இனி போட்டிபோட ஆளில்ல.. சோனி சென்சாருடன் கேமராவில் மகுடம் சூடும் Oppo Reno 10 Pro Plus
ஒப்போ ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் (Oppo Reno 10 Pro Plus) போன் பிரம்மாண்ட அம்சங்கள் உடன் மார்க்கெட்டில் அறிமுகமாகி இருக்கிறது. சோனி சென்சாருடன் கூடிய 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், OLED டிஸ்பிளே என்று ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித்தூக்கும் அம்சங்கள் கொண்டுள்ளது. இதுகுறித்த விவரங்கள் இதோ.
ஒப்போ ஸ்மார்ட்போனிகளிலேயே ரெனோ சீரிஸ் (Reno Series) போன்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏனென்றால், இந்த சீரிஸ் போன்களின் டிசைன் பிரீமியம் பிராண்ட் பீல் கொடுக்கும் வகையில் இருக்கும். அதோடு அம்சங்களும் ஆர்ச்சர்யப்படுத்தும் விதமாக இருக்கும். அதுவும் ரெனோ சீரிஸ்களில் வரும் கலர்ஓஎஸ்களில் கொடுக்கப்படும் யூசர் இன்டர்பேஸ் தரமாக இருக்கும்.

இதனாலேயே அந்த சீரிஸ் போனுக்கான வரவேற்பு எப்போதும் அதிகரித்து காணப்படுகிறது. இப்போது, ரெனோ சீரிஸில் ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் விற்பனைக்கு வந்துள்ளது. முதலில் சீனாவில் அறிமுகமாகி இருக்கிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதன் அம்சங்களை பார்த்தால் இந்திய யூசர்கள் வெயிட் பண்ணவே சிறிது கஷ்டப்பட வேண்டியது இருக்கும் போலிருக்கிறது. அந்த அளவுக்கு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் அம்சங்கள்: இந்த போன் 6.74 இன்ச் ஃபுல்எச்டி+ கர்வ்ட் ஓஎல்டி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் (Touch Sampling Rate) மற்றும் 1.5K ரெசொலூஷன் (Resolution) கொண்ட புரோஎக்ஸ்டிஆர் (ProXDR) டிஸ்பிளேவாகும்.
இந்த போனில் ஆண்டிராய்டு 13 உடன் (Android 13) குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ( Qualcomm Snapdragon 8+ Gen 1) பிராசஸர் வருகிறது. அதோடு கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) வருகிறது. 16 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் என்று இரண்டு வேரியண்டுகளில் வருகிறது. கேமராவை பொறுத்தவரையில் 50 எம்பி மெயின் (Main) கேமரா + 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் (Telephoto Lens) + 8 எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் (Wide-Angle Lens) என டிபிள்லேயர் செட்டப் கொண்டுள்ளது. செல்பீ கேமரா 32 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் உடன் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மெயின் கேமராவுக்கு சோனி நிறுவனத்தின் ப்ளாக்ஷிப் (Flagship) சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 100W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 4700mAh பேட்டரி வருகிறது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் காரணமாக போன் வெப்பமடைவதை தடுக்க பிரத்யேகமாக ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் போனில் ஸ்ட்ராங்கஸ்ட் கூலிங் சிஸ்டம் (Strongest Cooling System) என்றும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பிரில்லியண்ட் கோல்டு (Brilliant Gold), ட்விலைட் பர்ப்பிள் (Twilight Purple) மற்றும் மூன் ஸீ பிளாக் (Moon Sea Black ) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் போனின் விலையை பொறுத்தவரையில், 16 ஜிபி - 256 ஜிபி வேரியண்ட் விலை 3,899 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.45,800) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல 16 ஜிபி - 512 ஜிபி வேரியண்ட் விலை 4,299 (இந்திய மதிப்பில் ரூ.50,450) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








