ரூ.11,499 விலையில் Oppo Reno 7 5G வாங்கலாமா? எப்படி? குட்டி சான்ஸ் தான் ஆனால் வொர்த்.!

|

கம்மி விலையில் பெஸ்ட் பெர்பார்மென்ஸ் உடன் ஒரு சூப்பர் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க உங்களுக்கு ஐடியா இருக்கிறதா? அப்படியானால், நீங்கள் உடனே செய்ய வேண்டியது எல்லாம், உங்கள் மொபைலை எடுத்து பிளிப்கார்ட் பக்கத்திற்கு உடனே விரைந்து செல்ல வேண்டும். இங்கு மிட் ரேஞ் ஸ்மார்ட்போன் மாடலான Oppo Reno 7 5G இப்போது மிகவும் குறைந்த விலையில் வாங்கக் கிடைக்கிறது.

Oppo Reno 7 5G போனை ரூ.11,499 விலையில் வாங்கலாமா?

Oppo Reno 7 5G போனை ரூ.11,499 விலையில் வாங்கலாமா?

இந்த பெஸ்டான Oppo Reno 7 5G ஸ்மார்ட்போனின் விலை இவ்வளவு வேகமாக குறையுமென்று யாருமே எதிர்பார்க்கவில்லை. உண்மையை சொல்லப் போனால், இதில் இருக்கும் அம்சங்களுக்கு இதை நீங்கள் வெறும் 11,499 ரூபாய்க்கு வாங்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சலுகை அனைவருக்கும் கிடைக்காது என்றாலும், நீங்களும் அதில் ஒருவராக இருக்க வாய்ப்பிருக்கிறது.

Oppo Reno 7 5G ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன?

Oppo Reno 7 5G ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன?

ட்ரை செய்து பார்ப்பதில் தவறில்லையே.! சரி, இப்போது எப்படி இந்த Oppo Reno 7 5G ஸ்மார்ட்போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் என்பதைப் பார்க்கலாம். இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் Oppo Reno 7 5G மாடலானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டிற்கு உரியது. இந்த சாதனம் இப்போது இந்தியாவில் ரூ. 37,990 என்ற விலையில் கிடைக்கிறது.

EB கணக்குடன் ஆதார் விபரங்களை இணைப்பது எப்படி? இல்லையென்றால் மின்சாரம் துண்டிக்கப்படுமா?EB கணக்குடன் ஆதார் விபரங்களை இணைப்பது எப்படி? இல்லையென்றால் மின்சாரம் துண்டிக்கப்படுமா?

Oppo Reno 7 5G ஸ்மார்ட்போன் மீது புது விலை குறைப்பு

Oppo Reno 7 5G ஸ்மார்ட்போன் மீது புது விலை குறைப்பு

இப்போது பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடியுடன் இந்த Oppo Reno 7 5G ஸ்மார்ட்போன் மாடலை நீங்கள் வெறும் ரூ.28,999 என்ற விலையில் வாங்கலாம். இதன் மீது இப்போது 23% தள்ளுபடி கிடைக்கிறது. இது அனைவருக்கும் கிடைக்கக் கூடிய பொதுவான சலுகையாகும். இத்துடன் குறிப்பிட்ட சில கூடுதல் சலுகையையும் நீங்கள் இப்போது பயன்படுத்தலாம்.

300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சுவாரஸ்யமான சலுகையே இது தான்.!

சுவாரஸ்யமான சலுகையே இது தான்.!

குறிப்பாகக் குறிப்பிட்ட சில வங்கி மற்றும் எக்ஸ்சேஞ் சலுகையைப் பயன்படுத்தும் போது இதன் விலை இன்னும் அதிகமாகக் குறைகிறது. Oppo Reno 7 5G ஸ்மார்ட்போன் மீது கிடைக்கும் எக்ஸ்சேஞ் சலுகை மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது. இந்த சலுகையில் மூலம் உங்களால் Oppo Reno 7 5G ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விலையில் இருந்து ரூ. 17,500 வரை விலை குறைப்பைப் பெற முடிகிறது.

