Home
News

11வது முறையாக தூள் கிளப்பிய Oppo.. புது Oppo Reno 11 சீரிஸ் போன்களில் அது இருக்கா? லீக் தகவல்..

சீன சந்தையில் விற்பனை செய்வதற்காக ஒப்போ ரெனோ 11 சீரிஸ் (Oppo Reno 11) ஸ்மார்ட்போன் உற்பத்தியில் ஓப்போ (Oppo) நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த போனின் அறிமுகம் மிக விரைவில் நடக்கவுள்ளதால், இந்த போன் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான ஹானர் (Honor), சீனாவில் தனது புதிய ஸ்மார்ட்போன் லான்ச் ஈவன்டை (Launch event) நவம்பர் 23ஆம் தேதி நடத்தவுள்ளது. அதே நாளில் ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 11 சீரிஸ் போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் ஒப்போ ரெனோ 11 சீரிஸ் லான்ச்சையொட்டி சில சீனாவை சேர்ந்த லீக்கர்கள் (Leakers) அதன் அம்சங்கள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

11வது முறையாக தூள் கிளப்பிய Oppo.. புது Oppo Reno 11 சீரிஸ் போன்..

ஒப்போ ரெனோ 11 மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ விபரங்கள் (Oppo Reno 11 and Reno 11 Pro details):

ட்ரிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station), ஓப்போ ரெனோ 11 மற்றும் ரெனோ 11 ப்ரோவின் டிஸ்ப்ளே (Display), சிப்செட் (Chipset), டெலிபோட்டோ கேமரா (Telephoto Camera) ஆகியவை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. வெய்போ (Weibo) இணையதளத்தில், இந்த புதிய சீரிஸ் ஸ்மார்ட் போனின் டிசைனானது அதன் முந்தைய எடிஷனான (edition) ஓப்போ ரெனோ 10 சீரிஸை போலவே இருக்கிறது என்று பகிர்ந்துள்ளனர்.

ஓப்போ ரெனோ 11 சீரிஸில் எலிப்டிகல் கேமரா மாட்யூல் (Elliptical camera module) உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த கேமரா மாட்யூல் இரண்டு பகுதிகலாக பிரிக்கப்பட்டு, ஒரு பகுதியில் இரண்டு கேமரா சென்சார்களும் மூன்றாவது லென்ஸானது மாட்யூலின் இரண்டாவது பகுதியில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓப்போ ரெனோ 11 ப்ரோ சீரிஸின் சிறப்பு அம்சங்களைப் பற்றி கூறுகையில், இன்னும் பல சுவாரஸ்யங்களை கொண்டுள்ளது.

Oppo Reno 11 மற்றும் Oppo Reno 11 Pro-வில் என்ன சிப்செட்டை எதிர்பார்க்கலாம்?

இது 1.5K ரெசொல்யூஷன் (Resolution) கொண்ட கர்வ்ட்-எட்ஜ் (Curved-edge) OLED பேனல் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஓப்போ 10 ப்ரோ+ ஸ்மார்ட் போனைப் போலவே ஸ்னாப்ட்ராகன் 8 ப்ளஸ் ஜென் 1 (SnapDragon 8 Plus Gen 1) சிப்செட் கொண்டு இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஓப்போ ரெனோ 11 ஸ்மார்ட்போனானது, ஓப்போ ரெனோ 10 ப்ரோ சீனா வேரியண்ட்டைப் போல டைமென்ஸிட்டி 8200 சிப்செட் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

டிப்ஸ்டர்கள் ரெனோ 11 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், ரெனோ 11 ப்ரோவைப் போலவே FHD+ ரெசொல்யூஷன் கொண்ட கர்வ்ட்-எட்ஜ் OLED பேனலை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போனின் மற்ற அம்சங்களைத் தாண்டி அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு முக்கியமான அம்சம் என்றால் அது கேமரா தான்.

ஒப்போ ரெனோ 11 சீரிஸ் போனின் எதிர்பார்க்கப்படும் கேமரா அம்சம்:

கிட்டத்தட்ட டிஜிட்டல் கேமரா தரத்தை தாண்டி ஸ்மார்ட்போன்களின் கேமரா அம்சங்கள் இப்போது மேம்பாட்டு இயங்குகிறது. அந்த வகையில் ஓப்போவும் தனது ஸமார்ட் போன் சீரிஸ்களில் சிறப்பான கேமரா அம்சங்களை கொடுத்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. டிப்ஸ்டர்கள் வெளியிட்ட தகவல்களின்படி ரெனோ 11 மற்றும் ரெனோ 11 ப்ரோ ஸ்மார்ட் போன்களில் மூன்று கேமரா லென்ஸ்கள் இருக்கும்.

இதில் இரண்டு கேமராக்கள் 2x ஆப்டிக்கல் ஜூம் (Optical zoom) தன்மை கொண்ட 32 மெகா பிக்ஸல் IMX709 டெலிபோட்டோ கேமராக்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களும் ப்ளாஸ்டிக் மிட்டில் ஃப்ரேமை (Plastic middle frame) கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒப்போ ரெனோ 10 ப்ரோ+ ஸ்மார்ட் போனில் முதல் முறையாக ஓப்போ பெரிஸ்கோப் டெலிபோட்டொ கேமராவை (Periscope telephoto camera) அறிமுகம் செய்தது.

அதே போல ரெனோ 11 சீரிஸில் அந்த கேமரா அம்சம் வருமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போதுவரை அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எது எப்படியாக இருந்தாலும் வரவிருக்கும் ஒப்போ ரெனோ 11 சீரிஸ் சாதனம் கட்டாயம் இந்தியாவில் பட்டையை கிளப்ப போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 11 and 11 Pro Display Chipset and Camera Details Leaked With Render Pictures
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X