ஆன்லைனில் வெளிவந்துவிட்டது ஓப்போ R11 மாடலின் புகைப்படங்கள்: முழு விபரங்கள் இதோ

By Siva
|

ஸ்மார்ட்போன் சந்தையில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனங்களில் ஒன்று ஓப்போ நிறுவனமும் ஒன்று என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. இந்த நிலையில் இந்நிறுவனத்தின் ஓப்போ R11 மாடல் மிக விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த மாடலின் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படங்கள் மூலம் இந்த மாடலின் பல விபரங்கள் தெரிய வந்துள்ளது.

ஆன்லைனில் வெளிவந்துவிட்டது ஓப்போ R11 மாடலின் புகைப்படங்கள்: முழு விபரங

இந்த ஓப்போ R11 மாடலின் கசிந்துள்ள புகைப்படங்கள் மட்டுமின்றி ஓப்போ நிறுவனமே இந்த மாட்ல குறித்து ஒருசில போஸ்டர்களையும் வீடியோ விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளது. இந்த தகவல்களில் இருந்து கிட்டத்தட்ட இந்த மாடலின் அனைத்து அம்சங்களும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவை குறித்து தற்போது பார்ப்போம்

குளோஸ் அப் வியூவில் இருந்து தெரிந்து கொண்டது என்ன?

குளோஸ் அப் வியூவில் இருந்து தெரிந்து கொண்டது என்ன?

இணையதளங்களில் கசிந்துள்ள இந்த ஓப்போ R11 மாடல் புகைப்படங்களில் ஒன்று குளோஸ் வியூவில் உள்ளது. இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவெனில் இந்த மாடல் ஏற்கனவே வெளிவந்த ஓப்போ R9 சீரீஸ் வகை மாதிரியே உள்ளது.

ஆனால் இந்த மாடலில் இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் இதில் டூயல் கேமிரா உள்ளது, முந்தைய மாடலில் சிங்கிள் கேமிரா மட்டுமே இருந்தது.

இந்த போனில் உள்ள கேமிரா மிகவும் சக்தி வாய்ந்தது என்பது இந்த போனில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த போட்டோக்கள் எந்தவித களங்கமும் இன்றி மிக மிக தெளிவாக இருப்பதால் கேமிராவுக்கென்றே உருவாக்கப்பட்ட போன் போல் இந்த மாடல் தெரிகிறது.

பக்கா டெக்னாலஜியில் அமைந்த போன்

பக்கா டெக்னாலஜியில் அமைந்த போன்

ஓப்போ R11 மாடல் ஸ்மார்ட்போனின் டெக்னாலஜி பக்காவாக அமைந்துள்ளது. குறிப்பாக இதில் குவால்கோமின் லேட்டஸ்ட் டெக்னால்ஜியான ஸ்னாப்டிராகன் 660 பிராஸசர் உள்ளது.

மேலும் 16MP மற்றும் 20MP என டூயல் கேமிரா இருப்பதால் வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் என்பது உறுதி. மேலும் இந்த கேமிராக்களில் ஸ்பெக்ட்ரா 160ISP வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கேமிராவில் ஜூம் அம்சமும் சிறப்பாக உள்ளது என்பது இந்த கேமிராவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சொல்லாமல் சொல்கின்றன. மொத்தத்தில் ஓப்போ R11 மாடல் ஸ்மார்ட்போனில் பவர்புல் கேமிரா உள்ளது என்பது உறுதியாகிறது.

நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகளும், அதற்காக கொடுக்கும் விலையும்.!நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகளும், அதற்காக கொடுக்கும் விலையும்.!

மற்ற சிறப்பு அம்சங்கள்:

மற்ற சிறப்பு அம்சங்கள்:

இந்த போனில் 5.5 இன்ச் 1080P AMOLED டிஸ்ப்ளே, 4Gண் ரேம், 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் தன்மை கொண்டது. ஆண்ட்ராய்டு 7.1 நெளகட் ஓஎஸ் வகையை கொண்ட இந்த போனில் 2900 mAh பேட்டரியும் இருப்பதால் சார்ஜூக்கு பஞ்சமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source

Best Mobiles in India

Read more about:
English summary
A close shot of the same device has appeared online along with three new camera samples. This as expected, speaks a lot about the specs and features of the smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X