என்ன தான் 5G கெத்துனு சொன்னாலும்.. பந்தயத்துல ஜெயிக்கிறது குதிரை 4G தான்.! ஏன் தெரியுமா?என்ன தான் 5G கெத்துனு சொன்னாலும்.. பந்தயத்துல ஜெயிக்கிறது குதிரை 4G தான்.! ஏன் தெரியுமா?

Oppo Reno 7 5G ஸ்மார்ட்போனை ரூ.11,499 விலையில் வாங்க வாய்ப்பு

Oppo Reno 7 5G ஸ்மார்ட்போனை ரூ.11,499 விலையில் வாங்க வாய்ப்பு

இதன் மூலம் இந்த Oppo Reno 7 5G ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் ரூ.11,499 என்ற விலையில் வாங்க முடிகிறது. உங்களிடம் வொர்கிங் கண்டிஷனில் இயங்கும் ஒரு ஸ்மார்ட்போன் மட்டும் இருந்தால் போதும், உங்களால் இப்போது Oppo Reno 7 5G ஸ்மார்ட்போனின் விலையை முடிந்த வரை குறைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்க Smart TV-ல அமேசான் பிரைம் பயன்படுத்துவது எப்படி? பெரிய ஸ்கிரீனில் பிரைம் யூஸ் பண்ணுங்க.!உங்க Smart TV-ல அமேசான் பிரைம் பயன்படுத்துவது எப்படி? பெரிய ஸ்கிரீனில் பிரைம் யூஸ் பண்ணுங்க.!

உங்க போனுக்கான எக்ஸ்சேஞ் சலுகை வேல்யூ

உங்க போனுக்கான எக்ஸ்சேஞ் சலுகை வேல்யூ

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்சேஞ் சலுகை வேல்யூ ஆனது அதிகப்படியாகக் கிடைக்கும் மதிப்புடன் வழங்கப்பட்டுள்ளது. உங்களிடம் இருக்கும் போனின் நிலையை வைத்து எக்ஸ்சேஞ் வேல்யூ நிர்ணயிக்கப்படும். சரி, இப்போது Oppo Reno 7 5G மீது கிடைக்கும் வங்கி சலுகைகளைப் பற்றிப் பார்க்கையில், இந்த சாதனம் குறிப்பிட்ட 5 வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் ரூ.2,500 வரை தள்ளுபடியை வழங்குகிறது.

BSNL, Airtel, Jio, Vi மக்களே: இது தெரியலனா நீங்க அதிகமா வீண் செலவு பண்ணுறீங்கனு அர்த்தம்.!BSNL, Airtel, Jio, Vi மக்களே: இது தெரியலனா நீங்க அதிகமா வீண் செலவு பண்ணுறீங்கனு அர்த்தம்.!

பழைய போன்களை ஏன் எக்ஸ்சேஞ் செய்வது சிறந்தது?

பழைய போன்களை ஏன் எக்ஸ்சேஞ் செய்வது சிறந்தது?

எக்ஸ்சேஞ் சலுகை கிடைக்காதவர்களுக்கு, வங்கி சலுகைகள் கைகொடுக்கும். எப்போதும் பழைய ஸ்மார்ட்போன்களை உங்களுடன் வைத்துக்கொள்வதை விட, அதற்குக் கிடைக்கும் பெஸ்டான ரேட்டிற்கு விற்பனை செய்துவிட்டு, அந்த தொகையை வைத்து உங்களுடைய அடுத்த புது ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்குவதே சிறந்த ஷாப்பிங் முறையாகும். உங்களை பழைய போனை மாற்ற விரும்பினால், இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.

Best Mobiles in India

English summary
Oppo Reno 7 5G Mid Range Smartphone Gets Price Drop In Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X