பட்ஜெட்ல பட்டையை கிளப்பும் Oppo Reno 13.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 50MP ட்ரிபிள் கேமரா.. விலை என்ன?
ஒப்போ (OPPO) நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் தயாரிப்பு வரிசையில் புதிதாக ஒப்போ ரெனோ 13 சீரிஸ் (Oppo Reno 13 Series) என்ற புதிய வரிசையை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ஒப்போ ரெனோ 13 (Oppo Reno 13) வரிசையில் நிறுவனம் இரண்டு அற்புதமான மற்றும் அழகாக செதுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது என்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போனிற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அப்படி இந்த போனில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அந்த ஒரு ஸ்மார்ட்போன் இப்போது அறிமுகமாகவுள்ளது. அது வேறெந்த போனும் இல்லை, ஒப்போ அறிமுகம் செய்யவிருக்கும் புதிய ஒப்போ ரெனோ 13 சீரிஸ் வரிசை ஸ்மார்ட்போன் சாதனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சீரிஸ் வரிசையில், ஒப்போ நிறுவனம், ஒப்போ ரெனோ 13 (Oppo Reno 13) மற்றும் ஒப்போ ரெனோ 13 ப்ரோ (Oppo Reno 13 Pro) ஆகிய இரண்டு மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது.

ஒப்போ ரெனோ 13 (Oppo Reno 13) மற்றும் ஒப்போ ரெனோ 13 ப்ரோ (Oppo Reno 13 Pro):
இந்த Oppo Reno 13 வரிசை ஸ்மார்ட்போன் சாதனங்கள் மிட் பட்ஜெட் ஸ்மார்ட்போன் வரிசையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் அறிமுகம் வரும் நவம்பர் 25, 2024 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், ஒப்போ நிறுவனம் அதன் புதிய டேப்லெட் சாதனமான ஒப்போ பேட் 3 (Oppo Pad 3 Tablet) சாதனத்தையும் அறிமுகம் செய்யுமென்று வதந்திகள் வெளியாகியுள்ளது.
புதிய ஒப்போ ரெனோ 13 (Oppo Reno 13) ஸ்மார்ட்போன் சாதனம் பட்டர்ஃபிளை பர்பிள் (Butterfly Purple) நிறம் என்ற கண்கவர் நிறத்துடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. வென்னிலா மாடல் மற்றும் ப்ரோ மாடல்கள் பார்ப்பதற்கு ஏறக்குறைய ஒரேமாதிரியாக இருந்தாலும், அதன் ஹார்ட்வேர் அம்சங்களில் பல மாற்றங்களை நம்மால் பார்க்க முடிகிறது. ப்ரோ மாடல்களின் திறன் மேம்பட்டதாக இருப்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
16GB ரேம் + 1TB ஸ்டோரேஜ் மாடல்கள்:
புதிய ஒப்போ ரெனோ 13 சீரிஸ் சாதனங்கள் 12GB RAM + 256GB, 12GB RAM + 512GB, 16GB RAM + 256GB, 16GB RAM + 512GB, and 16GB RAM + 1TB என்ற ஐந்து ஸ்டோரேஜ் வேரியண்ட் விருப்பத்துடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சாதனங்கள் இந்திய சந்தையில் களமிறங்க டிசம்பர் மாதம் வரை காலம் எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
வென்னிலா ஒப்போ ரெனோ 13 சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 8300 சிப்செட் (MediaTek Dimensity 8300 SoC) உடன் வெளிவரும். அதேபோல், ஒப்போ ரெனோ 13 ப்ரோ சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 8350 (MediaTek Dimensity 8350 chipset) சிப்செட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனங்களில் நார்மல் ஒப்போ ரெனோ 13 டிவைஸ் 6.59" இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும்.
விலை: ஒப்போ ரெனோ 13 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனம் 6.83" இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் 50MP மெயின் கேமரா, 50MP டெலிபோட்டோ லென்ஸ், மற்றும் 8MP அல்ட்ரா வைடு கேமராவுடன் வரும் என்று கூறப்படுகிறது. முன்பக்கத்தில், 50MP செல்பி கேமரா அம்சத்தை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. Oppo Reno 13 மாடல் ரூ. 32,999 விலை முதல் துவங்க வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications








