆரம்பம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ Oppo India வலைத்தளம் மற்றும் Flipkart வழியாக வாங்குவதற்குக் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. Oppo Reno 7 5G ஆனது Oppo Reno 7 Pro 5G உடன் இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

புதிய Oppo Reno 7 5G

புதிய Oppo Reno 7 5G

இந்த புதிய Oppo Reno 7 5G ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் பற்றி பார்க்கையில், இந்த சாதனம் 6.4' இன்ச் அளவு கொண்ட AMOLED டிஸ்ப்ளேவை 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டுள்ளது. இந்த புதிய Oppo Reno 7 5G ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 900 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. Oppo Reno 7 5G ஆனது 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மூலம் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த சாதனத்திற்கான முன் பதிவு இன்று மதியம் 12 மணி முதல் துவங்கி உள்ளது. இதன் ஓபன் விற்பனை இந்த மாதம் 17 ஆம் தெத்து முதல் துவங்குகிறது.

இந்தியாவில் Oppo Reno 7 5G விலை, முன்கூட்டிய ஆர்டர் விவரங்கள்

இந்தியாவில் Oppo Reno 7 5G விலை, முன்கூட்டிய ஆர்டர் விவரங்கள்

இந்தியாவில் Oppo Reno 7 5G ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 256ஜிபி சேமிப்பு வேரியண்ட் மாடலின் விலை அதன் வகைக்கு வெறும் ரூ. 28,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய Oppo ஸ்மார்ட்ஃபோனுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் இன்று மதியம் 12 மணிக்கு IST நேரப்படி, ஒப்போ நிறுவனத்தின் இணையதளம் மற்றும் பிளிப்கார்ட் வழியாகத் தொடங்குகிறது. இதன் விற்பனை பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் ஒப்போ நிறுவனத்தின் இணையதளம் மற்றும் பிளிப்கார்ட் வழியாகத் தொடங்குகிறது. Oppo Reno 7 5G ஸ்மார்ட்போன் ஆனது Starlight Black மற்றும் Startrails Blue வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

புதிய Oppo Reno 7 5G போனின் சலுகைகள்

புதிய Oppo Reno 7 5G போனின் சலுகைகள்

Oppo மற்றும் Flipkart மூலம் நீங்கள் வாங்கும் Oppo Reno 7 5G ஸ்மார்ட்போன் உடன் Oppo Enco M32 இயர்போன்களை வெறும் ரூ. 1,399 என்ற விலையில் வழங்குகிறது. இந்த சாதனத்தின் அசல் விலையான ரூ. 1,799 ஆகும். பிளிப்கார்ட் இந்த ஸ்மார்ட்போனை விலையில்லா EMI விருப்பங்களுடன் ரூ. 4,834 என்ற விலை முதல் வழங்குகிறது. இத்துடன் ரூ. 3,000 வரை உடனடி தள்ளுபடியையும் நிறுவனம் இப்போது வழங்குகிறது. Axis Bank, Bank of Baroda, Standard Chartered Bank கார்டுகள் மற்றும் பலவற்றின் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்க முடியும். Oppo Reno 7 5G கூடுதல் தள்ளுபடியுடன் எக்ஸ்சேஞ் சலுகையையும் வழங்குகிறது. இதன் மதிப்பும் ரூ. 3,000 வரை செல்கிறது.

Oppo Reno 7 5G ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்

Oppo Reno 7 5G ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்

Oppo Reno 7 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.4' இன்ச் அளவு கொண்ட முழு எச்டி பிளஸ் திறன் கொண்ட 1,080 x 2,400 பிக்சல்கள் உடைய AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 180Hz வரையிலான தொடு மாதிரி வீதத்தைக் கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இதன் மேல் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. Oppo Reno 7 5G ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி ரேம் உடன் இணைந்து ஆக்டா கோர் மீடியா டேக் டைமென்சிட்டி 900 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது உங்களுக்கு சிறந்த மல்டி டாஸ்கிங் மற்றும் வேகமான பயனர் அனுபவத்தை வழங்குகிறது.

புதிய Oppo Reno 7 5G போனின் கேமரா விபரம்

புதிய Oppo Reno 7 5G போனின் கேமரா விபரம்

Oppo Reno 7 5G ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம் பற்றிப் பார்க்கையில் இந்த சாதனம் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், Oppo Reno 7 5G ஸ்மார்ட்போன் அதன் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 256 ஜிபி கொண்ட உள் சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது. இது இரட்டை சிம் (நானோ) உடன் ஆண்ட்ராய்டு 11 இன் மேல் இயங்கும் ColorOS 12 உடன் இயங்குகிறது.

புதிய Oppo Reno 7 5G போனின் பேட்டரி

புதிய Oppo Reno 7 5G போனின் பேட்டரி

Oppo Reno 7 5G ஸ்மார்ட்போனில் உள்ள இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6, ப்ளூடூத் v5.2, GPS/ A-GPS, NFC, USB Type-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அடங்கும். ஆன்போர்டு சென்சார்களில் முடுக்கமானி, சுற்றுப்புற ஒளி சென்சார், கைரோஸ்கோப், பெடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவை அடங்கும். Oppo Reno 7 5G ஆனது அண்டர் டிஸ்ப்ளே கைரேகை சென்சாரை கொண்டுள்ளது. இது 65W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,500mAh டூயல்-செல் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டால் வரும் 17 ஆம் தேதியை உங்கள் காலெண்டரில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Oppo Reno 7 5G Pre Orders Start in India Today Know The Price Offers And Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X