#OPPOINNODAY20: தனித்துவமான தொழல்நுட்ப சாதனங்களை கொண்டுவரும் ஒப்போ நிறுவனம்.!

|

ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து சாதனங்களுக்கும் உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் நெட்வொர்க் தொழில்நுட்பங்களில் நம்பமுடியாத கண்டுபிடிப்புகள், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் உற்சாகமான மாற்றங்களைக் கண்டது. முன்னணியில் இருந்து தொழில்துறையின் விரிவாக்கத்திற்கு வழிவகுத்த ஒரு பிராண்ட் OPPO ஆகும். வருடாந்திர #OPPOINNODAY20 நிகழ்வில் இதுவரை யாரும் பார்த்திராத தயாரிப்புகள் மற்றும் தனித்துவமான தொழில்நுட்பங்களை கொண்டுவந்துள்ளது ஒப்போ நிறுவனம். மேலும் புதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல் மற்றும் அதன் அனைத்து வேலைகள் எப்படி இருக்கும் என்று தெளிவாக தகவல் கொடுத்துள்ளது ஒப்போ நிறுவனம்.

தனித்துவமான தொழல்நுட்ப சாதனங்களை கொண்டுவரும் ஒப்போ நிறுவனம்.!

ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த நிகழ்வு, எதிர்காலத்திற்கான OPPO இன் தைரியமான பார்வையை வெளிப்படுத்தியது. அதாவது தனித்துவமான ஸ்மார்ட்போன்கள் மற்றும் சில 3டி போன்ற தொழில்நுட்பங்களில் சிறப்பாக செயல்படும் சாதனங்கள் போன்றவற்றை சோதனை செய்யும் வீடியோக்களை வெளியிட்டுள்ளது இந்த ஒப்போ நிறுவனம். குறிப்பாக கேமிங் சார்ந்த புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இந்நிறுவனம் அதிக ஆர்வம் காட்டுகிறது.

ரோலபிள் கான்செப்ட் ஹேண்ட்செட்

ஒப்போ நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்புகள் ஒப்போ நிறுவனம் எப்போதுமே புதிய தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்துகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் அதன் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றமான OPPO X 2021 ரோலபிள் கான்செப்ட் ஹேண்ட்செட்டை மீண்டும் வெளிப்படுத்தியது. குறிப்பாக ரோலபிள் கான்செப்ட் பயன்படுத்த மிகவும் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும். இதன் சிறப்பு என்னவென்றால் ஸ்மார்ட்போனை சிறிய அளவிலும், சற்று பெரிய அளவிலும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதன்படி இந்த ஸ்மார்ட்போனை 6.7-இன்ச் டிஸ்பிளேவிலும் பயன்படுத்த முடியும், ஒருவேளை சமூகவலைதளங்கள், திரைப்படங்கள், வீடியோ கேம் போன்ற வசதிகளை பயன்படுத்த 7.4-இன்ச் டிஸ்பிளேவையும் பயன்படுத்த முடியும். அதாவது 6.7-இன்ச் டிஸ்பிளே சற்று அகலமாக்கப்பட்டு 7.4-இன்ச் டிஸ்பிளேவாக மாறும். இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் திரையை பெரிதாக பயன்படுத்த வழிவகை செய்துள்ளது ஒப்போ நிறுவனம். இது ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் அனுபவத்தை கொடுக்கும். கண்டிப்பாக இந்த சாதனம் பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்கும்.

இது தவிர, ஒப்போ ஆண்டு நிகழ்வில் புதிய ஏஆர்(AR) கண்ணாடி தொழில்நுட்பத்தை ஆய்வு செய்யும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது ஒப்போ நிறுவனம். தனித்துவமான OPPO AR கிளாஸ் 2021 ஆனது SLAM வழிமுறைகள், மாறுபட்ட ஆப்டிகல் waveguide தொழில்நுட்பம், சைகை மற்றும் குரல் அங்கீகாரத்திற்கான ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இது யதார்த்தத்தின் ஆரோக்கியமான கலவையை உறுதிப்படுத்துகிறது மற்றும் ரியாலிட்டி அம்சங்களை மேம்படுத்துகிறது. மிகவும் சுவாரஸ்யமானது, இல்லையா?

