Home
News

OPPO இனி வேற மாறி.. ரெனோ 14 சீரிஸ்-க்கு அடிச்ச யோகம்.. ஜெமினி ஏஐ மிரளவிடப் போகுது.. கைகோர்த்த நிறுவனங்கள்!

ஓப்போ ரெனோ 14 சீரிஸ் (OPPO Reno14 Series) மாடல்களின் பல்வேறு ஆப்கள் மற்றும் சேவைகளில் ஜெமினி ஏஐ (Gemini AI) பீச்சர்களை ஒருகிணைப்பதற்காக கூகுள் (Google) மற்றும் ஓப்போ (OPPO) நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன. கலர்ஓஎஸ் 15 கிடைக்கும் இந்த மாடல்களில் ஓப்போ நோட்ஸ், காலண்டர், கிளாக் போன்ற பல்வேறு ஆப்களில் ஜெமினி ஏஐ ஒருங்கிணைப்பு செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜெமினி ஏஐ தனியாகவே ஆப் மூலம் கிடைக்கிறது. அதேபோல கூகுள் பிக்சல் போன்களின் பல்வேறு ஆப்களில் ஒருகிணைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மற்ற பிராண்ட் போன்களின் ஓஎஸ்களில் நேரடியாக ஒருகிணைப்பு செய்யப்படவில்லை. ஆனால், இனிமேல் ஓப்போ ரெனோ 14 மற்றும் ஓப்போ ரெனோ 14 ப்ரோ மாடல்களில் நேரடியாக ஜெமினி ஏஐ பீச்சர்கள் கிடைக்கப் போகிறது.

OPPO இனி வேற மாறி! ரெனோ 14 சீரிஸ்-க்கு அடிச்ச யோகம்.. ஜெமினி ஏஐ வருது!

ஓப்போ ரெனோ 14 (OPPO Reno 14) மற்றும் ஓப்போ ரெனோ 14 ப்ரோ (OPPO Reno 14 Pro) மாடல்களில ஏற்கனவே கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) மூலம் கேமரா மற்றும் மல்டி மீடியா ஆப்களில் ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த கலர்ஓஎஸ் 15 சப்போர்ட் கொண்ட ஓப்போ நோட்ஸ் (OPPO Notes), காலண்டர் (Calendar) மற்றும் கிளாக் (Clock) போன்ற ஆப்களில் இனிமேல் ஜெமினி ஏஐ பீச்சர்களும் வர இருக்கிறது.

ஆகவே, பெரும்பாலான ஓப்போ ஆப்களில் ஜெமினி ஏஐ பீச்சரகளை எதிர்பார்க்கலாம். இந்த பீச்சர்கள் எப்படி வேலை செய்யும் என்பது பற்றி ஓப்போ நிறுவனம் தெரிவிக்கவில்லை. இருப்பினும், ஜெமினி ஏஐ மூலம் ஓப்போ ஆப்களை வாய்ஸ் கன்ட்ரோல் மற்றும் சாட் மூலம் கன்ட்ரோல் செய்து கொள்ளும்படி அப்டேட்கள் கொடுக்கப்படுவது உறுதியாகும்.

இந்த ஜெமினி ஏஐ பீச்சர்களை வழங்குவதற்கு கூகுளுடன் ஒப்பந்தம் செய்திருப்பதை ஓப்போ நிறுவனம் உறுதி செய்துள்ளது. பீச்சர்கள் எப்படி இருக்கும் என்பது ஓரிரு வாரங்களில் தெரியவரும். ஏனென்றால், ஓப்போ ரெனோ 14 சீரிஸ் ஏற்கனவே சீன மார்கெட்டில் வெளியாகிவிட்டது. இப்போது, குளோபல் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இவற்றிலேயே ஜெமினி ஏஐ வர இருக்கிறது.

இந்த நேரத்தில் ஓப்போ ரெனோ 14 மற்றும் ரெனோ 14 ப்ரோ மாடல்களின் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால், ஓப்போ ரெனோ 13 சீரிஸ் போலவே சீன வெர்ஷனில் வந்த அதே பீச்சர்கள் குளோபல் வெர்ஷனிலும் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஓப்போ ரெனோ 14 போனில் பஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 4என்எம் (Octa Core Dimensity 8350 4nm) சிப்செட் வருகிறது.

ஓப்போ ரெனோ 14 ப்ரோ மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 4என்எம் (Octa Core Dimensity 8450 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த மாடல்களில் கலர்ஓஸ் 15 மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உள்ளது. அதேபோல ப்ரோ மாடலில் 6200mAh பேட்டரி மட்டுமல்லாமல், அதறகு 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங், 50W ஏர்வூக் வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது.

ஆனால், ஓப்போ ரெனோ 14 போனில் 6000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்படுகிறது. மற்ற பீச்சர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஓப்போ ரெனோ 14 போனின் ஆரம்ப விலை ரூ.33,245 பட்ஜெட்டிலும், ஓப்போ ரெனோ 14 ப்ரோ போனின் ஆரம்ப விலை ரூ.41,560 பட்ஜெட்டிலும் இருக்கிறது. இது சீன வேரியண்ட்களின் விலைகளாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno 14 Series Gets Gemini AI Integration through Strategic Google Partnership
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X