ஜூன் 8 அறிமுகமாகும் ஒப்போ கே10 5ஜி: பிளிப்கார்ட் மூலம் விற்பனையா?

|

ஜூன் 8 அன்று ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சாதனத்தின் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவலை பார்க்கலாம்.

கே சீரிஸ் ஸ்மார்ட்போன்

கே சீரிஸ் ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனத்தின் கே சீரிஸ் ஸ்மார்ட்போன் குறித்த தகவல் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. வரவிருக்கும் சாதனம் ஒப்போ கே10 5ஜி என அழைக்கப்படும் என சில அறிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. சாதனத்தின் ரெண்டர்கள் ஆன்லைனில் கசிந்திருக்கின்றன. இந்த சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. ஒப்போ கே10 5ஜி வெளியீட்டு தேதி பிளிப்கார்ட் பட்டியல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒப்போ நிறுவனம் முன்னதாகவே கே10 ஸ்மார்ட்போனின் 4ஜி மாறுபாட்டை விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்த சாதனத்தின் 5ஜி மாறுபாடு குறித்த தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

ஒப்போ கே10 5ஜி இந்திய வெளியீட்டு தேதி

ஒப்போ கே10 5ஜி இந்திய வெளியீட்டு தேதி

ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் வரவிருக்கும் ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போனுக்கான பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் தளம் மிக மெலிதான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் பிளிப்கார்ட் மூலமாக வாங்கலாம். தகவல்கள் வெளியானாலும் விற்பனை தேதி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. வெளியீட்டு நிகழ்வு ஜூன் 8 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஒப்போ கே10 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ஒப்போ கே10 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலை ஒப்போ இதுவரை பகிரவில்லை. இருப்பினும் இந்த சாதனத்தில் மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி இருக்கும் என கசிவுத் தகவல் தெரிவிக்கிறது. இந்த சாதனத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இதன் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் இடம்பெறும் எனவும் இதில் இரட்டை ஸ்பீக்கர்கள் அம்சம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவோடு 6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இமேஜிங் ஆதரவுக்கு என இரட்டை பின்புற கேமரா அமைப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா என்ற இரட்டை கேமரா இருக்கும் எனவும் சாதனத்தின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

மேலும் இந்த சாதனத்தில் கலர் ஓஎஸ் 12.1 உட்பட ஸ்கின் அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்கும் எனவும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் இந்த சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. வரவிருக்கும் ஸ்மார்ட்போனானது ஏழு 5ஜி பேண்ட்களை ஆதரிக்கும் எனவும் 190 கிராம் எடையுடன் வரும் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ கே10 5ஜி சாதனம் குறித்த இந்திய எதிர்பார்ப்பு விலை குறித்து பார்க்கையில், இந்த சாதனத்தின் விலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இது 4ஜி மாடலை விட கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ கே10 4ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.14,990 ஆக இருக்கிறது. 5ஜி இயக்கப்பட்ட மீடியாடெக் சிப் ஆதரவு மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆகியவையை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

File Images

Best Mobiles in India

English summary
Oppo K10 5G Smartphone Set to Launch on June 8, Sale Via Flipkart: Source Said

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X