Just In
- 4 min ago
உலகளவில் இந்தியா பெஸ்ட்- மலிவு விலை, அதிக பயன்பாடு: பிரதமர் மோடி புகழாரம்
- 1 hr ago
இந்த பட்ஜெட்ல இப்படி ஒரு 50-inch 4K TV-ஆ! வாய் பிளக்க வைக்கும் OnePlus!
- 2 hrs ago
FASTAG-இல் ஸ்மார்ட் வாட்ச் மூலம் பணம் திருடுவதாக வெளியான வீடியோ- உண்மை என்ன?
- 3 hrs ago
என்னா மனுஷன்யா? சின்ன டுவிஸ்ட் உடன் மிக மலிவு விலை பிளான்: இன்பதிர்ச்சி கொடுத்த Netflix CEO
Don't Miss
- Finance
எலக்ட்ரிக் காரா? வேணாம்ப்பா வேணாம்.. ஒதுங்கும் மாருதி சுசூகி.. ஏன் தெரியுமா..?!
- Sports
வரலாற்றிலேயே முதல் முறை.. ஹர்திக் பாண்ட்யா பிரமாண்ட சாதனை.. அதுவும் முதல் போட்டியிலேயே!!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க குழந்தை மாதிரி மென்மையான இதயம் கொண்டவங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
Dubai DutyFree LuckyDraw: தரமான பரிசுகளை வென்ற இந்தியர்கள்! 62முதியவருக்கு ஒரு மில்லியன் டாலர் விழுந்திருக்கு!
- News
எடப்பாடி பழனிச்சாமிக்கு வந்த சோதனை.. கூடவே இருந்த கடம்பூர் ராஜுவிற்கு கொரோனா! தனபாலும் பாதிப்பு
- Movies
கமலுக்கு 400 கோடி வசூல் கொடுத்த விக்ரம்...விக்ரமிற்காக கமல் என்ன செய்தார் ?
- Travel
நீங்கள் இந்தியராக இருந்தாலும் கூட இந்த இடங்களுக்கு செல்ல அனுமதி பெற்றிருக்க வேண்டும்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
மே 23: அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஒப்போ பேட் ஏர்.!
ஒப்போ நிறுவனம் மே 23-ம் தேதி ஒப்போ பேட் ஏர் எனும் புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன்பின்பு மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 23 அன்று சீனாவில் ரெனோ 8 சீரிஸ் அறிமுகம் செய்யப்படுவதை Oppo ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல் ஆன்லைனில் கசிந்த இந்த டேப்லெட் மாடலின் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ பேட் ஏர்
ஒப்போ பேட் ஏர் சாதனம் ஆனது 10.36-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2000×1200 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான டேப்லெட் வெளிவரும். குறிப்பாக இந்த புதிய சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
ஒப்போ பேட் ஏர் சாதனத்தில் தரமான ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 610 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ஒப்போ பேட் ஏர் ஆனது டால்பி அட்மாஸ் ஆடியோவுடன் இணைந்து குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்புடன் வெளிவரும். பின்பு இந்த சாதனத்தில் 7100 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரியுடன் இந்த சாதனம் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
ஒப்போ பேட் ஏர் மாடல் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்போ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தஒப்போ ரெனோ 7 லைட் 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒப்போ ரெனோ 7 லைட் 5G

ஒப்போ ரெனோ 7 லைட்5G ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080×2400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்போ ரெனோ 7 லைட்5G ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 619 ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ColorOS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஒப்போ ரெனோ 7 லைட்5G ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக்கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
ஒப்போ ரெனோ 7 லைட் 5G ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ 7 லைட்5G மாடல் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். காஸ்மிக் பிளாக் மற்றும் ரெயின்போ ஸ்பெக்ட்ரம் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 7 லைட் 5G மாடல்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999