Home
News

​சைலன்டாக விலையை குறைத்த ஒப்போ.. 80W சார்ஜிங்.. 50MP கேமரா.. 256GB மெமரி.. எந்த மாடல்?

சமீபத்தில் நத்திங், விவோ நிறுவனங்கள் சில ஸ்மார்ட்போன்களின் விலையைக் குறைத்த நிலையில் ஒப்போ நிறுவனமும் தனது அசத்தலான ஸ்மார்ட்போனின் விலையைக் குறைத்துள்ளது. அதாவது ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை தான் குறைத்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி முன்பு ரூ.39,999-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட விலை குறைப்பின் மூலம் ரூ.37,999-க்கு வாங்க முடியும்.

​சைலன்டாக விலையை குறைத்த ஒப்போ.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

குறிப்பாக ஒப்போ ஆன்லைன் ஸ்டோரில் மட்டுமே இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி போனுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் இன்னும் இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி விலை குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Oppo Reno 10 Pro 5G specifications): 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஓஎல்இடி 3டி கர்வ்டு டிஸ்பிளே வசதியுடன் இந்த அசத்தலான ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. பின்பு 1,080X 2,412 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

சக்திவாய்ந்த ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி சிப்செட் உடன் இந்த அசத்தலான ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். மேலும் கலர்ஒஎஸ் 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ஓஐஎஸ் உடனான 50எம்பி மெயின் சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் + 32எம்பி டெலிஃபோட்டோ சென்சார் + 8எம்பி வைட்-ஆங்கிள் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

​சைலன்டாக விலையை குறைத்த ஒப்போ.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக ஃபேஸ் அன்லாக்கையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி மாடல்.

அதேபோல் இது 4,600mAh பேட்டரியை 80W சூப்பர்வூக் ஃபிளாஷ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் கொண்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 28 நிமிடங்களில் பேட்டரியை நிரப்பும். குறிப்பாக வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 10 Pro 5G price cut in India: check new price and more details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X