வந்தது ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி: 8ஜிபி ரேம், 64 எம்பி பிரதான கேமரா, ஆண்ட்ராய்டு 12 ஆதரவு!

|

ஒப்போ நிறுவனம் ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் 20:9 அமோலெட் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி ஆதரவோடு வெளிவந்திருக்கிறது. ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி, டிரிபிள் ரியர் கேமராக்கள், 20:9 அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டிருக்கிறது.

ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி

ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி

ஒப்போ நிறுவனம் புது ஸ்மார்ட்போனை ஸ்பெயினில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரெனோ 8 தொடரில் இடம்பெற்றிருக்கிறது. இது ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி ஸ்மார்ட்போனாகும். இந்த சாதனம் இந்தியாவில் இந்தாண்டு ஆரம்பத்தில் அறிமுகம் செய்த ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 20:9 அமோலெட் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி சிப்செட் உள்ளிட்ட ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது EUR 429 (தோராயமாக ரூ.35,700) என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது பிளாக் மற்றும் ரெயின்போ வண்ண விருப்பத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வெளிவந்துள்ளது.

ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி சிறப்பம்சங்கள்

ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி சிறப்பம்சங்கள்

ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.43 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 1080×2400 பிக்சல் தீர்மானத்தைக் கொண்டுள்ளது. 20:9 விகித அமோலெட் டிஸ்ப்ளே ஆனது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் பஞ்ச் ஹோல் வடிவமைப்புடன் இருக்கிறது. இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு என்ற ஒரே வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சாதனம் 5ஜிபி வரை ரேம் நீட்டுப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி கேமரா அம்சங்கள்

ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி கேமரா அம்சங்கள்

ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 64 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி மோனோக்ரோம் ஷூட்டர் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு என சாதனத்தில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 கலர் ஓஎஸ் 12 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 5ஜி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் வி5.2, யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் ஐபிஎக்ஸ்4 சான்றிதழை பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்களானது நைட்மோட், போர்ட்ரெய்ட் என பல்வேறு அணுகலை வழங்குகிறது.

ஒப்போ கே10 5ஜி விரைவில்

ஒப்போ கே10 5ஜி விரைவில்

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போனை ஜூன் 8 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்செட் 810 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகத்துக்கு என பிளிப்கார்ட் தளத்தில் பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சாதனமானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடனான 6.56 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் இந்த சாதனம் குறித்து வெளியான தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் தி பாக்ஸ், 48 எம்பி பிரதான கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

Best Mobiles in India

English summary
Oppo Launched its Oppo Reno 8 Lite Smartphone With Triple Rear Cameras, Snapdragon 695 Soc

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X