Laptop கதை முடிஞ்சது.. 2-ஆ மடியும் Foldable Tablet.. மடிக்கிற இடத்துல USB-C போர்ட்.. செஞ்சிவிட்ட சீன கம்பெனி!
ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் புழக்கத்திற்கு வந்த சில ஆண்டுகளிலேயே, வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டன. இதன் நீட்சியாக, சீன நிறுவனம் ஒன்று ஃபோல்டிங் டெக்னாலஜியை டேப்லெட் பிரிவுக்கு கொண்டு செல்லும் வேலையில் ஈடுபட்டு உள்ளது. அது ஒப்போ நிறுவனமாகும்.
டபுள்யூஐபிஓ (WIPO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பில் (World Intellectual Property Organisation) ஒப்போ நிறுவனம் அதன் ஃபோல்டபிள் டேப்லெட்டிற்கான (Foldable Tablet) காப்புரிமை விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒப்போவின் இந்த மடிக்கக்கூடிய டேப்லெட்டை பற்றி தகவல் வெளியாவது இதுவே முதல் முறையாகும். ஆனால் கடந்த காலங்களில் வெளியான சில அறிக்கைகள் - ஆப்பிள் நிறுவனம் தான் ஒரு மடிக்கக்கூடிய ஐபேட் மாடலை உருவாக்குவதாக கூறின. ஆனால் ஆப்பிள் நிறுவனம் அதன் ஃபோல்டபிள் ஐபோனையே இன்னும் தயார் செய்யவில்லை. ஆக ஃபோல்டபிள் டேப்லெட் விஷயத்தில் ஒப்போ முந்திக்கொள்ளும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஒப்போ ஃபோல்டபிள் டேப்லெட் காப்புரிமை பற்றிய விவரங்கள்: இந்த காப்புரிமை ஜூன் 2022 இல் ஒப்போ நிறுவனத்தால் செய்யப்பட்டது. இதை டபுள்யூஐபிஓ ஆனது 2025 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி அன்று பதிவு செய்துள்ளது. விண்ணப்பத்தில் காப்புரிமைதாரரின் பெயர் மற்றும் முகவரி - ஒப்போ, சீனா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒப்போவின் இந்த காப்புரிமையை தாக்கலில் - ஒப்போ உருவாக்கும் ஃபோல்டபிள் டேப்லெட்டின் அனைத்து கோணங்களையும் வெளிப்படுத்தும் ஏராளமான வடிவமைப்பு திட்டங்கள் உள்ளன. மேலோட்டமாக பார்க்க ஒப்போவின் ஃபோல்டபிள் டேப்லெட் ஆனது - ஒரு பெரிய ஸ்க்ரீனை கொண்ட சாதாரணமான டேப்லெட்டை போலவே தெரிகிறது. ஆனால் அதை புக்-ஸ்டைலில் மடிக்க முடியும்.
மேலும் ஒப்போவின் ஃபோல்டபிள் டேப்லெட் ஆனது மிகவும் ஸ்லிம் ஆன டிசைனை காட்சிப்படுத்துகிறது மற்றும் பின்புறத்தில் சிங்கிள் சர்குலர் கேமரா சென்சாருடன் காணப்படுகிறது. இந்த டேப்லெட்டின் இடதுபக்க ஃபிரேம் வெறுமையாகவே உள்ளது, அதே நேரத்தில் வலதுபக்க விளிம்பில் ஒரு பவர் பட்டன் மற்றும் நடுவில் ஒரு யூஎஸ்பி-C போர்ட் (டேப்லெட்டை மடிக்கும் இடத்தில்) மற்றும் வால்யூம் ராக்கர் பட்டன்ன்கள் ஆகியவைகள் உள்ளன.
ஒப்போவின் ஃபோல்டபிள் டேப்லெட் ஆனது நடுவில் ஒரு கீலை கொண்டுள்ளது, அங்கு தான் அது இரண்டு பகுதிகளாக மடிகிறது. இது சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 6 (Samsung Galaxy Z Fold 6), கூகுள் பிக்சல் 9 ப்ரோ போல்ட் (Google Pixel 9 Pro Fold), ஒப்போ பைண்ட் என்5 (OPPO Find N5) போன்ற புக் ஸ்டைல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களில் பார்த்ததை போலவே உள்ளது.
இருப்பினும், ஒப்போவின் இந்த தயாரிப்பு ஒரு டேப்லெட்டாக இருப்பதால், இது ஆசஸ் ஜென்புக் 17 போல்ட் (ASUS Zenbook 17 Fold) மற்றும் லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 போல்ட் (Lenovo ThinkPad X1 Fold) போன்ற ஃபோல்டபிள் லேப்டாப்களை போலவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.
ஃபோல்டபிள் டிவைஸ்களை பற்றிய மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, மோட்டோரோலா நிறுவனமானது மரப்பட்டை பாணியிலான வுட்டன் பேக் பேனலை கொண்ட புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா (Motorola Razr 60 Ultra) ஸ்மார்ட்போனாகும். இது ரேஸர் பிளஸ் 2025 (Razr Plus 2025) என்றும் அழைக்கப்படுகிறது.
நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான @evleaks வெளியிட்டுள்ள சமீபத்திய ரெண்டர் வீடியோவிபடி - மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா ஆனது மரத்தால் என பேக் பேனலை பெறும். வெளியான ரெண்டர் வீடியோ ஆனது ஒரு தனித்துவமான வுட் டெக்ஷர் -ஐ காட்டுகிறது. இருந்தாலும் கூட குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் பேக் பேனல் ஆனது உண்மையான மரத்தால் ஆனதா அல்லது மரம் போன்ற உயர்தர சாயலா என்பது தெளிவாக தெரியவில்லை.
வீடியோவில் காணப்படும் பளபளப்பான பினிஷ் - அது உண்மையான மரமாக இருக்காது என்பதை குறிக்கிறது. இருந்தாலும் இப்போதைக்கு எதையும் உறுதியாக கூற முடியாது. அறியாதோர்களுக்கு மோட்டோரோலா நிறுவனம் வுட்டன் பினிஷ்களை கொண்டுவருது புதியதல்ல. மோட்டோ மேக்கர் திட்டத்தின் மூலம் இந்நிறுவனம் அதன் மோட்டோ எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கான கஸ்டமைஸ் வுட்டன் பேனல்களை வழங்கியது. இது நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


Click it and Unblock the Notifications








