OPPO ஒரே போடு.. பட்ஜெட்ல 8000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஓப்போ நிறுவனத்தில் பெரிய பேட்டரி கொண்ட மாடல்களை கே சீரிஸ் மாடல்களில் எதிர்பார்க்கலாம். இப்போது, பட்ஜெட் விலையில் 8000mAh பேட்டரி கொண்ட மாடலாக ஓப்போ கே15எஸ் (OPPO K15s) அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 45W சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற வழக்கமான பீச்சர்களுடன் கிடைக்கிறது. ஆனால், டிசைனில் மாற்றம் இருக்கிறது.
இப்போது, சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் கே சீரிஸ் மாடல்கள் வெளியாகி வருவதால், ஓரிரு வாரங்களில் இங்கும் களமிறங்கும் என்பதால், எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஏனென்றால், அரிசோன்டல் கேமரா டிசைனில் புதிய லுக் கொடுக்கிறது. மற்றபடி பீச்சர்கள் மற்றும் பர்ஃபாமென்ஸில் பெரிய மாற்றங்களை பார்க்க முடியவில்லை.

ஓப்போ கே15எஸ் அம்சங்கள் (OPPO K15s Specifications): 6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 1000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 397 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 6360 மேக்ஸ் (MediaTek Dimensity 6360 MAX) சிப்செட்டை இந்த ஒப்போ கே15எஸ் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (ARM Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி செல்பீ கொண்ட கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக இந்த ஓப்போ கே15எஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு ஆட்டோ போகஸ் மற்றும் 10எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது.
1080p வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த ஓப்போ கே15எஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.80 எம்எம் தடிமன் மற்றும் 205 கிராம் எடை கொடுத்துள்ளது. ஆகவே, இது ஓரளவுக்கு கூட ஸ்லிம் மாடலாக இருக்காது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஆம்பியன் லைட் சென்சார் (Ambient Light Sensor) கிடைக்கிறது. ஓப்போ கே15எஸ் விலை (OPPO K15s Price): 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.24,301 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.28,592 ஆகவும் இருக்கிறது.
இந்த விலைகள் சீன நாட்டின் யுவான் அடிப்படையில், இந்திய ரூபாய்க்கு மாற்றப்பட்டவையாகும். ஆகவே, மாற கூடியதாகும். விண்ட் டிரெயில் பர்பிள் (Wind Trail Purple) மற்றும் ஷேடோ கிரே (Shadow Grey) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. பெரிய பேட்டரியை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு ஏற்ற மாடலாக இந்த ஓப்போ கே15எஸ் இருக்கும்.


Click it and Unblock the Notifications
