குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்ய ஒப்போ திட்டம்.!

|

ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பல சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும் . குறிப்பாக இந்நிறுவனம் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் தனித்துவமான சிப்செட், பெரிய டிஸ்பளே போன்ற அனைத்து அம்சங்களுடனும்
ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது.

ஒப்போ நிறுவனம்

இந்நிலையில் ஒப்போ நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை
வரும் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் இன் 'இந்த' புதிய அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஸ்டிக்கர் முதல் பாதுகாப்பு வரை- டாப் டக்கர்..!வாட்ஸ்அப் இன் 'இந்த' புதிய அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஸ்டிக்கர் முதல் பாதுகாப்பு வரை- டாப் டக்கர்..!

கம் செய்ய உள்ள ழுPPழு நுஏ எலெக்

அதேபோல் ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள OPPO EV எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலைப் பற்றி பிரபல Tipster கூறுகையில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 60 ஆயிரம் விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். ஆனால் பெரும்பாலானஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

வாட்ஸ்அப் இன் 'இந்த' புதிய அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஸ்டிக்கர் முதல் பாதுகாப்பு வரை- டாப் டக்கர்..!வாட்ஸ்அப் இன் 'இந்த' புதிய அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஸ்டிக்கர் முதல் பாதுகாப்பு வரை- டாப் டக்கர்..!

ஒப்போ நிறுவனம் டாடா நானோ போ

மேலும் ஒப்போ நிறுவனம் டாடா நானோ போன்ற சிறிய காரை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. எனவே இதன் மூலம் கார் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கம்மி விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஒப்போ நிறுவனம்.

அடுத்த கலக்கல் சாதனம்- மூன்று வேரியண்ட், 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி நோட் 11டி 5ஜி: நவம்பர் 30 உறுதி!அடுத்த கலக்கல் சாதனம்- மூன்று வேரியண்ட், 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி நோட் 11டி 5ஜி: நவம்பர் 30 உறுதி!

ஒப்போ நிறுவனம் பேட்டரிகள் மற்று

இதுதவிர ஒப்போ நிறுவனம் பேட்டரிகள் மற்றும் பிற உதிரிபாகங்களுக்கான உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. கண்டிப்பாக இந்நிறுவனம் கொண்டு வரும் புதிய தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும் என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் விவோ ஸ்மார்ட்போன்கள்.. இது இப்போது மட்டும் கிடைக்கும் பெஸ்ட் டீல்..ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் விவோ ஸ்மார்ட்போன்கள்.. இது இப்போது மட்டும் கிடைக்கும் பெஸ்ட் டீல்..

 ஒப்போ ஏ55எஸ் 5ஜி

ஒப்போ ஏ55எஸ் 5ஜி

இந்த ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி எல்டிபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்தசாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஒப்போ ஏ55எஸ் 5ஜி

ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 14எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான
ஸ்மார்ட்போன் மாடல்.

 ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன்

குறிப்பாக ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு கைரோஸ்கோப் சென்சார், ஆப்டிகல் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் எனப் பல்வேறு சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதேபோல் 5ஜி, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் வி5, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்ப ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ55எஸ் 5ஜி மாடல்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo plans to launch low cost electric scooters! Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X