தனித்துவமான தொழல்நுட்ப சாதனங்களை கொண்டுவரும் ஒப்போ நிறுவனம்.!

கூடுதலாக, Birdbath ஆப்டிகல் சொல்யூஷன் ஆனது 3 மீட்டர் தொலைவில் இருந்து 90 அங்குல திரையைப் பார்ப்பதற்கு சமமான ஹோம்-தியேட்டர் அனுபவத்தை உருவாக்குகிறது. #OPPOFindX2Series சாதனங்களுடன் ஜோடியாக இருக்கும் போது AR கண்ணாடியை நீங்கள் டிவி ரிமோட்டை எவ்வாறு பயன்படுத்துவீர்கள், அதை போலவே நீங்கள் பார்ப்பதைக் கட்டுப்படுத்த பயனர்களை அனுமதிக்கிறது. AR கிளாஸ் 2021 பயனர்களின் ஸ்மார்ட்போன் அனுபவத்தை உலகை பயனர்களின் வீட்டு வாசலில் கொண்டு வருவதன் மூலம் கணிசமாக மேம்படுத்தும்.

புதிய AR கண்ணாடிகளுடன், OPPO சைபீரியல் AR பயன்பாட்டையும் வெளியிட்டது, இந்த முக்கிய தொழில்நுட்பங்களில் அதன் ஆய்வு மற்றும் வரிசைப்படுத்தலைக் குறிக்கிறது. CybeReal AR என்பது நிகழ்நேர உயர்-துல்லியமான தொழில்நுட்பமாகும், இது navigation map விட துல்லியமான நிலைப்பாட்டை செயல்படுத்துகிறது, அதாவது வாகன நிறுத்துமிடங்கள் அல்லது வணிக வளாகங்கள் போன்ற உட்புற சூழல்களில் பயனரின் இருப்பிடத்தை சுட்டிக்காட்டும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். இது அடிப்படையில் வழக்கமான navigation map உடன் ஒப்பிடும்போது மிகவும் துல்லியமான அனுபவத்தை வழங்குவதாகும், இதன் மூலம் பயனரின் வழிசெலுத்தல் அனுபவத்திற்கு தீவிரமான துல்லியத்தை வழங்குகிறது.

இவற்றில் பல இன்னும் வணிக ரீதியாக கிடைக்காத தயாரிப்புகள் என்றாலும். விரைவில் அனைத்து இடங்களில் இந்த தொழில்நுட்பத்தை ஒப்போ நிறுவனம் கொண்டுவரும். புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி அதனை பலமுறை சோதனை செய்து அதன்பிறகு மக்கள் பயன்படுத்த ஒப்போ நிறுவனம் கொண்டுவரும்.

கூகுள் கிளாஸிலிருந்து HoloLens 2 வரை

தொழில்துறையில் பல பிராண்டுகள் எதிர்காலம் இது போன்ற ஏஆர் கிளாஸ் உள்ளிட்ட அணியக்கூடிய சாதனங்களில் முயற்சி செய்வதுதான். இதில் மிகவும் துல்லியமான சாதனங்களை கொண்டுவர ஒப்போ, கூகுள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தீவிரமாக முயற்சி செய்துவருகின்றன. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கூகுள் கிளாஸிலிருந்து HoloLens 2 வரை, அணியக்கூடிய கம்ப்யூட்டிங்கின் பரிணாமம் அனைவராலும் வரவேற்கப்பட்டது. குறிப்பாக இதுபோன்ற சாதனங்கள் பாதுகாப்பு தன்மை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை தாண்டி தான் வெளிவந்தது.

தனித்துவமான தொழல்நுட்ப சாதனங்களை கொண்டுவரும் ஒப்போ நிறுவனம்.!

