வேறலெவல் லுக்: ரெனோ க்ளோ வடிவமைப்போடு ஒப்போ ரெனோ 6 லைட்- 48எம்பி கேமரா, 6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 662 வசதி!
ஒப்போ ரெனோ 6 லைட் ஸ்மார்ட்போனானது ரெனோ 6 தொடரில் இருந்து நிறுவனத்தின் ரெனோ க்ளோ வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. ரெனோ 6 தொடரின் சமீபத்திய கூடுதல் சாதனமாக ஒப்போ ரெனோ 6 லைட் அறிமுகம் செய்யப்பட்டுள்லது. சீன நிறுவனம் ஆரம்பத்தில் அதன் ஒப்போ ரெனோ 6 மற்றும் ஒப்போ ரெனோ 6 ப்ரோ சாதனத்தை மே 2021-ல் சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில் தற்போது மெக்சிகோவில் ஒப்போ ரெனோ 6 லைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் ஒப்போ ரெனோ 6 தொடரில் காணப்படும் அதே ரெனோ க்ளோ வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

ஒப்போ ரெனோ 6 லைட்
ஒப்போ ரெனோ 6 லைட் சாதனமானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ஒப்போ ரெனோ 6 லைட் ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 11 மூலம் இயக்கப்படுகிறது.

ஒப்போ ரெனோ 6 லைட் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை
ஒப்போ ரெனோ 6 லைட் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த விவரங்களை பார்க்கலாம். ஒப்போ ரெனோ 6 லைட் சாதனமானது இந்திய விலைப் படி ரூ.32,200 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது அமேசான் மெக்ஸிகோ மற்றும் சில்லறை வலைதளங்களில் வாங்குவதற்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஒப்போ ரெனோ 6 லைட் ஸ்மார்ட்போனானது பிளாக் மற்றும் ரெயின்போ சில்வர் ஆகியவண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அதே சமயத்தில் ஒப்போ ரெனோ 6 லைட் சாதனத்தின் இந்திய மற்றும் உலகளாவிய அறிமுகம் குறித்த தகவலை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஒப்போ ரெனோ 6 லைட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
ஒப்போ ரெனோ 6 லைட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வருகிறது. ஒப்போ ரெனோ 6 லைட் சாதனமானது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்குகிறது. இது நிறுவனத்தின் கலர் ஓஎஸ் ஸ்கின் மேல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இணைக்கப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ 6 லைட் ஆனது 6.43 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,040 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 800 நிட்ஸ் உச்ச பிரகாச அனுபவத்தை வழங்குகிறது.

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா
ஒப்போ ரெனோ 6 லைட் ஸ்மார்ட்போனானது 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் வருகிறது. இது 79 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ, போர்ட்ரெய்ட் ஷாட்கள் மற்றும் மேக்ரோ போட்டோ கிராஃபிக்கான இரட்டை 2 மெகாபிக்சல் கேமராக்கள் என டிரிபிள் ரியர் கேமராக்கள் இருக்கின்றன. அதேபோல் ஒப்போ ரெனோ 6 லைட் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் அபெர்ச்சர் லென்ஸ் மற்றும் 79 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ கொண்ட 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முதன்மை கேமரா மற்றும் செல்பி கேமரா என இரண்டும் 1080 பிக்சல் வீடியோவை பதிவு செய்ய அனுமதிக்கிறது.

33 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு
இந்த ஸ்மார்ட்போனானது நிறுவனத்தின் தனியுரிம சூப்பர்வூக் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யூஎஸ்பி டைப்-சி மூலம் 33 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு என ஒப்போ ரெனோ 6 லைட் ஆனது இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் அம்சத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5 இணைப்பு ஆதரவோடு வருகிறது. இந்த ஒப்போ ரெனோ 6 லைட் சாதனமானது 175 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications