Home
News

ஒப்போவின் அடுத்த அட்டகாசம்: ரெனோ 6 ப்ரோ, ரெனோ 6 ப்ரோ+ சிறப்பம்சங்கள் இதுவா?

ஒப்போ ரெனோ 6 ப்ரோ, ஒப்போ ரெனோ 6 ப்ரோ+ ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. ஒப்போ ரெனோ 6 ப்ரோ+ ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

ஒப்போவின் அடுத்த அட்டகாசம்: ரெனோ 6 ப்ரோ, ரெனோ 6 ப்ரோ+ சிறப்பம்சங்கள்!

இந்த சாதனம் குறித்த சான்றிதழ்கள் சமீபத்தில் வெளியானதால் இதன் வெளியீட்டு தேதி வெகு தொலைவில் இருக்காது என கூறப்படுகிறது. ஒப்போ ரெனோ 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஒப்போ ரெனோ 6, ஒப்போ ரெனோ 6 ப்ரோ, ஒப்போ ரெனோ 6 ப்ரோ+ ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்கள் இதில் இடம்பெறும் என

Oppo Reno 6 Pro மற்றும் Oppo Reno 6 Pro+ சிறப்பம்சங்கள் டீனா இணையதளத்தில் கசிந்துள்ளது. டிப்ஸ்டர் தகவலின்படி ஒப்போ ரெனோ 6 ப்ரோ மாடல் மீடியா டெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ஒப்போ ரெனோ 6 ப்ரோ+ வேரியண்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

ஒப்போவின் அடுத்த அட்டகாசம்: ரெனோ 6 ப்ரோ, ரெனோ 6 ப்ரோ+ சிறப்பம்சங்கள்!

சின டிப்ஸ்டர் டிஜிட்டல் தளமான வெய்போவில், ஒப்போ ரெனோ 6 ப்ரோ, ஒப்போ ரெனோ 6 ப்ரோ+ சாதனத்தின் மாதிரி எண் PEPM00 உடன் பட்டியலிடப்பட்டுள்ளது. அதேபோல் ஒப்போ ரெனோ 6 ப்ரோ+ PENM00 உடன் பட்டியலிடப்படுகிறது. ஒப்போ ரெனோ 6 ப்ரோ ஸ்மார்ட்போனானது 6.55 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் எனவும் ஆண்ட்ராய்டு 11 மூலம் இது இயக்கப்படும் எனவும் பட்டியலில் கூறப்படுகிறது. இது மீடியாடெக் டைமன்சிட்ட 1200 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 2200 எண்ஏஎச் இரட்டை செல் பேட்டரி கொண்டிருக்கும் என டீனா பட்டியல் தெரிவிக்கிறது.

ஒப்போ ரெனோ 6 ப்ரோ+ ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு இயங்குகிறது. மேலும் இது 6.55 இன்ச் டிஸ்ப்ளேவுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இதில் 2200 எம்ஏஎச் இரட்டை செல் பேட்டரியுடன் வருகிறது.

2200 எம்ஏஎச் இரட்டை செல் பேட்டரி என்பது குறித்து பார்க்கையில், இதில் மொத்தம் 4500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சியுடன் வருகிறது. இது முழு எச்டி ப்ளஸ் 1,080x2,400 பிக்சல்கள் ஓஎல்இடி டிஸ்ப்ளே இடம்பெறும் என கூறப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போனிலும் மேற்புற இடது மூளையில் பஞ்ச் கட்அவுட் வசதியுடன் செல்பி கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் வளைந்த விளிம்பு டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் ஒப்போ ரெனோ 6 ப்ரோ மற்றும் ஒப்போ ரெனோ 6 ப்ரோ+ ஆகிய ஸ்மார்ட்போன்கள் 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Oppo Reno 6 PRO, Oppo Reno 6 pro+ Smartphone May launching Soon with these Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X