ஒப்போ நிறுவனம் பயனர்களுக்கு புதிய தொழில்நுட்ப அனுபவத்தை வழங்க அதிகளவு முயற்சி செய்துவருகிறது. அடுத்து ஆண்டு இதை விட பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஒப்போ நிறுவனம். அதேபோல் இந்நிறுவனம் கடந்த ஆண்டு INNO தின நிகழ்வில், அட்டகாசமான ஃபிளாஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை கொண்டுவந்தது. இது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதுடன் வேகமாக சார்ஜ் செய்யும் அம்சத்துடனும் வெளிவந்தது. குறிப்பாக OPPO Find X2 Pro ஸ்மார்ட்போன் உடன் 65W SuperVOOC 2.0 வசதியும் இடம்பெற்றது. இது பல்வேறு சாதனங்களை விரைவில் சார்ஜ் செய்ய உதவியது என்றுதான் கூறவேண்டும். மற்ற நிறுவனங்களை விட பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது ஒப்போ நிறுவனம். அதேபோன்று பல ஒப்போ ஸ்மார்ட்போன்களில் தனித்துவமான வடிவமைப்பு, சிறந்த மென்பொருள், பாப்-அப் கேமரா உள்ளிட்ட பல அம்சங்களை நாம் பார்த்தது உண்டு. விரைவில் இந்நிறுவனம் ஸ்மார்ட்போன்களில் இன்னும் தனித்துவமான வடிவமைப்பை கொண்டுவர உள்ளது.

OPPO INNO Day 2020 நிகழ்வு ஆனது ஒப்போ நிறுவனத்தின் வேகத்தை அதிகரிக்க மற்றொரு தொடக்க புள்ளியை உருவாக்கியுள்ளது. மேலும் வரும் ஆண்டுகளில் இதை விட புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவர முயற்சி செய்து வருகிறது.

தற்சமயம் '3 + N + X' தொழில்நுட்ப மேம்பாட்டு மூலோபாயத்தை வெளியிட்டது, ஆனால் இது சர்ந்த முழு தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்பு ஒப்போ நிறுவனம் தனது 2021 முதன்மை ஸ்மார்ட்போன்களான Find X3 மாடல்களின் மென்பொருள் அமைப்பு, நிறங்கள்,டிஸ்பிளே, சேமிப்பு வசதி, கேமரா உள்ளிட்ட தகவல்களை அண்மையில் அறிவித்தது. குறிப்பாக சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் 2021 என்ற பெயரை உருவாக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்போன்களின் அமைப்பு இருக்கும். குறிப்பாக மற்ற நிறுவனங்களின் முதன்மை ஸ்மார்ட்போன்களை விட சிறப்பான தொழில்நுட்ப வதியுடன் இந்த Find X3 மாடல்கள் வெளிவரும்.

தனித்துவமான தொழல்நுட்ப சாதனங்களை கொண்டுவரும் ஒப்போ நிறுவனம்.!

சவாலான முறையில் சாதனங்களை உருவாக்கி வருகிறது

2020 என்பது சந்தேகத்திற்கு இடமின்றி சமீபத்திய வரலாற்றில் மனிதகுலத்திற்கு மிகவும் சவாலான ஆண்டாகும். COVID-19 தொற்றுநோய் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், தயாரிப்பு, உற்பத்தி,மற்றும் சில வணிகங்களுக்கு அதிகளவு பதிப்பை ஏற்படுத்தி விட்டது என்றுதான் கூறவேண்டும். இருப்பினும் ஒப்போ நிறுவனம் மிகவும் சவாலான முறையில் சாதனங்களை உருவாக்கி வருகிறது. மற்ற நிறுவனங்களை விட சிறந்த சாதனங்களை கொண்டுவர முயற்சி செய்துவருகிறது.

ஒரு முன்னணி ஸ்மார்ட் சாதன பிராண்டாக, OPPO நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம் புதுமைகளின் Numero Uno ஆக உருவெடுத்துள்ளது இந்நிறுவனம். 5ஜி தொழில்நுட்பம், ஸ்மார்ட்போன்களின் சிறப்பான செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் அதிக கவனம் செலுத்துகிறது ஒப்போ நிறுவனம். அதேபோல் தொழில்துறை முன்னணி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்துகிறது இந்த ஒப்போ நிறுவனம். அண்மையில் நடைபெற்ற நிகழ்சிகளில் இந்நிறுவனம் வெளியிட்ட வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
At #OPPOINNODAY20,OPPO Positions itself on Cusp of Glorious Past & an Exciting Future of Technology: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X