ஜூலை 18 வரை புது போன், இயர்பட்ஸ், டேப்லெட்-னு எதுவுமே வாங்காதீங்க! ஏனெனில்?

|

வருகிற ஜூலை 18 ஆம் தேதியை பல தரமான அறிமுகங்களை சந்திக்கும் ஒரு நாள் என்றே கூறலாம். அதுவும் 'சிங்கிள்' லான்ச் ஈவென்ட்டில்!

அதனால் தான் ஜூலை 18 வரை புதிதாக எதை வாங்க வேண்டும் என்றாலும் சரி.. அதாவது ஒரு ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது TWS இயர்பட்ஸ் என எதை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தாலும் சரி, அதை கொஞ்சம் ஒத்திவையுங்கள் என்று கூறுகிறோம்!

ஜூலை 18 அப்படி என்ன நடக்க போகிறது?

ஜூலை 18 அப்படி என்ன நடக்க போகிறது?

ஒப்போ இந்தியா நிறுவனத்தின் மிகப்பெரிய அறிமுக விழா நடக்க உள்ளது. அந்நிகழ்வில் ஒப்போ நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் பல தயாரிப்புகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

குறிப்பிட்ட நாளில், ஒப்போ ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், ஒப்போ நிறுவனத்தின் முதல் டேப்லெட் ஆன ஒப்போ பேட் ஏர் மற்றும் ஒப்போ என்கோ எக்ஸ்2 இயர்பட்ஸ் என ஒரு "பட்டாளமே" அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இவைகள் எல்லாம் என்ன விலைக்கு அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

Samsung, OnePlus, Xiaomi உட்பட 12 போன்கள் மீது தாறுமாறான விலைக்குறைப்பு; இதோ லிஸ்ட்!Samsung, OnePlus, Xiaomi உட்பட 12 போன்கள் மீது தாறுமாறான விலைக்குறைப்பு; இதோ லிஸ்ட்!

முதலில்.. ஒப்போவின் முதல் டேப்லெட்!

முதலில்.. ஒப்போவின் முதல் டேப்லெட்!

வரவிருக்கும் ஒப்போ பேட் ஏர் ஆனது, சீனாவில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால், அதன் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்து பெரிய குழப்பங்கள் எதுவும் இல்லை.

Oppo Pad Air ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட 'கலர்ஓஎஸ் ஃபார் பேட்' மூலம் இயங்குகிறது.

இது 2,000x1,200 பிக்சல்ஸ் ரெசல்யூஷனை வழங்கும் 10.36-இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 SoC உடனாக 6ஜிபி வரையிலான LPDDR4x ரேம் மூலம் இயக்கப்படுகிறது.

512ஜிபி வரை ஸ்டோரேஜ்... 7,100mAh பேட்டரி!

512ஜிபி வரை ஸ்டோரேஜ்... 7,100mAh பேட்டரி!

கேமராக்களை பொறுத்தவரை, ஒப்போ பேட் ஏர் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் சிங்கிள் ரியர் கேமராவும், முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் உள்ளது.

128ஜிபி ஸ்டோரேஜை வழங்கும் இந்த ஒப்போ டேப்லெட் ஆனது மைக்ரோ எஸ்டி கார்டு (512ஜிபி வரை) வழியாக ஸ்டோரேஜ் எக்ஸ்டென்ஷனையும் ஆதரிக்கும்.

இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் 7,100mAh பேட்டரியை பேக் செய்கிறது மற்றும் இந்த டேப்லெட் மேம்பட்ட சரவுண்ட் சவுண்ட் எக்ஸ்ப்ரீயன்ஸை வழங்குவதற்காக டால்பி அட்மோஸ் ஆதரவுடனான குவாட் ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது.

இதுவரை வந்த எந்த OnePlus போனிலும் இதுவரை வந்த எந்த OnePlus போனிலும் "இது" இல்லை; இன்னும் 2 வாரம் தான்!

Oppo Pad Air என்ன விலைக்கு வரும்?

Oppo Pad Air என்ன விலைக்கு வரும்?

விலையை பொறுத்தவரை, சீனாவில் Oppo Pad Air டேப்லெட்டின் 4GB + 64GB ஆப்ஷன் ஆனது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.15,100 க்கும், 6GB + 128GB ஆப்ஷன் ஆனது தோராயமாக ரூ.19,800 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்ற விலையை இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.

