Home
News

ஒப்போவின் தீபாவளி சர்ப்ரைஸ்- புதிய பதிப்பு மேம்பட்ட அம்சத்தோடு செப்டம்பர் 27 வரும் சாதனம்!

ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5ஜி தீபாவளி பதிப்பின் இந்திய வெளியீட்டு தேதி செப்டம்பர் 27 என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒப்போ இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. ஒப்போ எஃப் 19 எஸ் உடன் நிறுவனம் இம்மாதம் ரெனோ 6 ப்ரோ 5ஜி தீபாவளி பதிப்பை இந்தியாவிற்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. டைமன்சிட்டி 1200 செயலி மூலம் இயக்கப்படும் ரெனோ 6 ப்ரோ 5ஜி உட்பட இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஸ்பெஷல் எடிஷன் மாடல் அடுத்த வாரம் நாட்டில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அடுத்த ப்ரீமியம் மிட் ரேஞ்ச் போனில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ரெனோ 6 ப்ரோ  தீபாவளி பதிப்பு

ஒப்போ ரெனோ 6 ப்ரோ தீபாவளி பதிப்பு

ஒப்போ ரெனோ 6 ப்ரோ தீபாவளி பதிப்பு இந்தியாவில் அடுத்த வாரம் தொடங்குகிறது. ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5ஜி-ன் தீபாவளி பதிப்பு வெளியீடு நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சிறப்பு பதிப்பான ரெனோ 6 தொடர் மாடல் செப்டம்பர் 27 வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிறுவனம் வெளியீட்டு நேரத்தை பிற்பகல் 3 மணிக்கு திட்டமிட்டுள்ளது. ஒப்போ எஃப் 19 எஸ் சாதனமும் அதே தேதியில் அறிமுகப்படுத்துவது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை தவிர நிறுவனம் என்கோ பட்ஸின் புதிய வண்ண மாறுபாட்டை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. முன்னதாக ஒப்போ என்கோ பட்ஸ் ஒற்றை வெள்ளை வண்ண விருப்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனம் என்கோ பட்ஸின் புதிய ப்ளூ வண்ண விருப்பத்தை அறிமுகப்படுத்தும் எனவும் இதன் விலை ரூ.1,999 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

ரெனோ 6 ப்ரோ 5ஜி தீபாவளி பதிப்பு: அம்சங்கள்

ரெனோ 6 ப்ரோ 5ஜி தீபாவளி பதிப்பு: அம்சங்கள்

ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5ஜி தீபாவளி பதிப்பு செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் புதிய வன்பொருள் மற்றும் வடிவமைப்பு மேம்படுத்தல் இருக்குமா என்பது கணிப்பது சற்று கடினமாகவே இருக்கிறது. இதன் பெயர் குறிப்பிடுவது போல் புதிய சிறந்த மாறுபட்ட அம்சத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ரெனோ 6 ப்ரோ 5ஜி தீபாவளி எடிஷன்

ரெனோ 6 ப்ரோ 5ஜி தீபாவளி எடிஷன்

ரெனோ 6 ப்ரோ 5ஜி தீபாவளி எடிஷனின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இதன் சில அம்சங்கள் ரெனோ 6 ப்ரோ 5ஜிக்கு ஒத்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. இது டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் 2 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் கேமரா உட்பட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் இதில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இது 6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வளைந்த விளிம்பு காட்சியை கொண்டிருக்கும் எனவும் பஞ்ச் ஹோல் வடிவமைப்போடு வரும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. ரெனோ 6 ப்ரோ 5ஜி சாதனத்தின் அம்சங்கள் இதுதான் என்பது வெறும்த தகவல்களே ஆகும். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.43 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

6.43 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

ஒப்போ ரெனோ 6 சாதனமானது 6.43 இன்ச் முழு எச்டி பிளஸ் கொண்ட 1080 x 2400 பிக்சல்கள் உடைய பிளாட் அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் உள்ளது. இந்த ஒப்போ ரெனோ 6 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான கலர்ஓஎஸ் 11.3 இயங்குதளத்தில் இது இயங்குகிறது.

Best Mobiles in India

English summary
Oppo Reno 6 Pro 5G Diwali Edition Going to Launch on September 27: Expected Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X