ரொம்ப மெல்லிய பட்ஜெட் விலை டேப்லெட்: பார்க்க அப்படி இருக்கு- உயர் அம்சங்களோடு ஒப்போ பேட் ஏர் அறிமுகம்!

|

ஒப்போ பேட் ஏர் ஆனது ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் என்கோ ஆர் டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒப்போ பேட் ஏர் விலை ஆனது இந்திய மதிப்புப்படி ரூ.15,100 ஆகவும் என்கோ ஆர் இயர்பட்ஸ்கள் விலை இந்திய மதிப்புப்பிட தோராயமாக ரூ.3500 ஆகவும் இருக்கிறது.

புதிய ஒப்போ டேப்லெட்

புதிய ஒப்போ டேப்லெட்

Oppo Pad Air ஸ்மார்ட்போனானது நிறுவனத்தின் சமீபத்திய டேப்லெட் ஆக இருக்கிறது. அசல் ஒப்போ பேட்-க்கு பிறகு தொடரின் இரண்டாவது புதிய சாதனமாக இருக்கிறது. புதிய ஒப்போ டேப்லெட் ஆனது 10.36 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 6.94மிமீ மெல்லிய வடிவமைப்பு ஆதரவோடு வருகிறது. ஒப்போ பேட் ஏர் மட்டுமின்றி சீன நிறுவனம் ஒப்போ என்கோ ஆர் சாதனத்தை ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரிஸோ இயர்பட்ஸ்கள் இயக்கிகளுடன் வருகிறது. இயர்பட்ஸ்கள் மொத்த பேட்டரி ஆயுள் 20 மணிநேரம் வரை வழங்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஒப்போ பேட் ஏர் மற்றும் என்கோ ஆர் ஆகிய இரண்டும் ஒப்போ ரெனோ 8 தொடருடன் வந்திருக்கிறது.

ஒப்போ பேட் ஏர் மற்றும் என்கோ ஆர்

ஒப்போ பேட் ஏர் மற்றும் என்கோ ஆர்

ஒப்போ பேட் ஏர் மற்றும் என்கோ ஆர் விலை விவரங்கள் குறித்து பார்க்கையல், இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.15,100 ஆக இருக்கிறது. அதேபோல் இந்த டேப்லெட்டின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.17,500 ஆக இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. இதன் விலை ரூ.19,800 ஆக இருக்கிறது. ஸ்டைலஸ் பேனா மற்றும் கீபோர்ட் உடன் டேப்லெட்டை அணுகலாம். ஒப்போ என்கோ ஆர் விலையானது இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.3500 என இருக்கிறது.

ஜூன் 1 முதல் விற்பனைக்கு கிடைக்கும்

ஜூன் 1 முதல் விற்பனைக்கு கிடைக்கும்

ஒப்போ பேட் ஏர் மற்றும் என்கோ ஆர் ஆகிய இரண்டும் தற்போது சீனாவில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த சாதனம் கிடைக்கும் தன்மை ஜூன் 1 முதல் தொடங்குகிறது. சீனாவை தவிர பிற சந்தைகளில் ஒப்போ பேட் ஏர் மற்றும் என்கோ ஆர் ஆகியவை கிடைக்கும் தன்மை குறித்த விவரங்கள் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ பேட் ஏர் விவரக்குறிப்புகள்

ஒப்போ பேட் ஏர் விவரக்குறிப்புகள்

ஒப்போ பேட் ஏர் சாதனமானது ஆண்ட்ராய்டு 12 உடனான கலர் ஓஎஸ் உடன் இயக்குகிறது. அதேபோல் 2,000x1,200 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 10.36-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. டிஸ்ப்ளே 225 பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 360 நிட்ஸ் பிரகாசத்தைக் கொண்டிருக்கிறது. பேட் ஏர் ஆனது ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி, அட்ரினோ 610 ஜிபியூ மற்றும் 6ஜிபி ரேம் ஆதரவோடு வருகிறது. புகைப்படங்கள் ஆதரவுகளுக்கு என இந்த ஒப்போ பேட் ஏர் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 8 எம்பி கேமரா உடன் வருகிறது. இந்த சாதனத்தின் முன்புறத்தில் 5 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

மைக்ரோ எஸ்டி கார்ட் ஆதரவு

மைக்ரோ எஸ்டி கார்ட் ஆதரவு

ஒப்போ பேட் ஏர் ஆனது 128 ஜிபி வரையிலான உள்சேமிப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் மைக்ரோ எஸ்டி கார்ட் ஆதரவோடு கூடிய 512 ஜிபி வரையிலான மெமரி விரிவாக்க வசதியைக் கொண்டிருக்கிறது. அதேபோல் ஒப்போ பேட் ஏர் சாதனத்தின் இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இது வைஃபை 5, ப்ளூடூத் வி5.1 மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளிட்டவை அடங்கும். ஒப்போ பேட் ஏர் ஆனது 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இதில் 7100 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இது சரவுண்ட் சவுண்ட் அனுபவத்திற்கு என டால்பி அட்மாஸ் குவாட் ஸ்பீக்கர்கள் இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
OPPO Pad Air Launched at Budget Price with Slim and Thin Design

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X