Home
News

அதிரடியாக ஒரே நேரத்தில் 4 சாதனங்களை அறிமுகம் செய்யும் Oppo! இனி இந்த போன் தான் கெத்து!

ஒப்போ (Oppo) நிறுவனம் இன்று புதிதாக 4 சாதனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. இதில் 3 புது ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களும், ஒரு TWS இயர்பட்ஸ் சாதனமும் அறிமுகம் செய்யப்படுகிறது. ஒப்போவின் புதிய சாதனங்கள் என்ன விலையில் வருமென்று பார்க்கலாம்.

ஒப்போ நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு, இந்தியாவில் அதன் ஒப்போ ரெனோ சீரிஸ் (Oppo Reno Series) ஸ்மார்ட்போன் மாடல்களை அப்டேட் செய்கிறது. இறுதியாக நிறுவனம் 1 ஆண்டிற்கு முன்பாக ஒப்போ ரெனோ 8 சீரிஸ் (Oppo Reno 8 Series) ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக வரவேண்டிய ஒப்போ ரெனோ 9 சீரிஸ் போன்களை நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யவில்லை.

அதிரடியாக ஒரே நேரத்தில் 4 சாதனங்களை அறிமுகம் செய்யும் Oppo!

இப்போது இறுதியாக ஒப்போ நிறுவனம், இன்று அதன் ஒப்போ ரெனோ 10 (Oppo Reno 10 Series) சீரிஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்போ ரெனோ 10 சீரிஸ் வரிசையில், நிறுவனம் புதிதாக 3 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. இத்துடன், நிறுவனம் ஒப்போ ஏக்னோ ஏர் 3 ப்ரோ இயர்பட்ஸ் (OPPO Enco Air 3 Pro TWS) சாதனத்தை அறிமுகம் செய்கிறது.

இதில் ஒப்போ ரெனோ 10 (Oppo Reno 10), ஒப்போ ரெனோ 10 ப்ரோ (Oppo Reno 10 Pro) மற்றும் ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் (Oppo Reno 10 Pro+) ஆகிய மாடல்களை அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனுடன், புதிய ஒப்போ இயர்பட்ஸ் சாதனத்தை நிறுவனம் இன்று மதியம் 12 மணி அளவில் அறிமுகம் செய்கிறது.

இந்த நிகழ்வை ஒப்போவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் வழியாக நேரலையில் பார்க்கலாம். ஒப்போ ரெனோ 10 சீரிஸ் வரிசை ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்ற தகவலை இப்போது பார்க்கலாம். இந்தத் தொடரில் உள்ள மூன்று போன்களும் ஒரே ஸ்டோரேஜ் வேரியண்ட் மற்றும் 2 வெவ்வேறு விதமான நிறங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடியாக ஒரே நேரத்தில் 4 சாதனங்களை அறிமுகம் செய்யும் Oppo!

முந்தைய கசிவின் அடிப்படையில் வைத்து பார்க்கையில், ஒப்போ ரெனோ 10 சீரிஸின் எதிர்பார்க்கப்படும் விலைகளை நாம் இங்கு கணித்துள்ளோம். இந்த விலைக்கு நெருக்கமான விலையிலேயே இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் OPPO Reno 10 இன் விலை பற்றி பார்க்கையில், இது ரூ.38,999 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஐஸ் புளூ மற்றும் சில்வரி கிரே வண்ணங்களில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெளிவரும். அடுத்தபடியாக, OPPO Reno 10 Pro ஆனது 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கிடைக்கும். இதன் விலை ரூ.44,999 ஆக இருக்கும். இந்த போன் க்ளோஸி பர்ப்பில் மற்றும் சில்வரி கிரே வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

இறுதியாக OPPO Reno 10 Pro+ ஆனது இதே ஸ்டாராஜ் விருப்பத்துடன், ஒரே வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ. 59,999 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் கேட்ஜெட் ஆக அறிமுகம் செய்யப்படும் புதிய OPPO Enco Air 3 Pro TWS இயர்பட்ஸ் சாதனம் அதன் முன்னோடி மாடலை விட அதிக விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ என்கோ ஏர் 2 ப்ரோ சாதனம் அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில் ரூ.3,499 என்ற விலைக்கு விற்பனைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்போவின் இந்த புதிய OPPO Enco Air 3 Pro TWS இயர்பட்ஸ் சாதனம், ரூ.7,999 என்ற விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 10 Series Launching With Oppo Ecno Air 3 Pro TWS Earbuds In India Today
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X