சில்வர் மற்றும் கிரே வண்ண விருப்பங்களில் வரும் இந்த டேப்லெட்டின் இந்திய அறிமுகத்திற்கு பின், Flipkart வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

 Oppo Enco X2: என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்?

Oppo Enco X2: என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்?

டென்மார்க்கை தளமாக கொண்ட ஆடியோ நிறுவனமான டைனாடியோவுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த லேட்டஸ்ட் ஒப்போ இயர்பட்ஸ் ஆனது IP54 டஸ்ட் மற்றும் வாட்டர்-ரெசிஸ்டென்ட் மதிப்பீட்டை பெற்றுள்ளது.

ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation - ANC) ஆதரவுடன் வரும் இந்த இயர்பட்ஸ் சிங்கிள் சார்ஜில் 5 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்-ஐ வழங்கும் என்று Oppo கூறுகிறது.

அதேசமயம் சார்ஜிங் கேஸ் உட்பட, இந்த இயர்பட்ஸ் மொத்தம் 20 மணிநேரம் வரையிலான பேட்டரியை வழங்குமாம், ஒருவேளை நீங்கள் ANC அம்சத்தை ஆஃப் செய்துவிட்டால் 27 மணிநேரம் என்கிற பிளேபேக் டைமை வழங்குமாம்.

பட்ஜெட் விலையில் 2K டிஸ்பிளே, 8340mAh பேட்டரி; Samsung-ஐ மிரட்டும் புதிய Realme Pad!பட்ஜெட் விலையில் 2K டிஸ்பிளே, 8340mAh பேட்டரி; Samsung-ஐ மிரட்டும் புதிய Realme Pad!

ஒப்போ என்கோ எக்ஸ்2 என்ன விலைக்கு வரும்?

ஒப்போ என்கோ எக்ஸ்2 என்ன விலைக்கு வரும்?

சீனவில் Oppo Enco X2 TWS இயர்பட்ஸ் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.11,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம் ஒப்போ என்கோ எக்ஸ் ஆனது ரூ.9,990 க்கு வாங்க கிடைக்கிறது. எனவே என்கோ எக்ஸ்2-வின் விலை சற்றே அதிகாமாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

OPPO Reno 8 சீரிஸின் கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள்?

OPPO Reno 8 சீரிஸின் கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள்?

இந்தியாவில் வருகிற ஜூலை 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ள ஒப்போ ரெனோ 8 சீரிஸின் கீழ் இரண்டு மாடல்கள் அறிமுகமாகும். அது OPPO Reno 8 மற்றும் OPPO Reno 8 Pro ஆகும்.

ப்ரோ மாடலில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் ப்ராசஸர், 80W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,500mAh பேட்டரி போன்ற அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

Vivo T1x இந்திய அறிமுகம் உறுதி; பல பட்ஜெட் போன்களை வச்சி செய்ய போகுது!Vivo T1x இந்திய அறிமுகம் உறுதி; பல பட்ஜெட் போன்களை வச்சி செய்ய போகுது!

இந்தியாவில் OPPO Reno 8 Pro ஸ்மார்ட்போனின் விலை எப்படி இருக்கும்?

இந்தியாவில் OPPO Reno 8 Pro ஸ்மார்ட்போனின் விலை எப்படி இருக்கும்?

ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.52,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதாவது இந்தியாவில் ஒரு ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.50,000 என்கிற விலை புள்ளியை கடப்பது இதுவே முதல் முறை ஆகும்

12ஜிபி ரேம் வேரியண்ட்-ஐ தவிர, ரெனோ 8 ப்ரோவின் 8ஜிபி+128ஜிபி மற்றும் 8ஜிபி+256ஜிபி ஸ்டோரேஜ் விருப்பங்களும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விரிவான விவரங்களை, ஜூலை 18 ஆம் தேதி அன்றே அறிந்துகொள்ள முடியும்.

Photo Courtesy: Oppo India Twitter Page

Best Mobiles in India

English summary
Oppo July 18 Launch Event in India What to Expect on Oppo Pad Air Enco X2 Earbuds Reno 8 Series

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X